மண்ணின் சுவை
15012025புதன்
நாக்கு கொஞ்சம் நீளம்தான் நமக்கு
உணவு விடுதியில் சாப்பாடு என்றால்
==இது ஒரு சாதாரண உணவு
கொஞ்சம் சிறப்பு உணவு என்றால் கூடுதலாக நெய் ,பருப்புப்பொடி வடை தயிர்
பரோட்டாவில்
நெய் பரோட்டா முட்டை பரோட்டா வீச்சு பரோட்டா பன் பரோட்டா
பொறிச்ச பரோட்டா இலை பரோட்டா இன்னும் எத்தனையோ
இட்டலி தோசை பொங்கல் உப்புமா வடை சட்னி சாம்பார் பொடி ரசம் புளிக்குழம்பு என எதை எடுத்தாலும் வகை வகையாகப் போகும்
அப்புறம் அசைவம் என்றால் அது ஒரு பெரிய பட்டியலாக நீளும்
எனவே இத்தோடு அதை விட்டு விட்டு தலைப்பைப் பார்ப்போம்
“மண்ணின் மணம் “ படித்திருக்கிறோம்
அதென்ன மண்ணின் சுவை !
திருநெல்வேலி என்றால் அல்வா சுவை
ஆம்பூர் என்றால் பிரியாணி சுவை நாவில் வருகிறதே
அதுதான் மண்ணின் சுவை
பல ஊர்களில் , மாநிலங்களில் வாழந்து ,பணி புரிந்து பல்வேறு உணவுகளை சுவைத்த அனுபவமும் அதற்கேற்ற மன நிலையும்
எனக்கு இறைவன் அருளியது
சோறுதான் வேண்டும் , இட்டலி தோசை அவசியம் , காபி இல்லாவிட்டால் பொழுது விடியாது வாரம்ஒரு நாளாவது
அசைவம் வேண்டும் இது போன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இதுவரை எனக்கில்லை
உணவின் சுவை என்பதை நான் முதலில் உணர்ந்தது ஆம்பூரில்தான் அங்குதான் பள்ளிப்படிப்பும் துவக்கம்
ஆம்பூர் என்றால் எனக்கு பிரியாணி நினைவில் வரவில்லை
மாறாக அங்கு சுவைத்த குளோப் ஜாமூன் ---நீள அகலத்தில் சற்றுப் பெரியதாக பல வண்ணங்களில் சீனிப்பாகில் ஊறி இருக்கும்
அடுத்து அன்னாசிப் பழம் –வட்ட வட்ட துண்டுகளாக நறுக்கி மேலே சீனியைத் தூவி பழம் சாறு விட்டு சீனியில் கலந்து நல்ல சுவை மணமாக இருக்கும்
பிறகு மல்தோவா மாம்பழம்
மேட்டூர் –இங்கு நாவில் மனதில் நிற்பது
ஒன்று நெய் விற்கும் பெண் வெண்ணை உருக்கும் பாத்திரத்தில் முருங்கை இலையோடு சோறு கலந்து கொடுப்பது
(இறைவன் அருளால் இந்த சுவை இன்றும் கிடைக்கிறது நன்றி துணைவிக்கும் மருமகளுக்கும் பால்காரருக்கும்)
அடுத்து அம்மாவின் கைவண்ணத்தில் புறாக்கறியும் சிலோன் கறியும்
அதே கைவண்ணத்தில் பச்சை பசேல் முருகைக்காய் , நிறைய மல்லி தழை போட்டு இனிய மணததுடன் சாம்பார் –சிதம்பரத்தில்
விழுப்புரம் வாசவி விகார் உணவகத்தின் இலந்தைப்பழ ஊறுகாய் இன்றும் நாவில் ,நினைவில்
இப்போது அந்த உணவகமே காணோம்
இன்னும் பள்ளிப் பருவமே கடக்க வில்லை இன்னும் நிறைய இருக்கிறது
நேரம் நீளம் கருதி இத்துடன் முக்கால் )
இல்லை அரை (;)இல்லை கால்புள்ளி (,)வைக்கிறேன்
இறைவன் நாடினால்
நாளை குரானில் சிந்திப்போம்
அடுத்த புதன் கிழமை மண்ணின் சுவை
தொடரும்
15012025புதன்
சரபுதீன் பீ
No comments:
Post a Comment