திருமறை குரான்
36:80
17012025 வெள்ளி
“பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே;-----------
விடை
சூரா 36 யாசீன
வசனம் 80
“பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.(36:60)
சரியான விடை எழுதி வாழ்த்து வாராட்டுப் பெறுவோர் :
சகோ ரவிராஜ்
சிறப்புப்பாராட்டுகள்
முதல் சரியான விடை
ஹசன்அலி
சீராஜூதீன்
தல்லத்
ஷர்மதா
பீர் ராஜா &
ஷிரீன் பாரூக்
விளக்கம
எலிமையாகத் தோன்றும் இந்த இறைவசனத்துக்கு சரியான ,பொருத்தமான விளக்கம் எனக்கு மிகப்பல ஆண்டுகளுக்கப்பின் இப்போகுதன் கிடைத்தது போல தெரிகிறது
ஊழித் தீயின் கோர தாண்டவம் ஒரு நாட்டில்
பச்சை மரங்கள் பற்றி எறிகின்றன
நெடிது நிற்கும் கட்டிடங்கள் நொடியில் தீப்பிடிது உருக்குலைகின்றன
காற்று எங்கிருந்து வருகிறது . தீ எப்படி திசை மாறுகிறது என்பது புரியாமல் திகைத்து நிற்கிறது படை
வாயடைத்து நிற்கிறது வானத்தின் கீழ் உள்ள மிகப்பெரிய ஆட்சி அதிகாரம்
காற்று ,மழை ,கதிரவன் ,நிலவு எல்லாம் என் கட்டுப் பாட்டில்தான் என்பதை இடித்து உரைக்கிறான் இறைவன்
இயற்கைச் சீற்றங்கள் போன்ற பலவற்றால் மனித இனங்கள் அழிக்கப் பட்ட நிகழ்வுகள் குரானில் பல இடங்களில் சொல்லபட்டு, நமக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறது திரு மறை
புனித நூல் என்று ஒதுவதோடு .நில்லாமல் .திருமறையை படித்து பகுத்து பொருள் உணர்ந்து நேர்வழி நடப்போம்
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
16 ரஜப் ;7; 1446
17012025 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment