இசுலாமிய இறைவணக்கமும் யோகாசனங்களும் 7
தலைகீழ் நிலைகள் உடலெங்கும குருதியைப்
பாய்ச்சும் வேலையை இதயம் மிக நளினமாகச் செய்கிறது. ஆனால் புவிஈர்-ப்பு விசையை
எதிர்த்து தலைக்கு- மூளைக்கு – குருதி பாய்வதும் கால்களில் இருந்து இதயத்திற்கு
குருதி பாய்வதும் இதயத்தின் வேலைப்பளுவை அதிகரிப்பதாக உள்ளது..இந்த வேலைப்பளுவைக்
குறைக்க தலை கீழ் ஆசனங்கள் பெரிதும் உதவுகின்றன..
இதன் காரணமாகவே தலைகீழ் ஆசனங்களான சிரசாசனமும்
சர்வாங்க ஆசனமும் ஆசனங்களின் தலைமை ஆசனங்களாகப் போற்றப்படுகின்றன..
இந்த இரு ஆசனங்களிலும் தலை இதயத்திற்கு கீழே கொண்டு செல்லப்படுகிறது..
தொழுகையின் சுஜுத் என்னும் நிலையில் இது மிக எளிதான முறையில் எல்லோரும் செய்யும்
வகையில் செயல்படுத்தப்படுகிறது. இது பற்றி இசுலமியாய அறிஞர் அசுரபு நிசாமி “
அர்த்த சிரசாசனத்தை ஒத்திருக்கும் இந்த (சுஜுத்) நிலையில் மூளைக்கும் உடலின் மேல்
பகுதிக்கும் கண் காது மூக்கு நுரையீரலுக்கும் முழு அளவில் குருதி பாய்கிறது “
என்று குறிப்பிடுகிறார்,
சுஜுத் நிலையில் உள்ளனங்கைகள் தரையில்
காதுகளுக்கு கீழ் அமைகின்றன...நெற்றி.,இரு உள்ளங்கைகள் ((விரிக்காத நிலையில்
விரல்கள் நீட்டப்பட்டு) இரு முழங்கால்கள் ,இரு கால்களின் விரல்களின் அடிப்பகுதி
ஆகியவை தரையைததொட வேண்டும். இது பாலாசனத்தை நினைவு படுத்துகிறது ஒரு நாளில் குறைத்து முப்பத்தி நான்கு முறை
சுஜுத் செய்யப்படுகிறது/
ருக்கு பதினேழு சுஜுத் முப்பத்திநான்கு என்பது
ஒரு நாள் தொழுகையில் செய்யவேண்டிய மிகக் குறைந்த அளவாகும்.. வழக்கமாகத்
தொழுபவர்கள் சாதாரணமாக ருக்கு நாற்பது முறையும் சுஜுத் எண்பது முறையும்
செய்வார்கள் .இன்னும் சற்று அதிகமாகத் தொழுகையில் ஈடு படுபவர்கள் ஒரு நாளில்
எழுபது முறைக்குமேல் ருக்குவும் அதற்கு இரட்டிப்பாக சுஜுதும் செய்வர்.
(சிரசாசனத்திலும் சர்வாங்க ஆசனத்திலும்
வழக்கத்தை ஏழு பங்கு குருதி அதிகமாக
மூளைக்குப் பாய்கிறது; எனவே இவ்விரு ஆசனம்களும் எந்த வயதினருக்கும் ஏற்றது அல்ல
என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருப்பதாக அண்மையில் ஒரு தொலைக்காட்சி
நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள புகழ் பெற்ற இதய நோய் நிபுணர் சொன்னார். சுஜுது
நிலையில் இவ்வளவு அதிகமான குருதி பாயாமல், தேவையான அளவே பாய்கிறது)
தொடர்ச்சி
அடுத்த வாரம் அடுத்த பகுதியில்
பிடித்தால் பகிரவும்
No comments:
Post a Comment