தமிழ் [மொழி]அறிவோம்
இல்லாள் ,இல்லாளன்
05012025 ஞாயிறு
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
தல்லத் – முதல் சரியான விடை
கணேச சுப்ரமணியம் [காரைக்கால் அம்மையார் சரிதத்தில் படித்தாக நினைவு]
சீராஜூதீன் “இல்லாளன் வைக்கவெனத் தம்பக்கல் முன்னிருந்த நல்லநறு மாங்கனி
களிரண்டினிலொன் றைக்கொண்டு”
— பெரிய புராணம் ( காரைக்கால் அம்மையார் புராணம் பாடல் -19)
ஹசன் அலி
சோம சேகர
வேலவன்
சிவசுப்ரமணியன்
குமாரசாமி &
கத்தீபு மாமூனா லெப்பை
பங்கேற்ற சகோ ரவிராஜ் அஷ்ரப் ஹமீதா & செங்கை ஷண்முகத்துக்கு நன்றி
விளக்கம்
இல்லாள்
... இல்லாள் எனில் மனைவி என்றுப் பொருள்... அச்சொல்லுக்கு ஆண்பால் போலத் தோன்றும் இல்லான் வேறு பொருளுடையது...
இல்லான் எனில், செல்வம், பணம் காசு, ஒன்றுமில்லாத ஏழை என்றுப்பொருள்
இல்லாள் என்பதற்கு ஆண்பாற் சொல் இல்லாளன் ஆகும்...
இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். (௫௰௨ - 52)
இல்வாழ்வுக்கான சிறப்புகள் அனைத்தும் மனைவியிடம் இல்லையானால், அந்த இல்வாழ்க்கையில் எவ்வளவு சிறப்பிருந்தாலும் அது வாழ்வு ஆகாது (௫௰௨)
இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்ற தாயும் வேண்டாள் (ஔவையாரின் நல்வழி நூல்..34)
• இல்லாளன், பெயர்ச்சொல்.
1.
கணவன்.
இல்லானன் வைக்கவென (பெரியபு. காரைக். 20).
விளக்கம்
• இல் + ஆளன்
சான்றுகள் –
- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை +
பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
இறைவன் நாடினால் நாளை
ஆங்கிலத்தில்
சிந்திப்போம்
௦௫ ௦௧ ௨௦௨௫
05012025 ஞாயிறு
சரபுதீன் பீ
No comments:
Post a Comment