இசுலாமிய இறைவணக்கமும் யோகாசனங்களும் 6
நிற்கும் நிலைதான் ஆசனங்களின் ஆரம்ப நிலையாகும். .தடாசனா
எனப்படும் மலை ஆசனம் தொழுகையின் முதல் நிலையான நிற்கும் நிலையை ஒத்திருக்கிறது
பாதங்கள் பூமியில் உறுதியாகப் பதிந்த நிலையில் தலை வானத்தை நோக்கிய நிலையில்
அசையாமல் நிற்பது உடல் ,கால்கள் பாதம் முதுகுத்தண்டு அனைவற்றிற்கும் ஒரு நல்ல
பயிற்சியாக அமைகிறது
கண்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும்
.
முதுகுத்தண்டை இழுத்தல்:.
முதுகுத் தண்டு இளக்கமாக இருத்தல் உடல் நலத்துக்கும்
இளமைக்கும் இன்றியமையாதது என்பது யோகிகளின் கருத்து// எனவே யோகாசனக்கலையில் முதுகை
நன்றாக வளைத்து தலையை முட்டிகளுக்கு இடையில் கொண்டு வருவது ஒரு முக்கியப்
பயிற்சியாக இருக்கிறது.. உடலின் எல்லா நரம்புகளும் முதுகுத்தண்டு வழியாகவே
செல்கின்றன,
தொழுகையின் ஒரு நிலையான ருகுவில் இந்த
நிலை மிக எளிதாக அடையப்பெருகிறது.. ருக்கு நிலையில் முதுகை வளைத்து கைகள் விரல்களை
விரித்த நிலையில் முழங்காலகளை இறுகப்பற்றி
நிற்க வேண்டும்..
கைகள் கால்கள் வளையாமல் , முதுகு தரைக்கு இணையாக
இருக்க வேண்டும்.
கண்கள் கால் விரல்களைப்பார்க்க வேண்டும்
இது
போல் ஒரு நாளை குறைந்தது பதினேழு முறை வளைக்கப்படுகிறது.. எனவே இது
முதுகுத்தண்டுக்கு மிகச்சிறந்த எளிதான பயிற்சி ஆகிறது.
தொடர்ச்சி
அடுத்த வாரம் அடுத்த பகுதியில்
பிடித்தால் பகிரவும்
No comments:
Post a Comment