“எனக்குள்ள அறிவின் காரணத்தால் கிடைத்தவை இவை(இந்தச் செல்வங்கள்)”
என்று பொருள்படும்படி யார் சொன்னதாகக் குர்ஆனில் வருகிறது ?
குரானின் எந்தப் பகுதியில் இது வருகிறது?
விடை
சுராஹ் 28 அல் கஸஸ் (வரலாறு ) வசனம் 78
(அதற்கு அவன்) கூறினான்: எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்
இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை ஏக இறைவன் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 28:78)
இங்கு அவன் என்பது காருன்,என்றும் கோரா என்றும்(Qarun (Korah) அழைக்கப்படும் ஒரு மிகப்பெரும் செல்வந்தன் பற்றி
அவனுக்கு அளிக்கபட்ட செல்வத்தின் அளவு பற்றி குரான் சொல்வது
“அவனது கருவூலத்தின் திறவு கோல்களை ஒரு வலிமை வாய்ந்த கூட்டம்
சிரமத்துடன் சுமந்து சென்றது “(28:76)”
300 கழுதைகள் அந்தத் திறவுகோல்களை சுமந்து சென்றன என்றும் ஒரு சொல்வழக்கு உண்டு
செல்வச் செருக்கினால் வீண் பெருமை அடித்துத் திரிந்த அவனுக்கு சிலர் அது தவறு என்று எடுத்துச் சொல்ல அவனோ அந்த செல்வம் முழுதும் தன் அறிவு திறமையினால் சம்பாதித்தது என்று இறுமாப்புடன் சொல்கிறான்
அதற்கு இறைவன் கொடுத்த எச்சரிக்கை .மறுமொழிதான் இந்த இறைவசனம்
மேலும் காருனையும் அவனது மாளிகையையும் இறைவன் ஆணைப்படி பூமி விழுங்கி விடுகிறது . அவனைகாப்பற்றிகொள்ள அவனாலும் முடியவில்லை .அவனுக்கு உதவி செய்து காப்பாற்றவும் யாரும் இல்லை----- (குரான்28:81)
அவன் செல்வச் செழிப்பை பார்த்து வியந்து ஏங்கியவர்கள் செல்வத்தை அள்ளிக் கொடுப்பது இறைவன் மட்டுமே என்ற உண்மையை உணர்ந்து காருனை அழித்தது போல் நம்மையும் அழித்து விடாமல் காப்பாற்றிய இறைவனை நன்றியுடன் நினைவு கொள்கிறார்கள்---(குரான் 28:82)
இந்தக் காருண் நபி மூசா அவர்களின் நெருங்கிய உறவினன் ( மூசாவின் தந்தையும் காருண் தந்தையும் உடன் பிறப்புகள் ).
இருந்தும் அவன் கொடுங்கோல் மன்னன் பிர் அவுனோடு சேர்ந்து அட்டூழியம் செய்கிறான்
சரியான விடை அனுப்பிய
சகோ ஹசன் அலி
முத்தவல்லி அக்பர் அலி( வசனம் எண் முழு வசனம் )
இருவருக்கும்
வாழ்த்துகள்
, பாராட்டுகள் இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
24122021 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment