“------பூமியில் வரம்பு மீறி நடந்துகொண்டான்.
அதில் வசிப்பவர்களை பல்வேறு பிரிவுகளாகப் பிரித்தான்
ஒரு பிரிவினரை இழிவு படுத்தினான் --------- குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான் .”
தி ரு மறையின் எந்தப்பகுதியில் இது வருகிறது ?
விடை
சுரா28 அல்கஸஸ்(கதை) வசனம் 4
சரியான விடை அனுப்பிய
சகோ. பீர் ராஜா (முதல் சரியான விடை)
அசன் அலி, முத்தவல்லி அக்பர் அலி, சிராஜுதீன்
அனைவருக்கும்
வாழ்த்துகள்
பாராட்டுகள் விடை பற்றி ஒரு சிறு விளக்கம்
“திண்ணமாக பிர் அவுன் பூமியில் வரம்பு மீறி நடந்து கொண்டான் .அதில் வ்சிப்பவர்களை பல்வேறு பிரிவுகளாகப் பிரித்தான் .அதில் ஒரு பிரிவினரை இழிவு படுத்தினான். அவர்களின் ஆண் பிள்ளைகளைகொன்று , பெண் பிள்ளைகளை விட்டு வைத்தான் உண்மையில் அவன் வரம்பு மீறியவனாக இருந்தான் “ குரான் 28:4
(அந்தப்பிரிவில் பிறக்கும் ஆண் குழந்தை ஓன்று பின்னாளில் பிர் அவுனை வென்று வீழ்த்தும் என்று ஆருடம் சொல்லப்பட்டதன் அடிப்படையில் ஆண் பிள்ளைகளைக் கொல்லச் செய்தான் )
இது தொடர்பான இன்னும் சில வசனங்கள்
அவனும் ((பிர் அவுனும் ) அவனுடைய படைகளும் பூமியில் நீதியின்றி தற்பெருமை கொண்டனர் . இறைவனிடம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை அவர்கள் மறந்து விட்டார்கள் (28:39)
( பரந்த பூமியில் ஒரு சிறிய பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய அவர்கள் தங்களை மிகவும் வலிமை , அதிகாரம் மிக்கவர்களாய் கற்பனை செய்து கொண்டார் கள்
தங்களை தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற நினைப்பில் முழுக்க முழுக்க தம் மனம் போன போக்கில் நடந்தனர் .
இது அறிஞர்கள் தரும் விளக்கம் )
முடிவில்
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அருள் புரிந்து அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்க இறைவன் விரும்புகிறான் (28:5)
என்ற படி
இறைவன் அவர்களைக் கடலில் தூக்கி வீசி விடுகிறான் (28:40 )
பிர அவுன் என்பது ஒரு தனி மனிதன் பெயர் அல்ல . சேரன் ,சோழன் என்பது போல் ஒரு குலப்பெயர்
இன்று வரை உலகில் அவ்வப்போது அங்கங்கே தோன்றும் கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு ஒரு முன்னோடி, எடுத்துக்காட்டு என்று வைத்துக்கொள்ளலாம்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
10122021வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment