Wednesday, 8 January 2025

ரமளான் சிறப்புப் பதிவுகள் 08012026 புதன்


 ரமளான் சிறப்புப் பதிவுகள்

08012026 புதன்
அஸ்ஸலாமு அலைக்கும்
புனித ரமளான் மாதம் நெருங்கிக் கொண்டிருக்கிறது
இறைவன் நாடினால் இங்க ஆண்டும் புனித மாதம் முழுதும் இஸ்லாமியாயப் பதிவுகள் போடஎண்ணம்
கடந்த ஆண்டு இறைவன் அருளிய திருமறையை
உலகுக்கு கொடையாகக் கொடுத்த நபி பெருமானின் வாழக்கை வரலாறு அதோடு இணைந்த இஸ்லாமிய வரலாறையும் முப்பகு பகுதிகளாக சுருக்கமாக எழுதினேன்
சகோ மெகராவிட மிருந்து [மும்தாஜ் ] குரான் அருளப்பட்ட புனித மாதத்தில் அது பற்றி எழுதவதுதான் சிறப்பு என்று ஒரு கருத்து வந்தது
ஏற்கனவே முப்பது நாளுக்கும் திட்டம் தீட்டி மனதில் வரைந்து வைத்து இருந்ததால் மாற்ற முடியவில்லை
இப்போது உங்கள் கருததுக்களை அறிய விரும்புகிறேன்
வழக்கம் போல வினா விடை வடிவில் இருக்கும்
வழக்கமாக குரான், தொழுகை நோன்பு ஜக்காத் ஹஜ் நபி மார்கள் பற்றி எழுதுவேன்
இந்த முறை, பெண்ணுரிமை, தீண்டாமை ஒழிப்பு சமுதாயப் புரட்சி ,,பொருளாதாரசீர்திருத்தம ,மூடநம்பிக்கை களைதல்
போன்றவை பற்றி எழுதலாமா என பல சிந்தனைகள்
உங்கள் கருததுக்கள் தெரிந்தால் அது பற்றியும் சிந்திக்கலாம்
எதுவாய் இருந்தாலும் குரான் வசனங்கள் அடிப்படையில்தான் இருக்கும்
மிக அவசியமானால் மட்டும் நபி மொழி ;ஹதீஸ்’ விக்கிப்பீடியா மேற்கோளாக வரும்
இந்தப்பதிவை எல்லோருக்கும் அனுப்புகிறேன்
வழக்கமாக குரான் வினாவுக்கு விடை சொல்லும் ஒரு சிலராவது கருக்துத் தெரிவித்தால் மகிழச்சி
மற்ற சில பலரும் தெரிவித்தால் இன்னும் மகிழச்சி
நம் அனைவரும் புனித ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு ,தொழுகை ,ஜக்காத் , போன்ற எல்லா கடமைகளையும் நிறைவு செய்து இறைவன் அருளை முழுமையாகப் பெறவேண்டும் என்ற இறைஞ்சளுடன் பதிவை நிறைவு செய்கிறேன்
08012026 புதன்
சரபுதீன் பீ

No comments:

Post a Comment