தமிழ் [மொழி]அறிவோம்
தறி தரி
19012025 ஞாயிறு
இரண்டே எழுத்தில் ஒரு சிறிய சொல்
இரண்டாவது எழுத்து இகரம் (குறில்)
ஆடைக்கு தொடர்பு உள்ள சொல்
இரண்டாவது எழுத்து இடை இனமானால் வேறு பொருள்
அதுவும் ஒரு வகையில் ஆடைக்கு தொடர்பு உள்ள சொல்
என்ன அந்தச் சொல் ?
விடை
தறி தரி
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன் பாரூக்
முதல் சரியான விடை
ஹசன் அலி
தல்லத் [காதி காவி]
சோமசேகர் &
சிவசுப்ரமணியன்
விளக்கம்
தறி என்பது, பருத்தி, பட்டு போன்ற நூல் இழைகளைக் கொண்டு துணி நெசவு செய்யப் பயன்படும் இயக்கியைக் குறிக்கும். தறி, ஆங்கிலத்தில் 'loom' என்று அழைக்கப்படுகிறது.
தரி என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு:
அணிதல்
• நிறுத்துதல், அடைதல், ஆகியவற்றைக் குறிக்கும் சொல்
• ஒரு கை அல்லது கால் இயக்கத்தில் இயங்கும், ஒரு தண்டால் இயங்கும் சிறிய உள்நாட்டு நூற்பிழியும் இயந்திரம்
• தரி கஞ்சி என்பது ஒரு உணவு வகை
தரி என்ற சொல்லின் பொருள்கள்: நிறுத்துதல் - பேருந்து தரித்தல், அடைதல் - கர்ப்பம் தரித்தல், அணிதல் - மோதிரம் தரித்துக் கொண்டாள்.
இறைவன் நாடினால் நாளை
ஆங்கிலத்தில்
சிந்திப்போம்
௧௯ ௦௧ ௨௦௨௫
19012025 ஞாயிறு
சரபுதீன் பீ
No comments:
Post a Comment