Thursday, 9 January 2025

திருமறை குரான் 7:125 10012025 வெள்ளி

திருமறை குரான்
7:125
10012025 வெள்ளி
-------------நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தான் திரும்பிச் செல்வோம்; (எனவே இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை)" என்று கூறினார்கள்.
திரு மறையில் எந்த வசனத்தின் பகுதி இது
விடை
சூரா 7: அல் அராப் சிகரங்கள் வசனம்125
அதற்கு அவர்கள் "(அவ்வாறாயின்) நிச்சயமாக
நாங்கள் எங்கள் இறைவனிடம் தான் திரும்பிச் செல்வோம்; (எனவே இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை)" என்று கூறினார்கள்.7:125
சரியான விடை எழுதி வாழ்த்து வாராட்டுப் பெறுவோர் :
கத்தீபு . மாமூனா லெப்பை முதல் சரியான விடை
ஷர்மதா
தல்லத் &
பீர் ராஜா
விளக்கம
கொடுங்கோல் மன்னன் பிர் அவுனுக்கு அறிவுரை சொல்லி நல்வழிப்படுத்த இறைவன் ஆணைப்படி நபி மூசாவும் நபி ஹாரூனூம் வருகிறார்கள்
அவனோ அவர்களை அவமதித்து இறைவன் கொடுத்த சான்றுகள் என்ன என்று கேட்கிறான்
நபி மூஸா தன் கை தடியை கீழே வீச அது பெரிய பாம்பு ஆகி விடுகிறது
மூஸா ஒரு பெரிய சூனியக்காரர் என்ற எண்ணத்தில் அவரைத் தோற்கடிக்க நாட்டில் உள்ள திறமையான சூனியக்காரர்களை அழைக்கிறான்
அவர்கள் தங்கள் கை தடிகளை கீழே வீச அவை எல்லாம் பாம்பாக நெளிவது போல தோன்றி மூசாவை அச்சுறுத்த இறைவன் ஆணைப்படி அவர் தன் கை தடியை கீழே வீச அது பெரிய பாம்பு ஆகி மற்ற எல்லாப் பாம்புகளையும் விழுங்கி விடுகிறது
உண்மை, சத்தியம் வெளிப்பட்டது
இதை உணர்ந்த சூனியக்காரர்கள் உடனே தலையை தரையில் சாய்த்து ஏக இறைவனுக்கு ஸஜ்தா செய்கிறார்கள்
இதனால் சினம் கொண்ட பிரவுன் அவர்களை கொடூரமாக கொலை செய்வதாகச் சொல்கிறான்

மூஸா நபி பற்றி குரானில் மிகப்பல இடங்களில் வருகிறது
இங்கு சூரா 7 வசனம் 103 முதல் 125 வரை இந்த நிகழ்வு குறிப்பிடப் படுகிறது
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
09 ரஜப் ;7; 1446
10012025 வெள்ளி
சர்புதீன் பீ

No comments:

Post a Comment