வண்ணச் சிதறல் 10
உப்பும் உமியும்
உறவினர் வீட்டுத் திருமணத்திற்காக சிற்றூர் ஒன்றுக்குப் பயணம்
.
உறவினர் வீடு .சற்றுப் பழைய காலத்து வீடு.
முழுதும்
சிமிட்டித்தரையிலான வீட்டில் .மர
விட்டங்களுடன் உயரமான மேற்கூரை .--.உள்நோக்கித்திறக்கும் சன்னல் கதவுகள் --..நிலைப்படியில்
ஒரு கருங்கல் --பின்னால் விசாலமான திறந்த வெளி -.அங்கு
தனித்தனியாக குளியல், கழிவறைகள் ==,.வாசலில் புங்க மரம்
உறவினரின் பெருமை பேச இதை எழுதவில்லை.
பழையவை நன்றாகத்தானே இருந்தன இருக்கின்றன. அதை விட்டு ஏன் அதிகப்பொருட்செலவில்
உடல் நலம் பாதிக்கும் வகையில் வீட்டைக் கட்டுகிறோம் (என்னையும் சேர்த்துத்தான் )
என்பது எனக்குப்புரியவில்லை
நம் ஊர் தட்ப வெப்பத்துக்கு சிமிட்டி அல்லது சிவப்புத்தரைதான் உகந்தது
என்று நன்றாகத் தெரியும்
இருந்தாலும் தரைக்கு பளிங்கு
,பளபளக்கும் கருங்கல், விலை உயர்ந்த ஓடுகள் என்று முடிந்த அளவுக்குப் பணத்தை அதில்
கொட்டுகிறோம்.
இவையெல்லாமே பொதுவாக எல்லோருக்கும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு
மிகவும் பாதிப்பை உண்டாக்குவை . ஈரமாக இருந்தால் வழுக்கி விழ வாய்ப்புகள் மிக
அதிகம்
தரையினால் உண்டாகும் கால் வலியைத் தவிர்க்க வீட்டுக்குள் காலணியோடு
நடக்க வேண்டீயிருக்கிறது
எப்போதும் ஈரமாக இருக்கும் குளியல் அறையிலும்கூட தரையிலும் சுவரிலும் விலை உயர்ந்த ஓடுகள் ..
வழுக்கும்காலுக்குத் தெரியவில்லையே அவை வழுக்காத ஓடுகள் என்று .
வழுக்கினால் சுவரைப் பிடிக்கலாம் என்றால் அதுவும் வழுவழுவென்று.
சன்னல் கதவுகள் உள்நோக்கித் திறந்தால் காற்று நன்றாக வரும் ..இது
நமக்குத் தெரியாவிட்டாலும் வீடு கட்டும் பணியில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் . ஆனால் எல்லா
வீடுகளிலும் சன்னல் கதவுகள் வெளி நோக்கியே திறக்கின்றான .
இடப்பற்றாக்குறை என்பது ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும் பெரிய அளவில்
அமைந்துள்ள அறைகளிலும் கதவுகள் வெளி நோக்கியே திறக்கின்றன .
.
எப்படியும் சன்னலகளைத் திறந்து வைக்கப்போவதில்லை பின் உள்ளே திறந்தால்
என்ன வெளியே திறந்தால் என்ன
திறந்து வைத்தால் காற்று வருவதில்லை கொசுதான் வருகிறது என்ற எண்ணமும்
ஒரு காரணமாய் இருக்கலாம் ..
காற்று என்பதே மின் விசிறி அல்லது அறை குளிரூட்டியில் இருந்து
வருவதுதான் என்ற நிலை
கொடிஅசைந்ததால் காற்று வந்ததா காற்று வந்ததால் கொடி அசைந்ததா என்பது
போல் பல கேள்விகளுக்கு பதில் இல்லை
.அது போல் காலை மடக்காததால்
மூட்டு வலி வந்ததா , மூட்டு வலி வந்ததால் காலை மடக்க முடியவில்லையா என்பது ஒரு
புரியாத புதிர்
அண்மையில் என் நண்பரின் துணைவிக்கு மூட்டு மாற்று அறுவை செய்யப்பட்டது
. இப்போது காலை மடக்கி உட்கார முடிகிறதா என்று நான் கேட்டதற்கு என் நண்பர் கூறிய
பதில் “ ஓரளவு உடல் நலத்துடன் இருக்கும் எனக்கே இதெல்லாம் முடியாத, மறந்து
போன ஓன்று . . பல பல ஆண்டுகளாக
மேற்கத்தியக் கழிவறைதான் , சாப்பிடுவது உட்காருவது எல்லாமே நாற்காலியில்தான்
என்றார்
நாற்பது ஐம்பது வயது கடந்தவர்கள் தரையில் அமர்ந்து எழுவது இப்போது ஒரு
மிகப்பெரிய சாதனை
..வயதாகிவிட்டால் தரையில் உட்காருவதே தவறு என்று அறிவுறுத்தும்
மருத்துவர்கள் சிலரும் இருக்கிறார்கள்
பள்ளிவாசல்களில் நாற்காலிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது .இப்படியே
போனால் பள்ளிவாசல் முழுதும் வகுப்பறை போல் நாற்காலிகளால் நிரம்பி விடும் போலிருக்கிறது
என் இளமைப்பருவத்தில் மிக வயதில் மூத்தவர்கள் , பருமனானவர்கள் யாரும்
பள்ளிவாசலில் நாற்காலியில் உட்கார்ந்து தொழுததைப்பார்த்ததில்லை
இப்போதோ கல்லூரி மாணவர்கள் கூட நாற்காலியைத் தேடுகிறார்கள் .
முறையான தொழுகை தோப்புக்கரணம்
, வழிபாட்டுத்தலத்தை வலம் வருதல் , ஆழ்நிலைத் தியானம் எல்லாம் உடலுக்கும்
மனதுக்கும் மிக நல்ல பயிற்சிகள்
மேலை நாடுகளில் பெரிய தொகை கட்டணத்தில் தோப்புகரணம் சொல்லித்தருவதாக
அறிகிறோம்
வாழ்க்கை முறை மாற்றம்தான் மூட்டு வலிக்கு மட்டுமல்ல பல பரவலான
நோய்களுக்கும் காரணம் காட்டப்படுகிறது .
பிறகு ஏன் பழைமையை மறந்து புதுமையை நோக்கிப் பயணிக்கிறோம்
சம்மணம் கூட்டி உட்காருவது நல்லது என்ற செய்தி அண்மைக்காலமாக சமூக
ஊடகங்களில் பரவலாக வலம் வருகிறது .
தும்பை விட்டு வாலைப்பிடிக்கிறோம்
சம்மணம் கூட்டி உட்கார பயிற்சிக்கூடங்கள் வந்தாலும் வரலாம் ஒரு பெரிய
தொகை கட்டணத்துடன்
ஊடகங்களில் வரும் விளம்பரங்களும் பெருநிறுவனங்களின் பொருட்களுக்கு
மருத்துவரின் பரிந்துரைகளும் நம் வாழ்க்கை முறையை நிர்ணயிக்கின்றன
மஞ்சள்
உடம்புக்குக் கெடுதல் சாம்பிராணி புற்றுநோய் உண்டாக்கும் என்றால் அதை வேத வாக்காக
எண்ணி நம்பி செயல்படுத்துகிறோம்
காலம்காலமாக் உப்பையும் உமிக்கருக்கையும் கலந்து பல விளக்கி
நன்றாகத்தான் இருந்தோம்.
கரகரப்பான பொடிகள் பல்லைத் தேய்ந்து விடும் என்று இடைவிடாது சொல்லி
மூளைச்சலவை செய்து பற்பசைக்கு மாற்றினார்கள்
இன்றோ “ உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா “என்கிறார் ஒரு நடிகை
எங்கள் பற்பசையில் கரி கலந்திருக்கிறோம் என்று பெருமை பேசுகிறது ஒரு விளம்பரம்
அதே நேரத்தில் மேல் நாடுகளில் பல்துலக்க வேப்பங்குச்சி பயன்பாடு பரவலாகி
வருகிறது என்று செய்தி வருகிறது
கருப்பு உளுந்து கருப்பட்டி செக்கு எண்ணெய் நாட்டுக்கோழி கறி முட்டை
என்று பரவலாக உணவாகப் பயன்பாட்டில்
இருந்தவை எல்லாம் அரிய விலை உயர்ந்த மருந்துகளாகி விட்டன
இந்தப்பட்டியலில் சிறு
தானியங்கள் பாசிப்பயறு எல்லாம் சேர்ந்து விட்டன
திருநெல்வேலி பேட்டையில் கல் செக்கு நல்லெண்ணெய் வீட்டுக்குக் கொண்டு
வந்து கொடுப்பார்கள் .இப்போது அதெல்லாம் இருக்கிறதா என்று தெரியவில்லை
பசு மாடு எருமை மாடு காளை மாடுதான் கேள்விப்பட்டது பார்த்தது .
கறவை மாடு ஏ4 பால்
இதெல்லாம் எங்கிருந்து வந்தது ?
சென்னையில் ஒரு லிட்டர் பசும்பால் விலை நூறைத் தொடுகிறது
சிறப்பான இயற்கை அரிசி வேண்டுமா கிலோ அறுபத்தி ஐந்து ரூபாய் என்றார்
எங்கள் வீட்டுப்பால்காரர் (பெரிய செல்வந்தர்)
என்ன சிறப்பு என்று கேட்டேன். இயற்கை உரம் மட்டும் போட்டு வளர்த்து,
கையினால் அறுவடை செய்து அடுப்பில் அண்டா வைத்து அவித்து தீட்டாத கைக்குத்தல் அரிசி
என்றார் .
இதைத்தானே காலம் காலமாக பயன்படுத்தி வந்தோம்
கரிம உணவுகள் என விற்கப்படும் பொருட்கள் பாதிக்கு மேல் உண்மையான கரிம
உணவுகள் இல்லை என்கிறது நடுவன் அரசு .
பாலில் பெரிய அளவில் கலப்படம் என்கிறது மாநில அரசு
இப்படி அறிக்கை விடுவதற்கு மட்டும்தான் அரசுகளா ? குற்றம் புரிந்தோரை
தண்டித்து மீண்டும் தவறு நடக்காமல் தடுக்கும் பொறுப்பு அவர்களுக்கு இல்லையா ?
சீனாவில் குழந்தைகள் உணவில் கலப்படம் செய்ய உடந்தையாக இருந்த அரசு
உயர் அதிகாரிகள் உடன் தூக்கிலிடப்பட்டது மற்றவர்களுக்கு ஒரு எச்ச்ரிக்கையாய்
அமைந்தது
மாட்டு வண்டிக்கு மாற முடியாது .மாறவும் வேண்டாம்
உடல் நலம் பாதிக்கப்படாத அளவுக்கு புதுமையின் வசதிகளைப்
பயன்படுத்திக்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும்
பொத்தானை அழுத்தினால் குளியலறையில் தண்ணீரை முழுதுமாய்த் துடைத்து
தரையை உலர வைக்கும் மின் பொறி மேலை நாடுகளில் வீடுகளில் பயன்படுத்துவதாய்
படித்திருக்கிறேன்,
நம் ஊரில் இது போல் எங்காவது இருக்கிறதா இல்லையேன்றால் என் இல்லை ?
கட்டிடத்துறையில உள்ளவர்கள கவனிக்க வேண்டியது
ஐம்பது %
தள்ளுபடியில் நடைப்பொறி விற்கிறார்கள் ,
வாங்கப்போகிறேன் என்றார் உறவினர் ஒருவர் .
இறைவன் கொடுத்த காலுக்கு நடை
மறந்து போனது போலும் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை விழுங்கிய நடைப்பொறிகள்
பெரும்பாலும் துணி காயப்போடத்தான் பயன் படுகின்றன .
நடைப்பயிற்சி என்று தனியாக
நேரம் ஒதுக்காமல் .சிறிய தொலைவுகளை நடந்து பழகலாமே
மிதி வண்டி ஓட்டுவது நல்ல உடல்பயிற்சி அதோடு, சுற்றுப்புறம் மாசு
படாது .எரிபொருள் செலவும் இல்லை
எப்போதும் இல்லாவிட்டாலும் வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டுப் பார்க்கலாம்
அவ்வப்போது தரையில் பாய் விரித்து படுத்து உறங்கினால் முதுகு வலி குறையும்
கூடிய மட்டும் மேற்கத்தியக் கழிவறையை தவிர்க்கலாம்
விடுதிகள் போல் வீடுகளில் .படுக்கை
அறையுடன் இணைந்த கழிவறைகள் பலவிதங்களிலும் உடல், மன நலக்குறைவை ஏற்படுத்துகின்றன
என்பது என் கருத்து
கணினி, கைப்பேசி தொலைகாட்சியில் தொடர்ந்து உட்காராமல்அரை மணி நேரத்துக்கு
ஒருமுறை சிறிய நடை நடக்கலாம்
இயற்கை காற்றும் சூரிய ஒளியும் உடலில் படும்படி திறந்த வெளியில் சற்று
உலாவலாம்.. குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறை பணியாளர்களுக்கு சூரிய ஒளியைப்
பார்க்கும் வாய்ப்பு மிகக்குறுகி விட்டது
இதனால் ஏற்படும் உடல் மன நலக்குறைபாடுகள் எண்ணற்றவை
மேலை நாடுகள் போல் சூரியக்குளியல் தேடிப்போக வேண்டும் போலிருக்கிறது
மூளைக்கு வேலை
சென்ற வாரப்புதிருக்கு சரியான விடையாரும் சொல்லவில்லை . வந்த ஒரு விடையும் சரியாக இல்லை .விடை
தெரியவில்லையா அல்லது இவ்வளவு எளிதான புதிருக்கெல்லாம் விடை சொல்லி எங்கள் நேரத்தை
வீணாக்க முடியாது என்ற எண்ணமா என்று தெரியவில்லை
காரணம் எதுவாய் இருந்தாலும் விடை அடுத்த வாரம்தான்
இ(கடைச்செருகல்
அரபு நாட்டில் மிக அரிதாக மிக சிக்கலான பேறுகாலங்களில் அறுவை வழி (caesarian )
அரசு அனுமதி பெற்றுச்
செய்யவேண்டும் .99% பேறுகாலங்கள் இயல்பாகவே நடைபெறுகின்றன .அரசு
அனுமதியின்றி தனியார் மருத்துவ மனையில் அறுவை செய்தால் மருத்துவ மனையின் உரிமம்
பறிக்கப்படும்
நம்மூரில் அறுவை வழியே இயல்பு போல ஆகி விட்டது அதுபோல் சிறுவர்
சிறுமியர் கண்ணாடி அணிவதும் மிக இயல்பான ஒன்றாகிவிட்டது
இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்
வலைநூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com
No comments:
Post a Comment