ஏழாவது சுவை
வங்கிப்பணியின் துவக்கப்பள்ளிப் பருவம் நெல்லை நகர்க்கிளையில்
.நெஞ்சில் நிலைத்து நிற்கும் இனிய நினைவுகள்
நல்ல நண்பர் வட்டம் .பொறாமை இல்லாமல் போட்டி போட்டு வேலை பார்த்து
விரைந்து முடிக்கும் மனப்பாங்கு . உன் வேலை என் வேலை மேலாளர் வேலை அதிகாரி வேலை
என்று பிரித்துப் பார்த்ததில்லை
.வங்கி வேலை நம் வேலை என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கும்
விரைந்து வேலையே முடித்து விட்டு வெளியே கிளம்பி விடுவோம்..
சிவராமன், இரண்டு சுந்தரம் சீனிவாசன் இவர்களோடு நான் ஒரு குழுவாக திரிவோம்
மிதி வண்டி இருந்ததால் போக்குவரத்து செலவு என்பது ஒன்றும் இல்லை .
உணவு விடுதிகளுக்குச் சென்று அங்குள்ள சிறப்பு உணவுகளை உண்பது, பிறகு
திரைப்படம் .எட்டுத் திரையரங்குகள் இருந்ததால் புதிய படங்கள் எல்லாம் நெல்லையில்
வெளியிடப்பட்டு விடும்
சந்திப்பிள்ளையார் முக்கில் உள்ள ஒரு உணவு விடுதியில் வெள்ளை அப்பம்
சிறப்பு உணவு என்று சொல்வார்கள்
பல முறை அங்கு போய் அது கிடைகாமல் திரும்பி வந்ததுண்டு .சரி
எப்படியாவது அதை சுவை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு நாள் விரைந்து
சென்று உணவகத்தில் உட்கார்ந்தோம் வெள்ளை அப்பம் இருக்கிறது என்று சொன்னவுடன் ஒரு
எதிர் பார்ப்போடு காத்திருந்தேன்
என் கற்பனயில் வெள்ளை அப்பம் என்பது பால் போன்ற வெண்ணிறத்தில் வட்ட
வடிவமான ஒரு உணவுப் பண்டம்.
(ஆப்பம் அப்பம் குழப்பமோ)
வந்தது வெள்ளையாகவும் இல்லை . அப்பம் (ஆப்பம்)போன்றும் இல்லை . போண்டா
போல் பொன்னிறமாக இருந்தது . சரியான ஏமாற்றம் எனக்கு . இதற்கா இத்தனை நாள் வந்து
போனோம் என்ற எரிச்சல்
என்ன செய்வது இப்படி சில பல இடங்களில் மிகவும் எதிர் பார்த்துப்போன சுவை
இல்லாதபோது ஒரு வெறுமையும் ஏமாற்ற
உணர்வும்உண்டாகும்
அது போல் எதிர்பாராமல் சில நல்ல சுவையான உணவுப்பண்டங்கள் கிடைக்கையில்
மனதில் ஒரு நிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படும்
இந்த இரண்டையும்தான் நான் ஏழாம் சுவை என்று குறிப்பிடுகிறேன்
.
வேறு ஒன்றும் பெரிய அறிவியல் ஆராய்ச்சி எல்லாம் இல்லை.
என் உறவினர் ஒருவர் நெல்லைச்சீமையில் பணியற்றியபோது அங்குள்ள உள்ளூர்
வாசி ஒருவர் அடிக்கடி இன்று வீட்டில் பாலமுது சாப்பிட்டேன் என்று சொல்ல, என்
உறவினருக்கு கற்பனை கொடி கட்டிப்பறந்து வாயில் நீர் சுரக்கும்.
பாலே ஒரு சுவையான உணவு . அமுது- கேட்கவே வேண்டாம் பாலமுது என்றால்
மிகவும் சுவையான ஒரு சிறப்பு இனிப்புப்பண்டம்
என்று கற்பனை விரிந்து கொண்டே போனது
எனக்கு பாலமுது சாப்பிட ஆசையாக இருக்கிறது என்று வெட்கத்தை விட்டு ஒரு
நாள் சொல்லியே விட்டார் .
சரி ஒரு விடுமுறை நாளில்
வீட்டில் பாலமுது செய்யும்போது அழைத்துச்
செல்கிறேன் என்றார் உள்ளூர் வாசி .
இப்படிச் சொல்லி சில மாதங்கள் கடந்து விட்டன .ஆசையும் எதிர்பார்ப்பும்
வளர்ந்து கொண்டே போக ஒரு நாள் அந்தத் திரு நாளும் வந்தது
நாளை எங்கள் வீட்டில் பாலமுது
நீங்கள் சாப்பிட வந்து விடுங்கள் என்று உள்ளூர் வாசி சொல்ல என் உறவினருக்கு ஒரு
இனம் புரியாத மகிழ்ச்சி .
அடுத்தநாள் சரியாக அவர் சொன்ன நேரத்துக்கு வீட்டுக்குப் போய் விட்டார்
. ஒரு தேவலோக உணவை சுவை பார்க்கப்போகும் பரபரப்பு
கை கால் கழுவி விட்டு தரையில் விரித்த பாயில் உட்கார்ந்தார் . தட்டு
வைக்கப்பட்டு சிறிது நேரத்தில் வந்தே விட்டது பால் அமுது . வீட்டுப்பெண்கள் பரிமாற
வாயில் எதிர்பார்ப்புடன் வைக்க
மிகப்பெரிய ஏமாற்றம் ,
வெள்ளை அப்பத்தில் வெள்ளையும் அப்பமும் காணமல் போனது போ,ல்
பாலமுதில் பாலும் இல்லை அமுதமும் இல்லை
வெறும் சுடு கஞ்சி
*****
வங்கியில் ஆய்வுப்பணிக்காக தில்லியில் தங்கியிருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை.
உடனிருந்த நண்பர் நரேந்ரனும் நானும் உணவகம் நோக்கிச்சென்றோம்
பொதுவாக தில்லியில் சுவையான உணவு விலை மலிவாக கிடைக்கும்.
போகும் வழியில் ஒரு உணவகத்தில் நல்ல கூட்டம் .சரி இங்கு சிறப்பான உணவு
கிடைக்கும்போல் இருக்கிறது என்று எண்ணி உள்ளே போய் விட்டோம் .
இனம் புரியாத பல உணவுகளின் பெயர்கள் விலைப்பட்டியலில்
.விலையும் சற்று அதிகம் போல்தான் தோன்றியது சரி ஒரு மாறுதலாக இன்று
சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என்று ஒரு உணவை தேர்ந்தெடுத்தோம்
.எதோ அரசு அலுவலகம் போல முதலில் பணத்தை செலுத்தி சீட்டு வாங்க
வேண்டும் அதையும் செய்து விட்டு அமர்ந்திருந்தோம்
எங்கள் சீட்டு எண்ணை ஒலிபெருக்கியில் அழைத்தார்கள் . அவர்கள் கொண்டு
வந்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து சற்று நேரம் காத்திருந்தோம் .அப்படி
எதுவும் நடக்கவில்லை .எனவே நண்பர் போய் இருவருக்கும் உள்ள உணவை வாங்கி வந்தார் .
ஆவலுடன் திறந்து பார்த்தால்
ஒரே ஒரு பன்ரொட்டியை இரண்டாகப் பிளந்து இடையில் சில சிறிய துண்டுகள் காரட் மிளகாய் வைத்து மேலே ஒரு பல்
குச்சி குத்தியிருந்தது .வெண்ணை பழக்கூழ் எதுவும் இல்லை . ரொட்டி வதக்கப்படவும்
இல்லை
வேறு உணவகத்தில் இங்கு கொடுத்த தொகைக்கு மனதும் வயிறும் நிறைய
சாப்பிட்டிருக்கலாம்
வெளியில் வந்து சுவையான பனிக்கூழ் சாப்பிட்டு வயிற்றெரிச்சலை
போக்கிகொண்டோம்
இதே போல் பணம் கொடுத்து சீட்டு வாங்கி அழைப்பு வரும் வரை காத்திருந்து
மதிய உணவு உண்ட நிகழ்வு சென்னையில் ஒரு ஆந்திரா உணவகத்தில் .
ஆனால் உட்கார வைத்து இலை போட்டு வகை வகையாக பரிமாறிய உணவு மிக சுவையாக இருந்ததால் காத்திருப்பின்
தாக்கம் மறைந்து விட்டது
*****
திருச்சியில் ஒரு உணவகத்தில் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும்
என்று பலரும் சொல்லக்கேட்டு அங்கு போய் ஒரு நாள் சாப்பிட்டுப் பார்த்தேன் .
ஏமாற்றம்தான்
*****
ஒரு வார இதழில் சென்னையில் உள்ள ஒரு உணவகம் பற்றி மிகப் புகழ்ச்சியாக
விவரிக்கப்பட்டிருந்தது . குறிப்பாக ரசத்தில் திராட்சைப்பழம் சேர்ப்பதால் மிகச்
சுவையாக இருக்கும் என்று எழுதியிருந்தது .
ஒரு தடவை சென்னை போயிருந்தபோது அந்த உணவகத்தை தேடிப் போனேன்.
நகரின் மையப் பகுதியில் இருந்தாலும் உணவகத்தின் வெளிப்புறம் உள்ள சாலை
சுத்தமாக இல்லை . உள்ளே போகவே ஒரு தயக்கம் . அதையும் மீறிப் போனால் உணவு கொண்டு வரவே வெகு நேரமானதில் பசி ருசி
எல்லாம் . மாறிவிட்டது. .
ரசத்தில் திராட்சையும் இல்லை
பழமும் இல்லை. .கேட்டதற்கு ஒரு சில நாட்கள்தான் அந்த சிறப்பு ரசம் என்றார்கள்
பிறகுதான் தெரிந்தது அச்சு ஊடகங்களில்
வருவதெல்லாம் விளம்பரம்தான் என்று
*******
சொந்த ஊர் திருப்பத்தூரில் புகழ்பெற்ற ஒரு
உணவகம். ரொட்டி குருமா மிக சுவையாக இருக்கும். பல முறை சுவைத்ததுண்டு .
அண்மையில் அங்கு போய் சாப்பிட்டோம் .ரொட்டி
இருந்தது குருமாவும் இருந்தது . பழைய சுவைதான் காணாமல் போய்விட்டது.
அதே போல் இன்னொரு மறந்து மறைந்து போன சுவை
எங்கள் ஊர் திருமண விருந்து சிறப்பு உணவான
நெய்ச்சோறு பொடிக்கறிகுழம்பு ,கா(ய்)க்குழம்பு
.பழைய ஆட்களைத் தேடிப்பிடித்து சமைக்கச்
சொன்னாலும் அந்தப் பழைய சுவையைக் கொண்டு வர முடியவில்லை
******
நெல்லையில் வழக்கமாக நான் வாங்கும் வெளிச்சமான கடையை விட்டு விட்டு எல்லோரும்
சிறப்பாகப்பேசும் வேறொரு கடையில் அல்வா வாங்கிப்பார்த்தேன்..
எனக்கு
அந்த சுவை பிடிக்கவில்லை .பிடிக்கவேயில்லை
உறவினர் ஒருவர் எங்கள் வீட்டுக்கு
வந்திருந்தார் .அந்தச் சிற்றூரில் எளிதாக கறி மீன் வாங்க முடியாது .எனவே
எனக்கு மிகவும் பிடித்த தக்காளி சூப் வைத்து பீன்ஸ் கூட்டு செய்திருந்தார்கள்
சாப்பிட உட்கார்ந்த உறவினரின் முகத்தில் ஏமாற்றம் வெளிப்படையாகத்
தெரிந்தது .அசைவப் பிரியரான அவர் என்ன வெகு நேரமாக அரைக்கும் சத்தம் புடைக்கும் சத்தம் சமைக்கும் சத்தம் எல்லாம் கேட்டதே இதற்குத்தானா
என்று சலித்துக்கொன்டாலும் நன்றாகவே சாப்பிட்டார்
இப்படி எதிர் மறை செய்திகளயே தொடர்து சொன்னால் சலிப்புத்தட்டும் . ஒரு
மாறுதலாக சில் நல்ல செய்திகள்
நெல்லையிலிருந்து பாளையங்கோட்டை செல்லும் வழியில் ஒரு சிறிய சுத்தமான உணவகம் .
இதற்கு முன் அங்கு போனதும் இல்லை அது பற்றிக் கேள்விப்பட்டதும் இல்லை
.
மீன்குழம்பும் பொரியலும் நல்ல வீட்டுச் சுவைக்கு இணையாக இருந்தது
.இருபது ஆண்டுகள் தாண்டியும் இன்றும் நினைவில் நிற்கிறது
*****
மைசூரிலிருந்து குட்டா செல்லும் சாலையில் மைசூர் தாண்டியதும் குன்சூர்
என்ற சிறிய நகரம் வரும். அங்ககுள்ள ஒரு சிறிய உணவு விடுதியில் சிற்றுண்டி, உணவு
எல்லாம் நல்ல சுவையாக இருந்தது
*****
குட்டாவில் பணி ஒய்வு பெற்று அங்கிருந்து கிளம்புமுன் வங்கி
ஊழியர்களுக்கு விருந்து வைத்தேன்..
வழக்கமாகச் செல்லும்அங்குள்ள ஒரே உணவு விடுதிக்குப்போகாமல் இல்லத்தங்கல் நடத்தும் பெருந்தோட்ட உரிமையாளர்
ஒருவரிடம் சொல்லி விருந்துக்கு ஏற்பாடு செய்தேன் .
சைவம் அசைவம் எல்லாம் இதுவரை கண்டிராத நல்ல சுவையாக இருந்ததாக
ஊழியர்கள் அனைவரும் பாராட்டினர் .
இந்த ஊரில் இப்படியெல்லாம் உணவு கிடைக்கும் என்பது பல ஆண்டுகளாய்
இங்கே பணியாற்றும் எங்களுக்கே தெரியாது என்றும் வியப்பைத் தெரிவித்தார்கள்
****
கேரளா மாநிலம் திரூரில் உணவகங்களில் புரோட்டாவுக்கு மத்தி மீன்
குழம்பும் பொரியலும் வைப்பார்கள்.. எப்படி இருக்குமோ என்ற நினைப்பை மாற்றும்
வசையில் மிகச் சுவையாக இருந்தது
*****
திரூரில் அம்மாவின் முதலாம் ஆண்டு நினைவ நாளன்று பிரியாணி செய்ய தன்னந்தனியாக
வந்தார் சமையற்காரர் ஒருவர் . விறகெல்லாம் காயாமல் ஈரமாக இருந்தது .
எப்படி சமையல் ஆகும் சுவை எப்படி இருக்கும் என்ற எதிர்மறை
எதிர்பார்ப்புகளை முறியடித்து அமைதியாக
மிகச் சுவையான பிரியாணி செய்து அழகாகப் பரிமாறவும் செய்தார்
*****
எங்கோ எப்போதோ தெருவில் அரையணாவுக்கு (மூன்று பைசா ) ஆல இலையில்
வைத்துக்கொடுத்த பனிக்கூழின் சுவையும் வெளிர் பச்சை நிறமும் இன்றும் மனதில்
ஒட்டிக்கொண்டிருக்கிறது . எப்படியும் அறுபது ஆண்டுகளுக்கு மேல் கடந்திருக்கும் . திரும்பத்
திரும்ப வாங்கிச் சாப்பிட்டோம்
*****
கல்கத்தாவில் ஒரு சிறிய உணவகத்தில் நின்று கொண்டே சாப்பிட்ட
இட்லி சட்னி --–இட்லி அப்படி ஒரு
மிருதுவாகவும் வெள்ளையாகவும் , தேங்காய் சட்னி அப்படி ஒரு சுவையாகவும் நம்மூரை
மிஞ்சி நின்றது வியப்பு கலந்த ஒரு இனிமை
நிறைவாக ஒரு உணர்ச்சி பூர்வமான நெஞ்சைத் தொட்ட சுவை
ஈரோட்டில் இருந்து கோவைக்கு மாறுதல்
.வங்கி ஊழியர் ஒருவர் கோவையின்
நல்ல நகர்ப்பகுதியில் இருக்கும் தன் வீட்டைப்பார்க்க வரச் சொன்னார். மகளும் நானும்
புறப்பட்டுப்போனோம் நேரம் தவறக்கூடாது என்று காலை சிற்றுண்டி சாப்பிடாமல் வீட்டைப்
பார்க்கப் போய் விட்டோம்.
வெகு நேரம் காத்திருந்தும் அந்த ஊழியர் வரவில்லை. பசி வயிற்றைக்
கிள்ளியது
வீட்டின் அருகில் குடியிருந்த கேரளப்
பெண்மணி ஒருவர் உள்ளே வந்து உட்காருங்கள் என்று அழைத்தார் .
,மிகச்சிறிய வீடு
பெரிய மனது . .
எங்கள் பசியறிந்து நாங்கள் மறுத்தும் சுடச் சுட தோசையும் ஊறுகாயும்
சாப்பிடக் கொடுத்தார் .அந்தப்பெண்ணின் பெயர் கூடக் கேட்கவில்லை . அவருடைய அன்பும்
உபசரிப்பும் கால் நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் நினைவில் நிற்கிறது
நிறைவு செய்யுமுன்
மூளைக்கு வேலை
(இதயத்தைப் பீன் பற்றி—)
.விடை தெரிந்தவர்கள் பதிவு செய்யாலாம் .மற்றவர்கள் அடுத்த வாரம்
பார்க்கலாம்
.அப்பா அம்மா மகன் மகள் நால்வரும் ஒரு
இருட்டான குகையைக் கடக்க வேண்டும் .. குகை மிகவும் குறுகலானது . இரண்டு
பேர் மட்டுமே ஒன்றாகப்போக முடியும் .குகையைக் கடக்க .அப்பாவுக்கு ஒரு நிமிடம, அம்மாவுக்கு இரண்டு நிமிடம் மகனுக்கு நான்கு நிமிடம் மகளுக்கு ஐந்து நிமிடம்
பிடிக்கும்.
கையில் இருக்கும் விளக்கு பனிரெண்டு நிமிடங்கள் மட்டுமே எரியும் .
அதற்குள் நால்வரும் குகையைக் கடந்து செல்ல வேண்டும்
எப்படி முடியும் ?
பின் குறிப்பு :
வலை நூலில் படிப்பது
எல்லோருக்கும் பழகி விட்டது .
நன்றி
கருத்துக்களை வலை நூலிலேயே பதிவு செய்யலாமே
இக(டை)ச் செருகல்
எதையோ சொல்ல வந்து அதை விட்டு
வேறு எதை எதையோ சொல்லி நிறைவு செய்து விட்டேன் .
All is well that ends well,
இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்
வலைநூலில் படிக்க
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com
..
Super sir
ReplyDelete