தமிழ் [மொழி]அறிவோம்
செவ்வி
26012025 ஞாயிறு
மூன்றே எழுத்தில் ஒரு சொல்
ஒரு சில
அழகு
நேர்மை
நேர்காணல்
முதல் எழுத்து வல்லின எகரம் (குறில் )
மற்ற இரண்டும் இடையினம் அதில் ஒன்று ஒற்று
ஐம் பொறிகளில் ஒன்று போல தோன்றும் அந்தச் சொல் என்ன?
விடை
செவ்வி
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ ஹசன் அலி
முதல் சரியான விடை
சோமசேகர்&
சிவசுப்ரமணியன்
முயற்சித்த
சகோ சீராஜூதீனுக்கு நன்றி
விளக்கம்
செவ்வி- பொருள்
வளமை அழகுநேர்மை
பேட்டி நேர்காணல்
செவ்வி(உ)
வளமான
அழகான
நேர்மையான
செவ்வி(வி)
அறிந்து
நுகர்ந்து .
(இலக்கியப் பயன்பாடு)
• பொடிந்தநின் செவ்வி காட்டுஎனப் பலவும் (பொருள்: அழகு, புறநானூறு)
• மலரினு மெல்லிது காமஞ் சிலரதன் செவ்வி தலைப்படு வார் (பொருள்: நுகர்ந்து, அறிந்து, திருக்குறள்)
• அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் (பொருள்: வளமையானவன், திருக்குறள்) ( அவ்விய என்பது ஔவிய என்பதன் மரூவு
இறைவன் நாடினால் நாளை
ஆங்கிலத்தில்
சிந்திப்போம்
௨௬ ௦௧ ௨௦௨௫
26012025 ஞாயிறு
சரபுதீன் பீ
No comments:
Post a Comment