கஸர்) சுருக்கத் தொழுகை பற்றிக் கூறும் திருமறை வசனம் எவை?
விடை விளக்கம்
நீங்கள் பூமியில் பயணம் செய்தால், இறைமறுப்பாளர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என நீங்கள் அஞ்சும்போது, தொழுகையைச் சுருக்கித் தொழுவதில் உங்கள்மீது தவறேதுமில்லை”
குரான் சூரா அன்னிஸா பெண்கள் ( 4:101)
நபி பெருமான் அவர்கள்
“(இது) அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய கொடை (சலுகை) ஆகும். அவனது கொடையை ஏற்றுக்கொள்ளுங்கள்”
என இது பற்றி விளக்கம் அளித்தார்கள்
மேலும் பல நபி மொழிகள் மூலம் நாம் அறிவது
- பயணத்தின் போது மதியம் - லுஹர் , மாலை - அசர் , இரவு - இஷா இந்த மூன்றிலும் உள்ள கட்டாயக் கடமையான தொழுகை பர்லு நான்கு ரக் அத்தை சுருக்கி இரண்டு ரக் அத் தொழுகலாம்
' நபிவழித் தொழுகை (சுன்னத்) விருப்பத் தொழுகை
(நபீல்) ஆகியவற்றை விட்டு விடலாம்
-காலை பஜ்ர் 2 அந்தி மஹ்ரீப் 3
ரக் அத்தை முழுமையாக தொழ வேண்டும்
- ஏறத்தாழ 15 கிமீ (3 பர்ஸக்- 9 மைல்) தொலைவுக்கு மேல் பயணம் செய்தால் இப்படி கஸர் தொழுகை தொழுது கொள்ளலாம்
இந்த தொலைவு பற்றியும் எத்தனை நாட்கள் கஸர் தொழுகை தொழுகலாம் என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப் படுகின்றன
பயணத்தில் எத்தனை நாட்கள் இருந்தாலும் அத்தனை நாட்களும் கஸராகத் தொழுகலாம் என்பது ஒரு கருத்து
சில விதிகளுக்கு உட்பட்டு லுகர் அசரையும்
மக்ரிப் இஷாவையும் சேர்த்து ஜம்உ கஸராகவும் தொழுகலாம்
இதற்கு மேலும் பல சலுகைகள் எதிரிகள் அச்சுறுத்தல் உள்ள போர்க்காலத்தில் உண்டு
இந்த சலுகைகள் வலியுறுத்தும் செய்தி ஒன்றுதான்
"எந்த சூழ்நிலையிலும் தொழுகையை விட்டு விடாதீர்கள் "
சரியான விடை அனுப்பிய
சகோ பீர் ராஜா (முதல் சரியான விடை)
ஹஸன் அலி, ஷர்மதா
அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
பதிவில் விடுதல் , தவறுகள் இருந்தால் தெரிவியுங்கள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
31122021வெள்ளி
சர்புதீன் பீ
பூமியில் பயணம் செய்தால், இறைமறுப்பாளர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என நீங்கள் அஞ்சும்போது, தொழுகையைச் சுருக்கித் தொழுவதில் உங்கள்மீது தவறேதுமில்லை” (4:101)என்றுதானே அல்லாஹ் கூறுகின்றான்! தற்போது மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பட்டுவிட்டதே? என்று கேட்டேன்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுக்கு ஏற்பட்ட வியப்பு(ம் ஐயமும்) எனக்கும் ஏற்பட்டது. எனவே, இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது “(இது) அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய கொடை (சலுகை) ஆகும். அவனது கொடையை ஏற்றுக்கொள்ளுங்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். முஸ்லிம் 1222
மேலும் “ஹஃப்ஸ் பின் ஆஸிம் பின் உமர் பின் அல்கத்தாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு பயணத்தில் என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) அவர்களுடன் மக்கா செல்லும் பாதையில் இருந்தேன். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகையை எங்களுக்கு இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். பிறகு தமது ஓய்விடம் நோக்கிச் சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் சென்றோம்; அவர்கள் அமர்ந்தபோது அவர்களுடன் நாங்களும் அமர்ந்தோம். அப்போது தாம் தொழுதுவிட்டு வந்த இடத்தைத் தற்செயலாகத் திரும்பிப் பார்த்தார்கள். அங்கு சிலர் நின்றுகொண்டிருந்தனர். உடனே, “இவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்டார்கள். “கூடுதலான தொழுகைகளைத் தொழுதுகொண்டிருக்கிறார்கள்” என்று நான் பதிலளித்தேன். இப்னு உமர் (ரலி) அவர்கள், “(பயணத்தில்) கூடுதலான தொழுகைகளை நான் தொழுபவனாக இருந்தால் எனது (கடமையான) தொழுகையை முழுமைப்படுத்தியிருப்பேன். என் சகோதரர் (ஆஸிமின்) மகனே! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணத்தில் இருந்திருக்கிறேன். அவர்கள் பயணத்தின்போது (கடமையான) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாக (வேறெந்த முன், பின் சுன்னத்களையும்) தொழமாட்டார்கள். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும் வரை (அவ்வாறே செய்தார்கள்).
நான் அபூபக்ர் (ரலி) அவர்களுடனும் இருந்திருக்கிறேன். (பயணத்தில்) அவர்களும் இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை (அவ்வாறே செய்தார்கள்). நான் உமர் (ரலி) அவர்களுடனும் இருந்திருக்கிறேன். அவர்களும் இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை (அவ்வாறே செய்தார்கள்). பிறகு நான் உஸ்மான் (ரலி) அவர்களுடனும் இருந்திருக்கிறேன். அவர்களும் இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழுததில்லை. அவரகளின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும் வரை (அவ்வாறே செய்தார்கள்).அல்லாஹ்வோ, “அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” ( (33:21)) என்று கூறுகின்றான்” என்றார்கள். முஸ்லிம் 1226
மேற்ச் சென்ற ஹதீஸ்கள் மூலம் ஊரில் இருக்கும் போது நான்கு ரக்அத்துகள் தொழுகைகளை குறைக்காமல் அப்படியே தொழு வேண்டும். பிரயாணத்தில் சுருக்கி தொழ வேண்டும்என்பதை விளங்கலாம்.
கஸா் தொழுகையின் அளவு
எவ்வளவு துாரம் பயணம் செய்தால் சுருக்கி தொழ வேண்டும். அந்த துாரம் ஊருக்குள்ளேயே இருந்தாலும் சுருக்கி தொழலாமா ? அல்லது ஊர் எல்லையை தாண்டினால் தான் சுருக்கி தொழ வேண்டுமா ? என்பதையும், இந்த சுரக்கி தொழும் எல்லை விடயத்தில் ஸஹாபாக்களுக்கு மத்தியிலும், இமாம்களுக்கு மத்தியிலும், சமகால அறிஞா்களுக்கு மத்தியிலு்ம் பலவிதமான கருத்துகளை காணலாம்.இருந்தாலும் நபி (ஸல்) அவா்கள் கஸா் தொழுகை விடயத்தில் காட்டித் தந்த அளவு எவ்வளவு என்பதையும் தொடா்ந்து கவனிப்போம்.
“ யஹ்யா பின் யஸீத் அல்ஹுனாயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மூன்று மைல்” அல்லது “மூன்று ஃபர்ஸக்” தொலைதூரத்திற்குப் பயணம் புறப்பட்டால் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்” என்று பதிலளித்தார்கள். முஸ்லிம் 1230
ஒரு பா்ஸக் என்பது மூன்று மையில்களாகும்."
பயணத்தில் இல்லாமல் ஊரில் இருக்கும் போது கூட தேவைக்கேற்ப பொருத்தமான நேரத்தில்
லுகரோடு அஸரையும்
மஃரிபோடு இஷாவையும சுருக்காமல் முழுமையாக சேர்த்துத் தொழுக அனுமதி உண்டு
என்கிறது சகோ நௌஸாத் அனுப்பிய பதிவு ஒன்று
7 பக்கங்கள் கொண்ட ஒரு நீளமான பதிவு
எனவே அதைப் பதிவிடவில்லை
உங்களுக்கு தேவை என்றால் அனுப்புகிறேன்.
All jurists agree, however, that if a man has been held up somewhere and c FCannot proceed because of some constraint, he may shorten his Prayers
indefinitely provided he is in a constant state of readiness to undertake the journey back to his home as soon as the constraint is removed. Instances are reported of Companions who continued to shorten their Prayers for two years in this kind of circumstance. Treating the situati
Towards understanding Quran