Saturday, 11 January 2025

தமிழ் [மொழி]அறிவோம் கூறாமல் சந்நியாசம் கொள் 12012025 ஞாயிறு






 தமிழ் [மொழி]அறிவோம்

கூறாமல் சந்நியாசம் கொள்
12012025 ஞாயிறு
ஆடிப்பழ முறத்தால் சாடினாள் “
எந்தப் பாடலில் வரும் வரி இது
விடை
இருந்து முகம் திருத்தி ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்ததென விளம்ப --வருந்தி
ஆடினாள் ... பாடினாள்; ஆடிப்பழ முறத்தால்
சாடினாள் ஓடோடத்தான்.-- ஓளவையார் தனிப்பாடல
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிவசுப்ரமணியன் முதல் சரியான விடை
சீராஜூதீன்
தல்லத் &[தெளிவான விளக்கம் இருவருக்கும் நன்றி ]
ரவிராஜ்
விளக்கம்
ஓளவையார் பற்றி கதைகள் நிறைய உண்டு
அது போல அவரின் பாடல்களுக்கும் உண்டு
அவ்வையார் பசியுடன் நடந்து கொண்டிருந்தார் ; அதைக் கண்ட ஒரு ஆடவனுக்கு கருணை உள்ளம்;
ஏ கிழவி என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போ என்றான்.; ஆனால் அவன் மனைவியோ அடங்கா பிடாரி; மஹா முரடு; இருந்த போதிலும் அவளைக் கெஞ்சிக் கூத்தாடி அவ்வைக் கிழவிக்கு சோறு போட்டு விடலாம் என்று அவன் தப்புக்கு கணக்குப் போட்டான்; வீட்டுத் திண்ணையில் அவ்வையாரை உட்காரவைத்து விட்டு மனைவியைத் தடவிக்கொடுத்து, தலையை வாரிவிட்டு பேன்களை எல்லாம் எடுத்துவிட்டு அன்பே ஆருயிரே ஒரு விருந்தாளியை அழைத்து வந்துள்ளேன்; பாவம் அவள் ஒரு கிழவி என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் காளி போல தாண்டவம் ஆடினாள் ; வசை மாறி பொழிந்தாள்; அதுவும் போதாதென்று பழைய முறத்தை எடுத்து கணவனை அடித்து ஓட ஓட விரட்டினாள் ; அவ்வைக் கிழவிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி; மறு பக்கம் ஒரே சிரிப்பு ; சும்மாவா விடுவார் ஒரு பாடலையும் பாடினார்:---
அந்தப்படல்தான் இது
இதன் தொடர்ச்சியாக இன்னும் ஒரு கதையும் ,மூன்று பாடல்களும் உண்டு
அவ்வையார் கொஞ்ச தூரம் நடந்து போனார்; பசியோ வயிற்றைக் கிள்ளியது ; ஒரு ஆண் மகனைக் கண்டு ,
அப்பா, ரொம்ப பசிக்கிறது; சாப்பிட ஏதாவது கொடு என்றாள் ; அவனும் அன்போடு வீட்டுக்கு அழைத்துச் சென்றான்; அவன் மனைவியும் முரடு; இருந்தபோதிலும் வேண்டா வெறுப்போடு முகத்தைச் சுளித்துக்கொண்டு உணவு பரிமாறினாள்; கரண்டியை வைத்து அடிக்காத குறைதான்.
வெளியே வந்த அவ்வையார் இரண்டு ,மூன்று
பொன்மொழிகளை உதிர்த்துச் சென்றார்.
காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ
அன்பில்லாள் இட்ட அமுது.
அன்பில்லாத மனைவி இட்ட அமுது அவர் நெஞ்சசத்தைப் பிளந்தது ; கொட்டித் தீர்த்துவிட்டார்
XXX
அத்தோடு நிறுத்தவில்லை; அந்த ஆடவனுக்கு அறிவுரையும் வழங்கினாள் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறு ; நல்ல குருவைப் பார்த்து சன்யாசம் வாங்கிக்கொள்; உனக்கு நிம்மதியான வாழ்வும் கிட்டும்; அடியார்கள் அன்போடு கொண்டுவரும் உணவும் கிடைக்கும் என்கிறார்.
சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு
கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே
தொண்டா செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன
செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்
பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால்
எத்தாலும் கூடி யிருக்கலாம் - சற்றேனும்
ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின்
கூறாமல் சந்நியாசம் கொள்.
இறைவன் நாடினால் நாளை
ஆங்கிலத்தில்
சிந்திப்போம்
௧௨ ௦௧ ௨௦௨௫
12012025 ஞாயிறு
சரபுதீன் பீ

No comments:

Post a Comment