Friday, 31 January 2025

Score Jabuary 2025 , Feb




 Score

Many a time I have trued to make a monthly performance review based on your replies to questions
I could not continue it due to various problems
So this time I am trying a simplified method====
Mentioning the names of those who sent first correct answers
In no way others are less important
In fact I welcome even relevant but not correct answers
Just to simplify my work and maintain continuity I am trying this new method
Every one of you I take as a VIP only
Please continue your support
Score
Jabuary 2025
Quran 5 Questuins
M/S
Raviraj 2
Hasan Ali 1Peer Raja 1Khatheeb Mamuna Lebbai
Tamil 4 q
Thallath ,Sivasubramaniyan Shireen Faruk Hasan Ali each 1
English 4q
Sirajuddin Hasan Ali Thallath Somasekar each one
01022025
Sherfuddin P


Score
Mentioning the names of those who sent first correct answers
only

Score
February 2025
Quran 4 Questions
M/S
sirajuddin 3 Hasan Ali 1
Tamil 4 q
Thallath HasanAli Kumarasamy Velavan
each 1
English 4q
Thallath Somasekar Sirajuddin Hasan Ali each one
Thanks to one and all
28022025 Fri
Sherfuddin P


Thursday, 30 January 2025

திருமறை குரான் 111:2 31012025 வெள்ளி

 



திருமறை குரான்

111:2
31012025 வெள்ளி
திரு மறையில் எந்தப் பகுதியில் வரும் வசனம் இது ?
அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
விடை
சூரா111 லஹப் .(நெருப்பு).
வசனம் 2
. அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. 111:2
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்:
சகோ
ரவி ராஜ் -
முதல் சரியான விடை
சிறப்புப்பாராட்டுகள்
கத்தீபு மாமூனா லெப்பை
ஷர்மதா
ஷிரீன் பாரூக்
தல்லத் &
ஹசன் அலி
பங்கெடுத்த சகோ பீர் ராஜா (2:79) வுக்கு நன்றி
விளக்கம
அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.
PlayCopyWordByWord111:2111:2. அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
PlayCopyWordByWord111:3
1:111:3. விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் புகுவான்.
PlayCopyWordByWord111:4
: ۚ‏111:4. விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ -
PlayCopyWordByWord11111:5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் இருக்கும்; அதனால், அவளும் அழிவாள்
தனி ஒருவரை பெயர் குறிப்பிட்டு இறைவன் சபிப்பது திரு மறையின் இந்த சூராவில் மட்டும்தான்
பல வகைகளில் நபி பெருமான் (ஸல்) அவர்களின் நெருங்கிய உறவினர் ஆன அ பூ லஹப் உறவை முறித்து பாசத்தை மறந்து இஸ்லாமிய எதிர்ப்பையும் நபி ஸல் அவர்களுக்கு முடிந்த வரை தீங்கு செய்வதையும் தன் முழு நேரப் பணியாக மேற்கொண்டான்
அவன் துணைவியும் இதில் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்
கருணையே உருவான இறைவனுக்கே பொறுக்க முடியாத அளவுக்கு இந்தக் கொடுமைகள் அதிகரித்தூ வந்தன
இந்த சூரா அருளபட்ட பின் பல ஆண்டுகள் அபூலஹப் துணைவி இருவரும் உயிர் வாழந்தும் அவர்கள் திருந்தவில்லை
இறைவனின் வாக்கு மெய்யாகி விட்டது
கடுமையான சொல் ,பொருளைக் கொண்ட இந்த சுறாவை சிலர் ஓதாமல் தவிர்ப்பது தவறு
திரு மறையின் ஒவ்வொரு வழுத்தும் சொல்லும் இறைவன் அருளிய கொடை
இதில் தரம் பிரித்துப் பார்க்க நமக்கு எந்த உரிமையும் கிடையாது
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
01 ஷாபான் (😎 1446
31012025 வெள்ளி
சர்புதீன் பீ

Tuesday, 28 January 2025

மண்ணின் சுவை மூன்றாம்(நிறைவுப்) பகுதி 29012025புதன்


 மண்ணின் சுவை மூன்றாம்(நிறைவுப்) பகுதி

29012025புதன்
நாக்கு நீளம் என்று சொன்னாலும் சொன்னேன்
அனுமார் வால் போல நீண்டு கொண்டே போகிறது
தொடர்வது மலையாள மண்ணின் சுவை
திருர் மல்லப்புரம் மாவட்டம் நிறைய முஸ்லிம்கள் நட்புடன் பழகுவார்கள்
நாங்கள் இருந்த பகுதியில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் எங்களுக்கு அழைப்பு வந்து விடும்
அதிகம் மசாலா சேர்க்காமல் சுவையாக சமைப்பது சிறப்பு இதோடு
அரிசி மாவில் எண்ணெய் சேர்க்காமல் சுடும் பத்ரி , மீனை அவித்து பொரிப்பது
மத்தி மீன் வறுவல் ,குழம்பு டன் புரோட்டா அந்தப்பகுதியின் சிறப்பு
KNS ஒரு மிகப்பெரிய கயிறு வணிக நிறுவனம் – தமிழ நாட்டினர் அடிக்கடி சுவையான பிரியாணி விருந்து வைப்பார்கள்
சாப்பிடுவதற்கு முன் ஒரு கருப்புத் தேநீர் கொடுப்பார்கள் – நல்ல சுவை
திருச்சி என்றால் நாவில் நிற்பது மைக்கேல் ஐஸ் கிரீம் – குறைந்த விலை நிறைவான சுவை
இப்போதும் திருச்சிக்குப்போனால் அந்தக் கடைக்கு கால்கள் போய்விடும்
திருச்சியில் நாங்கள் குடி யிருந்த வீட்டு உரிமையாளர் வீட்டிள எல்லோரும் மிக நட்பாக இருப்பார்கள்
ஆடி மாதம் அசைவம் சாப்பிட மாட்டார்கள்
அதற்கு முதல் நாள் ஒரு 100% அசைவ விருந்து உண்பார்கள்
எங்களுக்காக ஹ லால் கறி . கோழி வாங்கி சமைத்து நிறையக் கொடுத்து விடுவார்கள்
உணவின் சுவையை விஞ்சி நிற்கும் அன்பு
குறைநத விலையில் சுவையான சத்தான உணவு வட மாநிலங்களில்
கனலும் அடுப்புக்கு உள்ளிருந்து ரொட்டியை எடுத்து சுடச் சுடககொடுப்பது சிவான் பீகாரில்
அளவில்லாமல் ரொட்டியும் சோறும் 1 ½ ரூபாய்க்கு
விடுமுறை நாட்களில் பாணி பூரி விற்கும் ஒரு சிறிய கடைக்குப் போவோம் . அங்கும் எவ்வளவு சாப்பிட்டாலும்1 ½ ரூபாய்க்கு மேல் போகாது
சண்டிகர் இந்தியா காபி ஹவுஸ் கறி தோசை , குறைந்த விலையில் மனதும் வயிறும் நிறையும் ஐஸ் கிரீம் சுவை இன்றும் மனதில்
பஞ்சாப் -சுவை மாநிலம் என்றே சொல்லலாம்
ஆலு டிக்கி , பிரட் பக்கோரா
மக்கி ரொட்டி மக்கி சப்ஜி
-மிகப்பெரிய லவ்லீ இனிப்பகம் -மிகப் பல உயர்ந்த இனிப்பு வகைகள் குறைந்த விலை
குலாப் ஜாமூன் , அல்வாக்கள ,பலூடா , ரச மலாய் ர ச குல்லா
இன்னும் பலபல
ஒரு முஸ்லிம் கடையில் கறி . கோழி கறி வாங்குவேன்
கோழி புதிதாக அறுத்து உடனே சுத்தம் செய்து கொடுப்பார்
இளம் சூட்டோடு சமைத்தால் அது தனி ஒரு சுவை
பத்தி டீ -ஒரு பெரிய குவளை நிறைய காய்ச்சிய பால் . அதில் மிகச் சிறிதளவு தேயிலை நீர் கலந்து கொடுப்பது பஞ்சாபின் தனிச் சிறப்பு
லூதியான – ஒரு பெரிய தரை கீழ் உணவகம் =படி இறங்கும்போதே
சுத்தமான நெய் வாசம் மூக்கைத் துளைக்கும்
மிகத் தரமான உணவு வழக்கம் போல குறைந்த விலையில்.
பல்லப் கார் (ஹரியானா) வங்கியின் அருகில் ஒரு சிறிய உணவகம்
ஒரு ரூபாய்க்கு தட்டு நிறைய மிகச் சுவையான காரட் சப்ஜி
ஜம்முவில் அருமையான சுவையில் காஷ்மீரி புலாவ்
ராஜஸ்தான் ஜோத்பூரில் கடைக்காரரின் எச்சரிக்கையை மீறி சாப்பிட்ட மிர்ச்சி போண்டா வின் உறைப்பு – இப்போது கூட கண்ணில் நீர் வருகிறது
மங்களபட்டி – நண்பர் குப்புசாமி கொடுத்த விருந்து – எங்களுக்காக
ஹ லால் கறி . கோழி வாங்கி ஒரு முஸ்லிம் சுமையால் காரர் ச மையல்
இங்கும் உணவின் சுவையை விஞ்சி நிற்கும் அன்பு
ஏறுவடி – நிறைய முஸ்லிம்கள் உள்ள ஊர்
பெரும்பாலான விருந்துகளுக்கு அழைப்பு வரும்
வீட்டுக்கு சாப்பாடு கொடுத்து விடும் வழக்கமும் உண்டு
நெய் சோறு குருமா நல்ல சுவை
வெளி நாடு செல்பவர்களுக்கு சுவையான ஓட்ஸ் மாவும் ,பெரிய அளவு சுருள் பணியாரமும் கொடுத்து விடுவார்கள்
வாணியம்பாடி இதுவும் முஸ்லிம் ஊர்
வங்கிக்கு எதிரே ஒரு உணவகம் பிரியாணி , ரொட்டி குருமா கோழி கறி . உணவுகள் கறி சமோசா எல்லாம் தரமாக சரியான விலையில்
வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் வங்கியின் விரிவாக்ககிளை திறக்கபட்டது
அதை ஒட்டி அங்கு ஒரு விருந்து கொடுத்தார்கள்
பொது மேலாளர்திரு ஜார்ஜ் ஜோசப் பிரியாணியை மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்
அடுத்து சென்னையில் என மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட திரு ஜார்ஜ் ஜோசப் பிரியாணியை மிகவும் விரும்பிச் சுவைத்துப்பாராட்டினார்
முட்டை லாப்பா கடப்பா -கடலூர் சிறப்புகள்
மகன் பைசலின் புது வீடு புகும் விழாவுக்கு சென்னையில் இருந்து சமயலரை வரவழைத்தோம்
சைவம் அசைவம் இரண்டுமே மிகச் சிறப்பாக இருந்ததாக வந்தவர்கள் பாராட்டினார்கள்
குறிப்பாக சம்பந்தி ஊரார் பலர் இதுதான் பிரியாணி என்று பாராட்டியதாக அறிந்தேன்
சம்பந்தி ஊரான அடியக்க மங்களத்தில் நெய் சோறு குருமா தா லிச்சா நல்ல சுவை
நாலு பேர் ஒரே தட்டில் சாப்பிடும் சகன் சாப்பாட்டு முறை அங்கு இன்னும் ஓரளவு நடைமுறையில் இருக்கிறது
நாணகத்தான். இஞ்சிக்கொத்து போன்ற பல பேர்களில் பலகாரங்கள் செயவார்கள்
காரைக்காலில் முர்த்தபாவும் ஒருவகை அல்வாவும் சிறப்பு உணவுகள்
ஊர் பல சுற்றி இப்போது கர்நாடகா கூர்க் பகுதியில் உள்ள குட் டா
இயற்கை எழில் கொஞ்சும் சிறிய ஊர் ஆனால் நிறைய பெரிய காப்பித் தோட்டங்கள்
தோட்ட உரிமையாளர்கள் வீட்டுக்குப் போனால் மிக உயர்தர காப்பி கொடுபபார்கள் அது மிக light ஆக இருக்கும்
சாதாரண காப்பி நல்ல சுவையாக இருக்கும்
கர்நாடகா என்றாலும் நிறைய மலையாளிகள் ஐருப்பதால் உணவின் சுவையும் அதை ஒட்டியே இருக்கும்
பணி ஓய்வை முன்னிட்டு வங்கி ஊழியர்களுக்கு ஒரு காப்பி தோட்ட உரிமையாளரிடம் சொல்லி அவரது இல்லத்தங்கல் விடுதியி;ல் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்தேன்
இவ்வளவு சுவையான உணவு (சைவம் /அசைவம் ) இந்த ஊரில் கிடைக்கிறதா என்று எல்லோரும் நன்றாக சாப்பிட்டார்கள்
Home stay இல்லத்தங்கல் கட்டணம் குறைவாக இருக்கும் என்ற எண்ணத்தில் பல வங்கிக்கிளை ஊழியர்கள் தொலைபேசியில் கேட்பார்கள்
ஆனால் (15 ஆண்டுகளுக்கு முன்பே ) ஒருவருக்கு ஒரு நாளைக்கு தங்கல், உணவுக்கு குறைந்தது 1000 ரூபாய்
நாம் விரும்பும் உணவை சமைத்துக் கொடுப்பார்கள்
ஆம்பூரில் துவங்கி குட் டா வரையில் உள்ள மண்ணின் சுவைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்
தொடர்ந்து சுவையான உணவை நிறைவாக கொடுக்கும் இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி
பெற்றோர் , உடன் பிறந் தோர் ,துணைவி ,அவர் குடும்பத்தினர்
மக்கள் மருமக்கள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
ஒரு வழியாக மண்ணின் சுவை நிறைவு பெறுகிறது
இறைவன் நாடினால் நாளை குரானில் சிந்திப்போம்
2901 2026 புதன்
சரபுதீன் பீ

Monday, 27 January 2025

English QUIZ Philemaphobia 28012025 Tue

 



English QUIZ

Philemaphobia
28012025 Tue
A word with 13 letters
Initial letter P
13th letter Is first vowel including which the word has 6 vowels
The word indicates a lovely fear
What is that word?
Answer
Philemaphobia =
Philemaphobia is the fear of kissing.
It's common in young people and those who have little experience kissing.
Symptoms Fear of doing something wrong and Mild to moderate anxiety.
Treatment
• Gaining experience can help the anxiety dissipate
A therapist can help with the phobia
Greetings and Congratulations to
Mr. Somasekar
The only one to have sent correct answer
Philophobia (Fear of love) is the answer sent by M/S
AiR Viswanaathan Ganesa Subramaniam
Shireen Faruk Papti and Sharmatha
(11 letters, 5 vowels)
Thanks to
Mr. Venkatesan for attempting
Let us meet tomorrow by His Grace
28012025 Tue
SherfuddinP

Saturday, 25 January 2025

திரைப்பாடல் புதிர் 26012025 தோணி / old

 

திரைப்பாடல் புதிர்

 

விடைகள்

 

உடன் பிறப்புகளுக்கு

 

பாட்டின் இடையில் வரும் சொற்கள் கீழே காண்பது

என்ன பாடல் ? என்ன படம் >

ஒற்றுமை என்ன ?

பெருமளவில் சரியான விடை அளித்து உற்சாகம் ஊட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

குழு நிர்வாகிகளுக்கு நன்றி – புதிரை வெளியீட்டு தொடர்ந்து எழுத உற்சாகம் அளித்ததற்காக

 

ஒன்றிரண்டு தவிர மற்ற எல்லா வினாக்களுக்கும் முழுமயான விடைகள் வந்து விட்டன

ஒற்றுமை என்ன என்பதையும் சொல்லி விட்டீர்கள்

 

என் விடை இதோ

1 எத்தனை இரவு கண்டாய் என்ன நீ உறவு ##கண்டாய்மூ

த்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே

அரங்கேற்றம்

2 மேனியைப் பார்த்தால் ஞானியும் சரணம்

ஆரம்ப காலத்தில் அது இருக்கும்

அரங்கேற்றம்

3 தேவனின் சந்நிதிதேவியின் நிம்மதி

 

ஆலயம்ஆகும் மங்கை மனது

சுமதி என் சுந்தரி

 

4 நெஞ்சமெ னும் வீணை பாடுமே தோடி

கல்யாண மாலை  கொண்டாடும் பெண்ணே

புதுப்புது அர்த்தங்கள்  

5 அம்மான் வீட்டு பெண்ணானாலும்சும்மா சும்மா கிடைக்குமா..

தூக்கணங்குரவி க்கக்கூடு

வானம்பாடி

 

6 பூவில் பிறந்ததுகண்ணழகு.

அவளுக்கென்ன அழகிய முகம்

சர்வர் சுந்தரம்

 

7தேனில்ஆடும்திராட்சை நீயே

ஹேய் பாடல் ஒன்று

பிரியா

 

8 இதழோரம் தேனும் பாய

உனக்காகவா நான் எனக்காகவா

செல்வம்

 

 

ஒற்றுமை

படப்பிடிப்பு  , பாடல் பதிவு ,  வானொலியில் பாடுவது போன்ற காட்சிகள்

 

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

தமிழ் [மொழி]அறிவோம் செவ்வி 26012025 ஞாயிறு

 



தமிழ் [மொழி]அறிவோம்

செவ்வி
26012025 ஞாயிறு
மூன்றே எழுத்தில் ஒரு சொல்
பொருள்கள் பலப்பல
ஒரு சில
அழகு
நேர்மை
நேர்காணல்
முதல் எழுத்து வல்லின எகரம் (குறில் )
மற்ற இரண்டும் இடையினம் அதில் ஒன்று ஒற்று
ஐம் பொறிகளில் ஒன்று போல தோன்றும் அந்தச் சொல் என்ன?
விடை
செவ்வி
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ ஹசன் அலி
முதல் சரியான விடை
சோமசேகர்&
சிவசுப்ரமணியன்
முயற்சித்த
சகோ சீராஜூதீனுக்கு நன்றி
விளக்கம்
செவ்வி- பொருள்
வளமை அழகுநேர்மை
பேட்டி நேர்காணல்
செவ்வி(உ)
வளமான
அழகான
நேர்மையான
செவ்வி(வி)
அறிந்து
நுகர்ந்து .
(இலக்கியப் பயன்பாடு)
• பொடிந்தநின் செவ்வி காட்டுஎனப் பலவும் (பொருள்: அழகு, புறநானூறு)
• மலரினு மெல்லிது காமஞ் சிலரதன் செவ்வி தலைப்படு வார் (பொருள்: நுகர்ந்து, அறிந்து, திருக்குறள்)
• அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் (பொருள்: வளமையானவன், திருக்குறள்) ( அவ்விய என்பது ஔவிய என்பதன் மரூவு
இறைவன் நாடினால் நாளை
ஆங்கிலத்தில்
சிந்திப்போம்
௨௬ ௦௧ ௨௦௨௫
26012025 ஞாயிறு
சரபுதீன் பீ

Thursday, 23 January 2025

திருமறை குரான் 36:68 24012025 வெள்ளி

 



திருமறை குரான்

36:68
24012025 வெள்ளி
----------(சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகிறோம்---------
திரு மறையில் எந்த வசனத்தின் பகுதி இது
விடை
சூரா 36 யாசீன
வசனம் 68
நாம் எவரையும் அதிக நாள்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகிறோம். (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா(36:68)
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர் :
சகோ
கத்தீபு மாமூனா லெப்பை
முதல் சரியான விடை
பீர் ராஜா
விளக்கம
முதுமையில் இறைவன் மனிதனை குழந்தை போல மாற்றுகிறான்
நடக்க . நடமாட, உண்ண . உடுக்க என எல்லா செயல்களுக்கும் பிறர் உதவியை நாட வேண்டியது அவசியம் ஆகிவிடு கிறது
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
23 ரஜப் ;7; 1446
24012025 வெள்ளி
சர்புதீன் பீ

Tuesday, 21 January 2025

மண்ணின் சுவை இரண்டாம் பகுதி ] 22012025புதன்





 மண்ணின் சுவை இரண்டாம் பகுதி ]

22012025புதன்
இன்னும் பள்ளிப் பருவமே கடக்க வில்லை
நேரம் நீளம் கருதி இத்துடன் முக்கால் )
இல்லை அரை (;)இல்லை கால்புள்ளி (,)வைக்கிறேன்
இறைவன் நாடினால் அடுத்த புதன் கிழமை மண்ணின் சுவை
தொடரும என்று சொ ல்லியிருந்தேன்
தொடரும் முன்
எங்கள் வீட்டு சமையல் சுவை பற்றி முன்பேவிரிவாக எழுதினேன்
எங்கள் அம்மா,துணைவியின் அம்மா இருவரு ம் சமையலில் சிறந்த வல்லுனர்கள்
இவர்கள் ரசம் வைத்தால் கூட ஊரே மணக்கும் என்பார்கள்
அப்படி ஒரு கைப்பக்குவம்
இது அப்படியே என் உடன்பிறப்புகள் துணைவி மகள் மருமகள் எல்லோருக்கும் வந்ததால் இறைவன் அருளால் சுவையான உணவு நிறைவாகக் கிடைக்கிறது
எனவே எந்த சிறப்புச் சுவையையும் தேடி நான் எங்கும் போவதில்லை
அத்தாவின் பணி ,எனது பணியினால் நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்கு கிடைக்கும் வேறுபட்ட உணவு சுவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
விழுப்புரத்தை அடுத்து அத்தாவுக்கு மதுரைக்கு மாறுதல் . அது குறுகிய காலப்பணி என்பதால் உடன் பிறப்புகள் இருவரும் நானும் திருப்பத்தூரில் பெரியத்தா வீட்டில் தங்கிப்படித்தோம்
முதல் முறையாக பெற்றோரை விட்டுப் பிரிவு . அதை சிறிதும் உணராத அளவுக்கு பெரியத்தா வீட்டில் பாசமழை
வெளியே அதிகம் சாப்பிட்டுப் பழக்கம் இல்லாத எனக்கு அங்கு மாலையில் தேநீர் விடுதியில் சாப்பிடும் ஆட்டுக்கால கேக்கும் (சைவம்தான் –உருவத்தை வைத்து அப்படி ஒரு பெயர்) தேனீரும் மிகச் சுவையாகத் தெரிந்தன
பிறகு காரைக்குடி -பாம்பே ஆனந்த பவன் கீரைப் பக்கோடா , சிறிய இனிப்பகங்களில் பிறை வடிவில் அடுக்கி வைடக்திருக்கும் பால்கோவா , எண்ணெய் செக்கில் கிடைக்கும் அறைகுறையாக அறைத்த எள் கருப்பட்டி கலவை , பெட்டிக்கடை பாய் கொடுக்கும் முறுக்கு எல்லாம் இன்னும் நாவில் மனதில்
தெருவில் தள்ளுவண்டியில் கிடைக்கும் இனிப்பு கூட நல்ல சுவையாக இருக்கும்
செட்டி நாடு அல்லவா !
கோவையில் புதிய அறிமுகம் ஸ்டேட் ஐஸ் – சிறிய வண்டியில் பல விலையில் பல வகை எல்லாமே நல்ல சுவை
வீட்டுக்கு அருகில் மிகப்பெரிய பால் பண்ணை – அங்கு ஐஸ் கிரீம் நல்ல சுவை
கோவையில் இருந்து நெல்லை – ஒரு தலை கீழ் மாற்றம் எனலாம்
மொழி , உடை ,தட்ப வெப்பம் –தமிழ் நாட்டுக்குள்ளேயே எத்தனை மாறுபாடுகள்
செட்டிநாடு போல நெல்லையும் பல சிறப்புச் சுவைகள் கொண்டது
- பக்கோடா போலவே இருக்கும் வெங்காய வடகம், சொதி ,இஞ்சித் துவையல் , நெய் சோறு, குருமா தலீ ச் சா, தாஜ் ரொட்டி குழம்பு ,கறி சமோசா – நாவில் நீர் ஊற வைக்கும் சுவைகள்
- சிறிய உணவகங்களில் கூட சுவையான ரொட்டி குருமா – சைவம் அசைவம் இரண்டும் கிடைப்பது நெல்லையின் சிறப்பு
அடுத்து கேரளம் = திருர் –
நாக்கு நீளம் என்று சொன்னாலும் சொன்னேன்
அனுமார் வால் போல நீண்டு கொண்டே போகிறது
மேலும் புதிய தமிழ் எழுத்துரு (f o n t ) இன்னும் மு ழுதாகப் பழக்கத்துக்கு வரவில்லை
அதனால் இப்போதைக்கு ஒரு அரை அல்லது முக்கால் புள்ளி வைத்து விட்டு இறைவன் அருளால் அடுத்த புதனில் நிறைவு செய்ய முயற்சிக்கிறேன்
இறைவன் நாடினால் நாளை குரானில் சிந்திப்போம்
2201 2026 புதன்
சரபுதீன் பீ

Monday, 20 January 2025

English QUIZ Poet Laureate 21012025 Tue






 English QUIZ

Poet Laureate
21012025 Tue
Shakespear, Keats, Wordsworth , Shelly, and Robert Browning
are a few of the poets we come across in school and college days
Among these, Wordsworth has a special distinction
What is yhat ?
Answer
Poets Laureate
Greetings and Congratulations to those who sent correct answers:
Rr.Thallath the only respondent with correct answer
Thanks to M /S Raviraj, Somasekar
Franklin Selvakumar hasan Ali and Shireen Faruk
for participation
Explanation
A poet laureate is a poet who is appointed by a government or organization to represent a region or group. The title is usually given to a poet whose work is considered to be of national significance
• William Wordsworth was poet laureate during 1843–50
Let us meet tomorrow by His Grace
21012025 Tue
SherfuddinP

Saturday, 18 January 2025

தமிழ் [மொழி]அறிவோம் தறி தரி 19012025 ஞாயிறு






 தமிழ் [மொழி]அறிவோம்

தறி தரி
19012025 ஞாயிறு
இரண்டே எழுத்தில் ஒரு சிறிய சொல்
இரண்டுமே வல்லினம்
இரண்டாவது எழுத்து இகரம் (குறில்)
ஆடைக்கு தொடர்பு உள்ள சொல்
இரண்டாவது எழுத்து இடை இனமானால் வேறு பொருள்
அதுவும் ஒரு வகையில் ஆடைக்கு தொடர்பு உள்ள சொல்
என்ன அந்தச் சொல் ?
விடை
தறி தரி
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன் பாரூக்
முதல் சரியான விடை
ஹசன் அலி
தல்லத் [காதி காவி]
சோமசேகர் &
சிவசுப்ரமணியன்
விளக்கம்
தறி என்பது, பருத்தி, பட்டு போன்ற நூல் இழைகளைக் கொண்டு துணி நெசவு செய்யப் பயன்படும் இயக்கியைக் குறிக்கும். தறி, ஆங்கிலத்தில் 'loom' என்று அழைக்கப்படுகிறது.
தரி என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு:
அணிதல்
• நிறுத்துதல், அடைதல், ஆகியவற்றைக் குறிக்கும் சொல்
• ஒரு கை அல்லது கால் இயக்கத்தில் இயங்கும், ஒரு தண்டால் இயங்கும் சிறிய உள்நாட்டு நூற்பிழியும் இயந்திரம்
• தரி கஞ்சி என்பது ஒரு உணவு வகை
தரி என்ற சொல்லின் பொருள்கள்: நிறுத்துதல் - பேருந்து தரித்தல், அடைதல் - கர்ப்பம் தரித்தல், அணிதல் - மோதிரம் தரித்துக் கொண்டாள்.
இறைவன் நாடினால் நாளை
ஆங்கிலத்தில்
சிந்திப்போம்
௧௯ ௦௧ ௨௦௨௫
19012025 ஞாயிறு
சரபுதீன் பீ

Thursday, 16 January 2025

திருமறை குரான் 36:80 17012025 வெள்ளி

 



திருமறை குரான்

36:80
17012025 வெள்ளி
“பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே;-----------
திரு மறையில் எந்த வசனத்தின் பகுதி இது ?
விடை
சூரா 36 யாசீன
வசனம் 80
“பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.(36:60)
சரியான விடை எழுதி வாழ்த்து வாராட்டுப் பெறுவோர் :
சகோ ரவிராஜ்
சிறப்புப்பாராட்டுகள்
முதல் சரியான விடை
ஹசன்அலி
சீராஜூதீன்
தல்லத்
ஷர்மதா
பீர் ராஜா &
ஷிரீன் பாரூக்
விளக்கம
எலிமையாகத் தோன்றும் இந்த இறைவசனத்துக்கு சரியான ,பொருத்தமான விளக்கம் எனக்கு மிகப்பல ஆண்டுகளுக்கப்பின் இப்போகுதன் கிடைத்தது போல தெரிகிறது
ஊழித் தீயின் கோர தாண்டவம் ஒரு நாட்டில்
பச்சை மரங்கள் பற்றி எறிகின்றன
நெடிது நிற்கும் கட்டிடங்கள் நொடியில் தீப்பிடிது உருக்குலைகின்றன
காற்று எங்கிருந்து வருகிறது . தீ எப்படி திசை மாறுகிறது என்பது புரியாமல் திகைத்து நிற்கிறது படை
வாயடைத்து நிற்கிறது வானத்தின் கீழ் உள்ள மிகப்பெரிய ஆட்சி அதிகாரம்
காற்று ,மழை ,கதிரவன் ,நிலவு எல்லாம் என் கட்டுப் பாட்டில்தான் என்பதை இடித்து உரைக்கிறான் இறைவன்
இயற்கைச் சீற்றங்கள் போன்ற பலவற்றால் மனித இனங்கள் அழிக்கப் பட்ட நிகழ்வுகள் குரானில் பல இடங்களில் சொல்லபட்டு, நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறது திரு மறை
புனித நூல் என்று ஒதுவதோடு .நில்லாமல் .திருமறையை படித்து பகுத்து பொருள் உணர்ந்து நேர்வழி நடப்போம்
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
16 ரஜப் ;7; 1446
17012025 வெள்ளி
சர்புதீன் பீ