மண்ணின் சுவை மூன்றாம்(நிறைவுப்) பகுதி
29012025புதன்
நாக்கு நீளம் என்று சொன்னாலும் சொன்னேன்
அனுமார் வால் போல நீண்டு கொண்டே போகிறது
திருர் மல்லப்புரம் மாவட்டம் நிறைய முஸ்லிம்கள் நட்புடன் பழகுவார்கள்
நாங்கள் இருந்த பகுதியில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் எங்களுக்கு அழைப்பு வந்து விடும்
அதிகம் மசாலா சேர்க்காமல் சுவையாக சமைப்பது சிறப்பு இதோடு
அரிசி மாவில் எண்ணெய் சேர்க்காமல் சுடும் பத்ரி , மீனை அவித்து பொரிப்பது
மத்தி மீன் வறுவல் ,குழம்பு டன் புரோட்டா அந்தப்பகுதியின் சிறப்பு
KNS ஒரு மிகப்பெரிய கயிறு வணிக நிறுவனம் – தமிழ நாட்டினர் அடிக்கடி சுவையான பிரியாணி விருந்து வைப்பார்கள்
சாப்பிடுவதற்கு முன் ஒரு கருப்புத் தேநீர் கொடுப்பார்கள் – நல்ல சுவை
திருச்சி என்றால் நாவில் நிற்பது மைக்கேல் ஐஸ் கிரீம் – குறைந்த விலை நிறைவான சுவை
இப்போதும் திருச்சிக்குப்போனால் அந்தக் கடைக்கு கால்கள் போய்விடும்
திருச்சியில் நாங்கள் குடி யிருந்த வீட்டு உரிமையாளர் வீட்டிள எல்லோரும் மிக நட்பாக இருப்பார்கள்
ஆடி மாதம் அசைவம் சாப்பிட மாட்டார்கள்
அதற்கு முதல் நாள் ஒரு 100% அசைவ விருந்து உண்பார்கள்
எங்களுக்காக ஹ லால் கறி . கோழி வாங்கி சமைத்து நிறையக் கொடுத்து விடுவார்கள்
உணவின் சுவையை விஞ்சி நிற்கும் அன்பு
குறைநத விலையில் சுவையான சத்தான உணவு வட மாநிலங்களில்
கனலும் அடுப்புக்கு உள்ளிருந்து ரொட்டியை எடுத்து சுடச் சுடககொடுப்பது சிவான் பீகாரில்
அளவில்லாமல் ரொட்டியும் சோறும் 1 ½ ரூபாய்க்கு
விடுமுறை நாட்களில் பாணி பூரி விற்கும் ஒரு சிறிய கடைக்குப் போவோம் . அங்கும் எவ்வளவு சாப்பிட்டாலும்1 ½ ரூபாய்க்கு மேல் போகாது
சண்டிகர் இந்தியா காபி ஹவுஸ் கறி தோசை , குறைந்த விலையில் மனதும் வயிறும் நிறையும் ஐஸ் கிரீம் சுவை இன்றும் மனதில்
பஞ்சாப் -சுவை மாநிலம் என்றே சொல்லலாம்
ஆலு டிக்கி , பிரட் பக்கோரா
மக்கி ரொட்டி மக்கி சப்ஜி
-மிகப்பெரிய லவ்லீ இனிப்பகம் -மிகப் பல உயர்ந்த இனிப்பு வகைகள் குறைந்த விலை
குலாப் ஜாமூன் , அல்வாக்கள ,பலூடா , ரச மலாய் ர ச குல்லா
இன்னும் பலபல
ஒரு முஸ்லிம் கடையில் கறி . கோழி கறி வாங்குவேன்
கோழி புதிதாக அறுத்து உடனே சுத்தம் செய்து கொடுப்பார்
இளம் சூட்டோடு சமைத்தால் அது தனி ஒரு சுவை
பத்தி டீ -ஒரு பெரிய குவளை நிறைய காய்ச்சிய பால் . அதில் மிகச் சிறிதளவு தேயிலை நீர் கலந்து கொடுப்பது பஞ்சாபின் தனிச் சிறப்பு
லூதியான – ஒரு பெரிய தரை கீழ் உணவகம் =படி இறங்கும்போதே
சுத்தமான நெய் வாசம் மூக்கைத் துளைக்கும்
மிகத் தரமான உணவு வழக்கம் போல குறைந்த விலையில்.
பல்லப் கார் (ஹரியானா) வங்கியின் அருகில் ஒரு சிறிய உணவகம்
ஒரு ரூபாய்க்கு தட்டு நிறைய மிகச் சுவையான காரட் சப்ஜி
ஜம்முவில் அருமையான சுவையில் காஷ்மீரி புலாவ்
ராஜஸ்தான் ஜோத்பூரில் கடைக்காரரின் எச்சரிக்கையை மீறி சாப்பிட்ட மிர்ச்சி போண்டா வின் உறைப்பு – இப்போது கூட கண்ணில் நீர் வருகிறது
மங்களபட்டி – நண்பர் குப்புசாமி கொடுத்த விருந்து – எங்களுக்காக
ஹ லால் கறி . கோழி வாங்கி ஒரு முஸ்லிம் சுமையால் காரர் ச மையல்
இங்கும் உணவின் சுவையை விஞ்சி நிற்கும் அன்பு
ஏறுவடி – நிறைய முஸ்லிம்கள் உள்ள ஊர்
பெரும்பாலான விருந்துகளுக்கு அழைப்பு வரும்
வீட்டுக்கு சாப்பாடு கொடுத்து விடும் வழக்கமும் உண்டு
நெய் சோறு குருமா நல்ல சுவை
வெளி நாடு செல்பவர்களுக்கு சுவையான ஓட்ஸ் மாவும் ,பெரிய அளவு சுருள் பணியாரமும் கொடுத்து விடுவார்கள்
வாணியம்பாடி இதுவும் முஸ்லிம் ஊர்
வங்கிக்கு எதிரே ஒரு உணவகம் பிரியாணி , ரொட்டி குருமா கோழி கறி . உணவுகள் கறி சமோசா எல்லாம் தரமாக சரியான விலையில்
வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் வங்கியின் விரிவாக்ககிளை திறக்கபட்டது
அதை ஒட்டி அங்கு ஒரு விருந்து கொடுத்தார்கள்
பொது மேலாளர்திரு ஜார்ஜ் ஜோசப் பிரியாணியை மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்
அடுத்து சென்னையில் என மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட திரு ஜார்ஜ் ஜோசப் பிரியாணியை மிகவும் விரும்பிச் சுவைத்துப்பாராட்டினார்
முட்டை லாப்பா கடப்பா -கடலூர் சிறப்புகள்
மகன் பைசலின் புது வீடு புகும் விழாவுக்கு சென்னையில் இருந்து சமயலரை வரவழைத்தோம்
சைவம் அசைவம் இரண்டுமே மிகச் சிறப்பாக இருந்ததாக வந்தவர்கள் பாராட்டினார்கள்
குறிப்பாக சம்பந்தி ஊரார் பலர் இதுதான் பிரியாணி என்று பாராட்டியதாக அறிந்தேன்
சம்பந்தி ஊரான அடியக்க மங்களத்தில் நெய் சோறு குருமா தா லிச்சா நல்ல சுவை
நாலு பேர் ஒரே தட்டில் சாப்பிடும் சகன் சாப்பாட்டு முறை அங்கு இன்னும் ஓரளவு நடைமுறையில் இருக்கிறது
நாணகத்தான். இஞ்சிக்கொத்து போன்ற பல பேர்களில் பலகாரங்கள் செயவார்கள்
காரைக்காலில் முர்த்தபாவும் ஒருவகை அல்வாவும் சிறப்பு உணவுகள்
ஊர் பல சுற்றி இப்போது கர்நாடகா கூர்க் பகுதியில் உள்ள குட் டா
இயற்கை எழில் கொஞ்சும் சிறிய ஊர் ஆனால் நிறைய பெரிய காப்பித் தோட்டங்கள்
தோட்ட உரிமையாளர்கள் வீட்டுக்குப் போனால் மிக உயர்தர காப்பி கொடுபபார்கள் அது மிக light ஆக இருக்கும்
சாதாரண காப்பி நல்ல சுவையாக இருக்கும்
கர்நாடகா என்றாலும் நிறைய மலையாளிகள் ஐருப்பதால் உணவின் சுவையும் அதை ஒட்டியே இருக்கும்
பணி ஓய்வை முன்னிட்டு வங்கி ஊழியர்களுக்கு ஒரு காப்பி தோட்ட உரிமையாளரிடம் சொல்லி அவரது இல்லத்தங்கல் விடுதியி;ல் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்தேன்
இவ்வளவு சுவையான உணவு (சைவம் /அசைவம் ) இந்த ஊரில் கிடைக்கிறதா என்று எல்லோரும் நன்றாக சாப்பிட்டார்கள்
Home stay இல்லத்தங்கல் கட்டணம் குறைவாக இருக்கும் என்ற எண்ணத்தில் பல வங்கிக்கிளை ஊழியர்கள் தொலைபேசியில் கேட்பார்கள்
ஆனால் (15 ஆண்டுகளுக்கு முன்பே ) ஒருவருக்கு ஒரு நாளைக்கு தங்கல், உணவுக்கு குறைந்தது 1000 ரூபாய்
நாம் விரும்பும் உணவை சமைத்துக் கொடுப்பார்கள்
ஆம்பூரில் துவங்கி குட் டா வரையில் உள்ள மண்ணின் சுவைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்
தொடர்ந்து சுவையான உணவை நிறைவாக கொடுக்கும் இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி
பெற்றோர் , உடன் பிறந் தோர் ,துணைவி ,அவர் குடும்பத்தினர்
மக்கள் மருமக்கள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
ஒரு வழியாக மண்ணின் சுவை நிறைவு பெறுகிறது
இறைவன் நாடினால் நாளை குரானில் சிந்திப்போம்
2901 2026 புதன்
சரபுதீன் பீ
No comments:
Post a Comment