Tuesday, 21 January 2025

மண்ணின் சுவை இரண்டாம் பகுதி ] 22012025புதன்





 மண்ணின் சுவை இரண்டாம் பகுதி ]

22012025புதன்
இன்னும் பள்ளிப் பருவமே கடக்க வில்லை
நேரம் நீளம் கருதி இத்துடன் முக்கால் )
இல்லை அரை (;)இல்லை கால்புள்ளி (,)வைக்கிறேன்
இறைவன் நாடினால் அடுத்த புதன் கிழமை மண்ணின் சுவை
தொடரும என்று சொ ல்லியிருந்தேன்
தொடரும் முன்
எங்கள் வீட்டு சமையல் சுவை பற்றி முன்பேவிரிவாக எழுதினேன்
எங்கள் அம்மா,துணைவியின் அம்மா இருவரு ம் சமையலில் சிறந்த வல்லுனர்கள்
இவர்கள் ரசம் வைத்தால் கூட ஊரே மணக்கும் என்பார்கள்
அப்படி ஒரு கைப்பக்குவம்
இது அப்படியே என் உடன்பிறப்புகள் துணைவி மகள் மருமகள் எல்லோருக்கும் வந்ததால் இறைவன் அருளால் சுவையான உணவு நிறைவாகக் கிடைக்கிறது
எனவே எந்த சிறப்புச் சுவையையும் தேடி நான் எங்கும் போவதில்லை
அத்தாவின் பணி ,எனது பணியினால் நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்கு கிடைக்கும் வேறுபட்ட உணவு சுவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
விழுப்புரத்தை அடுத்து அத்தாவுக்கு மதுரைக்கு மாறுதல் . அது குறுகிய காலப்பணி என்பதால் உடன் பிறப்புகள் இருவரும் நானும் திருப்பத்தூரில் பெரியத்தா வீட்டில் தங்கிப்படித்தோம்
முதல் முறையாக பெற்றோரை விட்டுப் பிரிவு . அதை சிறிதும் உணராத அளவுக்கு பெரியத்தா வீட்டில் பாசமழை
வெளியே அதிகம் சாப்பிட்டுப் பழக்கம் இல்லாத எனக்கு அங்கு மாலையில் தேநீர் விடுதியில் சாப்பிடும் ஆட்டுக்கால கேக்கும் (சைவம்தான் –உருவத்தை வைத்து அப்படி ஒரு பெயர்) தேனீரும் மிகச் சுவையாகத் தெரிந்தன
பிறகு காரைக்குடி -பாம்பே ஆனந்த பவன் கீரைப் பக்கோடா , சிறிய இனிப்பகங்களில் பிறை வடிவில் அடுக்கி வைடக்திருக்கும் பால்கோவா , எண்ணெய் செக்கில் கிடைக்கும் அறைகுறையாக அறைத்த எள் கருப்பட்டி கலவை , பெட்டிக்கடை பாய் கொடுக்கும் முறுக்கு எல்லாம் இன்னும் நாவில் மனதில்
தெருவில் தள்ளுவண்டியில் கிடைக்கும் இனிப்பு கூட நல்ல சுவையாக இருக்கும்
செட்டி நாடு அல்லவா !
கோவையில் புதிய அறிமுகம் ஸ்டேட் ஐஸ் – சிறிய வண்டியில் பல விலையில் பல வகை எல்லாமே நல்ல சுவை
வீட்டுக்கு அருகில் மிகப்பெரிய பால் பண்ணை – அங்கு ஐஸ் கிரீம் நல்ல சுவை
கோவையில் இருந்து நெல்லை – ஒரு தலை கீழ் மாற்றம் எனலாம்
மொழி , உடை ,தட்ப வெப்பம் –தமிழ் நாட்டுக்குள்ளேயே எத்தனை மாறுபாடுகள்
செட்டிநாடு போல நெல்லையும் பல சிறப்புச் சுவைகள் கொண்டது
- பக்கோடா போலவே இருக்கும் வெங்காய வடகம், சொதி ,இஞ்சித் துவையல் , நெய் சோறு, குருமா தலீ ச் சா, தாஜ் ரொட்டி குழம்பு ,கறி சமோசா – நாவில் நீர் ஊற வைக்கும் சுவைகள்
- சிறிய உணவகங்களில் கூட சுவையான ரொட்டி குருமா – சைவம் அசைவம் இரண்டும் கிடைப்பது நெல்லையின் சிறப்பு
அடுத்து கேரளம் = திருர் –
நாக்கு நீளம் என்று சொன்னாலும் சொன்னேன்
அனுமார் வால் போல நீண்டு கொண்டே போகிறது
மேலும் புதிய தமிழ் எழுத்துரு (f o n t ) இன்னும் மு ழுதாகப் பழக்கத்துக்கு வரவில்லை
அதனால் இப்போதைக்கு ஒரு அரை அல்லது முக்கால் புள்ளி வைத்து விட்டு இறைவன் அருளால் அடுத்த புதனில் நிறைவு செய்ய முயற்சிக்கிறேன்
இறைவன் நாடினால் நாளை குரானில் சிந்திப்போம்
2201 2026 புதன்
சரபுதீன் பீ

No comments:

Post a Comment