“அறிவு , ஓர்ப்பு , கடைப்பிடி, நிறை “
ஒரு குழுவாக (group of words) இவை எதைக் குறிக்கின்றன ?
விடையும் விளக்கமும்
அச்சம் , நாணம் , மடம் பயிர்ப்பு எனும் நாற்குணங்கள் பெண்மைக்குரிய சிறப்பாகப் போற்றப்படுபவை.
இது எல்லோருக்கும் ஒரளவு தெரிந்த செய்தி
இதே போல் ஆண்களுக்கும்
அறிவு , ஓர்ப்பு , கடைப்பிடி, நிறை
என நாற்குணங்கள் சிறப்பாக சொல்லப்படுகின்றன
அறிவு என்பது எதிலும் உண்மைத் தன்மையை ஆராய்ந்து தெரிவது
காக்க வேண்டியதைக் காத்து போக்க வேண்டியதைப் போக்குவது நிறை ஆகும்
ஓர்ப்பு என்பது ஒரு பொருளை நுணுக்கமாக ஆராய்ந்து தெரிவது
கடைப்பிடி என்பது அறிந்த நல்லவற்றை மறவாமல் இருப்பது
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு விளக்கம் தேவை இல்லை . இருந்தாலும் ஒரு சிறு விளக்கம்
வரவிருக்கும் தீயவற்றை உணர்ந்து எச்சரிக்கை ,பயத்துடன் இருப்பது அச்சம்
தெரிந்த செய்திகளை எடுத்துச் சொல்லாமல் அடக்கமாக இருப்பது மடம்
பிற ஆண்கள் தொட்டால் ஏற்படும் கூச்சம் பயிர்ப்பு
நாணம் – வெட்கம் என்று எடுத்துக்கொள்ளலாம் .
( இந்த நாணம் குறித்து ஒரு பதிவு – எப்படி இது திரைப்பாடல்களில் கையாளப்படுகிறது என்பதை எழுத வலையில் செய்திகளைத் தேடியபோது கண்டதுதான் ஆண்களுக்கான நாற்குணங்கள் .
இறைவன் நாடினால் நாணம் பற்றி பின்பு )
விடை அனுப்பி வாழ்த்துகளும் பாராட்டுகளும் பெறுவோர்
சகோ .சிராஜுதீன் (முதல் சரியான விடை)
,செல்வகுமார் , அசன் அலி, இதயத்
பாப்டி , ராஜாத்தி
இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம்
௦௮ ௧௨௨௦௨௧ புதன்
08122021
சர்புதீன் பீ
No comments:
Post a Comment