“நீங்கள் அறியாத உருவத்தில் உங்களைப் படைக்கவும் உங்களை நீக்கி விட்டு உங்களைப் போன்றோரைக் கொண்டு வரவும் “
தன்னால் முடியும் என்பது போல் இறைவன் கூறும் திரு வசனம் எது ?
விடை
சுராஹ் 56 அல் வாக்கியா –(நிகழ்வு )–வசனம் 61
(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு)உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத ஊருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல ) குரான் 56:61
சரியான விடை அனுப்பிய
சகோ
ஹசன் அலி (முதல் விடை)
முத்தவல்லி அக்பர் அலிக்கு
வாழ்த்துகள்
பாராட்டுகள் முயற்சித்த சகோ பீர் ராஜாவுக்கு நன்றி
இந்த வசனம் பற்றி அறிஞர்கள் தரும் விளக்கம் சுருக்கமாக
இறைவன் விரும்பினால் மறுமை நாளில் மனிதர்களை வேறு விதமாகப் படைக்கும் ஆற்றல் உடையவன்
மனிதர்களின் கண் ,காது, நாக்கு போன்ற பொறிகளின் திறன் முற்றிலும் மாறு படலாம் .
கைகள் கால்கள் ,தோல் போன்ற உறுப்புகள் பேச முடியலாம் .
இளமையும் முதுமையும் மாறாமல் நீடித்து இருக்கலாம் .
தவறு செய்தவர்களுக்கு அளிக்கப்படும் முடிவில்லாத கடும் தண்டனையைத் தாங்கும் அளவுக்கு அவர்களுக்கு உடல் வலிமையையும் முடிவில்லாத வாழ்நாளும் கொடுக்கப்படும்
இன்னும் ஒரு துளி உயிர்ச் சத்திலிருந்து கரு உண்டாகி வளர்ச்சி அடைந்து உருவாகும் முறையும் இறைவன் நாடினால் மாற்றப்படும்
சுராஹ் வாக்கியா மறுமை பற்றி விளக்கும் சூராவாகும்
மேலும் வசனம்
56:79 சுத்தமாக உள்ளவர்கள் மட்டுமே புனித குரானைத் தொட முடியும் என்று சொல்கிறது
(Source Towards understanding Quran )
17122021 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment