Tuesday, 7 January 2025

பூத்துக் குலுங்கும் நினைவுகள் 08012025 புதன்

 




பூத்துக் குலுங்கும் நினைவுகள்

08012025 புதன்
அரை நூற்றாண்டுகள் கடந்த படம் இது
அப்போது நான் கனரா வங்கி நெல்லை நகர்க்கிளையில் பணியில்இருந்தேன்
உடன் பணிபுரிந்தவர்களோடு எடுத்தது
இடமிருந்து வலமாக
உட்கார்ந்திருப்பவர்கள்
துரைராஜ் அடுத்த
I லட்சுமண் இருவரும் அதிகாரிகள்
நிற்பவர்களும் நானும் எழுத்தர்கள்
சுந்தரம் (KS)
சிவராம கிருஷ்ணன் (GSRK)
சுந்தரம் (GS)
GS எனது கல்லூரி வகுப்புத் தோழரும் கூட
அவரும் அதிகாரிகள் இருவரும் இப்போது இல்லை
KS GSRk நான் மூவருக்குள்ளும் நட்பு தொடர்கிறது
அலை பேசி உரையாடலோடு அவ்வப்போது சந்திப்பும் உண்டு
கல்லூரி வாழ்க்கை போல நெல்லை வங்கிப்பணி ஐந்தாண்டுகள் மிக இனிமையாக இருந்தன
மேலாளர் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அனைவரும் ஒரு குழுவாக
ஒரு குடும்பமாக இணைந்திருந்தோம்
இது அதிகாரிகள் வேலை இது மற்றவர் வேலை என்று பிரித்துப் பார்ததில்லை
எழுத்தர்களான நானும் GS சும் இணைந்துமேலாளரே வியந்து பாராட்டும் அளவுக்கு ஆய்வறிக்கைக்கு கூட (Inspectionகன report) reply முழுமையாக எழுதி விடுவோம்
நான் சொல்லச் சொல்ல. GS குண்டு குண்டாக தெளிவாக எழுதுவார்
ஐந்து மணிக்கெல்லாம் வெளியே வந்து விடுவோம்
ஒரு நண்பர் குழுவோடு
திரைப்படம் உணவு விடுதியில் சிற்றுண்டி காபி என மாலைப்பொழுது இனிமையாகக்
கடந்து விடும்
நெல்லை நகர் கிளையும்
அதற்கு முன் பணியாற்றிய உடன்குடி கிளையும் என் வங்கி அறிவை வளர்த்துக் கொள்ள அடித்தளமாக அமைந்தன
உடன்குடி சிற்றூர் கிளை என்பதால் அடிப்படை செய்திகள் பலவற்றை தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது
நெல்லை நகர் கிளை ஒரு நடுத்தர கிளை
அங்கு எல்லா வகையான கடன் டெப்பாசிட் கணக்குகளும் இருந்தன
இரண்ஞு கிளைகளிலும் உடன் பணியாற்றியவர்கள் வங்கி நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்களாகவும்
கற்றுத் தருபவர்களாவும் அமைந்தது இறைவன் அருள்
கமிஷனர் மகன்
வயதில் மிகவும் இளையவன்
ஓரளவு விவரம் தெரிந்தவன்
என்ற முறையில்
என் தெளிவற்ற கையெழுத்தை மறந்து எனக்கு சிறப்பு
இடம்
சுருக்கமாக
நிலவுகள் கூடி தரையினில் வாழ்ந்த பொற்காலம்
நெல்லை வாழ்க்கை.
வங்கிப் பணி பலமுறை- விரிவாக என் பயணக் கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன்
காரணம்
பிறப்ப முதல் பணி ஓய்வு வரை உள்ள அறுபதாண்டில் நான் நீண்ட காலம் வாழ்ந்தது நெல்லையில் மட்டும் தான்
அதோடு மிகப் பல முக்கிய நிகழ்வுகள் அங்குதான்
அதனால் நெல்லை என்ற மந்திரச் சொல் நினவலைகளை பொங்கி எழச்செய்யும்
அதில் அமிழ்ந்து விட்டால மீண்டு வருவதற்கு நீண்ட நேரம் ஆகும்
எனவே இந்தப் படத்தை அனுப்பி வைத்த GSRK க்கு நன்றி கூறி
இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
08012025 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment