திருமறை குரான்
2:144 கிப்லா
மாற்றம்
03012025 வெள்ளி
-------------நபியே!) நாம் உம் முகம்
அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். -----------------
திருமறையின் எந்த வசனத்தின் பகுதி இது
?
விடை
சூரா 2 அல்
பக்ரா –மாடூ வசனம் 144
(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி
வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத்
திடமாக திருப்பி விடுகிறோம்;. ஆகவே நீர்
இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக்
கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது)
உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் கொள்ளுங்கள்;. நிச்சயமாக
எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய
இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள்
செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.2:144
சரியான விடை எழுதி வாழ்த்து வாராட்டுப் பெறுவோர் :
சகோ
ஹசன் அலி முதல் சரியான விடை
சிராஜூதீன்
ஷர்மதா &
தல்லத்
விளக்கம
கிப்லா மாற்றம்:
இஸ்லாமிய வரலாற்றில் ஒரு மிக முக்கியமான நிகழ்வு
கிப்லாவை நோக்கி இஸ்லாமியர்கள் இறைவனைத்
தொழுகிறார்கள்
இப்போது அது மக்க மாநகரில் உள்ள
புனித காபா வாகும்
காபா , ஏக இறைவணக்கத்துக்கான உலகின்
முதல்ஆலயம்
இந்த வசனம் [ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு
ரஐப் அல்லது ஷாபான் மாதத்தில்] அருளப்படுமுன்பு ஜெருசலேம் நகரில் உள்ள அக்சாவில் உள்ள பைத்துல் முகத்தஸ் எனும் புனித
ஆலயம் கிப்லாவாக இருந்தது
மதீனாவில் ஒரு நபித்தோழர் அழைப்பின்
பேரிலஅவர் வீட்டுக்குப் போயிருந்த நபி பெருமான் அங்கு பகல் நேரத் தொழுகை [லுஹர்]
நடத்திக் கொண்டிருந்தகர்கள்
இரண்டு ரக்கத் நிறைவற்ற நிலையில் இந்த வசனம் அருளப் பெற
உடனே தெற்கு நோக்கி நின்ற
நபி அவர்கள் வடக்கு நோக்கி திரும்பி சில அடிகள் நடந்து வந்து அணியின் முன்பு நின்று
தொழுகை யை நிறைவு செய்தார்கள்
இந்த செய்தி நாடெங்கிலும்
பொது அறிவிப்பாகப் பரப்பப்பட்டது
இஸ்லாம் இறையருளை
வேண்டி எங்கள் ஆலயமான பைத்துல்[SP1] முகத்தஸ்ஸை நோக்கித்தான்
நிற்கிறது
என்ற யூத மதத்தினரின்
வீண் பெருமை முறியடிக்கப்பட்டது
சில செய்திகளை
தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும் மட்டுமே
ஒன்று காபாவை நோக்கித்
தொழுவது காபாவை வணங்குவது அல்ல . அங்கிங்கெனாது எங்கும்
பரவி நிற்கும் ஏக இறைவனை மட்டுமே
ஒற்றுமை உணர்வை
வலியுறுத்தவே காபாவை நோக்கித் தொழுவது
அதே ஒற்றுமைக்காகத்தான்
அரபு மொழியில் மட்டும் தொழுவது
அடுத்து நம் நாட்டுக்கு
மேற்கே காபா இருப்பதால் நாம் மேற்கு நோக்கித் தொழுகிறோம்
வேறு வேறு நாடுகளில்
காபா இருக்கும் கிழக்கு வடக்கு ,தெற்கு நோக்கித் தொழுiவார்கள்
காபாவைச் சுற்றி
மக்கள் வெள்ளம் வட்டமாக அணிவகுத்து கட்டுப்பாடாக தொழுவது கண்கொள்ளாக் காட்சியாகும்
காண வேண்டிய காட்சி
பதிவு சற்று நீண்டு
விட்டது
சகோதர மதத்தினரிடமும்
[சில இஸ்லாமியர்களிடமும் ] நிலவும் காபாவை
முஸ்லிம்கள் தொழுகிறார்கள் என்ற தவறான புரிதலை மாற்றித் தெளிவாக்கவே இந்த விளக்கம்
இறைவன் நாடினால் நாளை தமிழில்
சிந்திப்போம்
02 ரஜப ;7; 1446
03012025 வெள்ளி
சரபுதீன் பீ
No comments:
Post a Comment