Wednesday, 22 December 2021

முத்திரை பதிப்போம் 7- வாயு (காற்று ) முத்திரை

 





 

முத்திரை பதிப்போம் -7

 

காற்று முத்திரை (வாயு முத்திரை) வயிற்று நோய்களுக்கு

 

சலங்கை ஒலி படத்தில் ஒரு காட்சி

“பஞ்ச பூதங்களும் நின் வடிவாக “ என்ற பாடல் வரிகளைத் திரும்ப திரும்ப போட்டு அதற்கு பல வித நடனங்களை ஆடிக்காண்பிப்பார் கமல் .

நாட்டியம் ஆடிய பெண் காட்டிய  முகபாவம் தப்பு என்பதை உணர்த்துவார்

 

பஞ்ச பூதங்கள் என்பது five elements ஐந்து மூலகங்கள் என்பதைக் குறிக்கும்

 

நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் என்ற இந்த ஐந்து மூலகங்களைக் கொண்டு உருவானதுதான் இந்த பூமி என்று ஒரு கொள்கை இருக்கிறது

அதே போல் நம் உடலும் இந்த ஐந்து மூலகங்களால் ஆனது என்று சொல்லப்படுகிறது

 

இந்த பஞ்ச பூதக் கொள்கையின் அடிப்படையில்தான் ஆய்ர்வேதம் ,அகுபஞ்சர் போன்ற பல மருத்துவ முறைகள் இயங்குகின்றன

 

ஐந்தில் ஒன்றான காற்று (வாயு ) பற்றி ஆயுர்வேதம் மனித உடலில் ஐமபது வகைக்கு மேற்பட்ட காற்றுகள் இருப்பதாய் சொல்கிறது

 

இவை சிறிதும் பெரிதுமாய் மிகப்பல சுகவீனங்களை உண்டாக்குகின்றன .

 

மிக எளிதில் செய்யக்கூடிய காற்று (வாயு) முத்திரையை முறைப்படி செய்வதன் மூ லம் இவை அனைத்துமே விரைவில் சரியாகும் என்று சொல்லபடுகிறது

 

மிக எளிதான செய்முறை பற்றி இப்போது பார்ப்போம்

சுருக்காகச் சொல்வதென்றால்

உங்கள் ஆட்காட்டி விரல் (index finger) நுனி அதே கையில் உள்ள பெருவிரலின் அடிப்பாகதைத் தொடட்டும் .

 

பெருவிரல் ((thumb) ஆட்காட்டி விரல் மீது லேசாக அழுத்தட்டும் 

அவ்வளவுதான் வாயு முத்திரை

 

உடலும் மனதும் அமைதியாக இருக்கும்படி உட்காருங்கள்

சுகாசனம் – மிக எளிதாக் சம்மனம் போட்டு உட்காருவது- -போதும்

 

தெரிந்தவர்கள் , முடிந்தவர்கள் தாமரை ஆச்னம் (பத்மாசனம்) வஜ்ராசனத்தில் உட்காரலாம்

 

எந்த ஆசனம் என்பதல்ல , உடலும் மனதும் அமைதியாக இருப்பது அவசியம்  

 

முதலில் சொன்னபடி ஆட்காட்டி விரலின் நுனி பெருவிரலின் அடிப்பாகத்திலும்

பெருவிரல் ஆட்காட்டி விரல் மேலும் இருக்கட்டும்

 

அப்படியே கைகளை வாயு முத்திரை நிலையில் உங்கள் தொடைகள் மேல் வைத்துக்கொள்ளுங்கள்

 

பெருவிரல் ஆட்காட்டி விரல் தவிர மற்ற மூன்று விரல்களும் நீட்டிய நியையில் இருக்க வேண்டும்

 

உள்ளங்கை மேல் நோக்கி(facing upward ) இருக்க வேண்டும்

.

கண்களை மூடிய நிலையில் மூச்சை மெதுவாக ஆழமாக் இழுத்து விடவும் . உங்களுக்குப் பிடித்த மந்திரங்களை முனுமுனுக்கலாம்

மூடிய கண்கள், ஆழமான மூச்சு , மந்திரங்கள் எல்ல்லாம் சேர்ந்து உங்களை ஒரு தியான நிலைக்கு இட்டுச் செல்லும்

 

சிலவற்றை மனதில் வைதுக்கொளுங்கள்த்௩

உங்கள் உடைகள் தளர்வாக,  , உடலைப் பிடிக்காமல் இருக்கவேண்டும்

நல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் செய்யவேண்டும்

கைப்பேசி அருகில் வேண்டாம்

கூன் போடாமல் நிமிர்ந்து உட்காருங்கள்

 

நாள் பட்ட நோய்களுக்கு தினமும் மூன்று முறை பதினைந்து பதினைந்து நிமிடம் செய்யலாம்

மற்றவற்றிற்கு நோய் சரியாகும் வரை செய்யலாம்

நோய் சரியானவுடன் முத்திரை செய்வதை விட்டு விட வேண்டும்

 

 

இவ்வளாவு எளிமையான இந்த முத்திரையால் தீரும் நோய்களின் பட்டியலைப் பார்த்தால் வியப்பும் மலைப்பும் வருகிறது .ஒவ்வொன்றாகப் பார்ப்போம்

 

பெயருக்கேற்ப, காற்று (வாயு) தொடர்பான பல நோய்களை சரி செய்கிறது

வயிறு ஊதிக்கொள்ளுதல், அதனால் உடலெங்கும் ஏற்படும் ஒரு விதமான அசௌகரியமான உணர்வு

 

செரியாமை, அமில எரிச்சல் போன்ற வயிறு தொடர்பான் பல் நோய்கள் சரியாகின்றன

 

 

மனித உடலில்உள்ள  ஐமதுக்கு மேற்பட்ட வாயுக்கள் பல்வேறு பிரச்சினைகளை உண்டக்க்கின்றன என்று முன்பு பார்த்தோம்

 

நோயின் அறிகுறி தெரிந்த இருபத்தி நான்கு மணி நேரத்துக்குள் வாயு முத்திரையை பயிற்சி செய்து . இந்த நோய்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெறலாம் என்கிறார்கள்

 

 அந்த நோய்களில் சில

கீல் வாதம்( Gout ) , அடி முதுகு நரம்பு வலி (sciatica).கை .தொண்டை ,தலையில் நடுக்கம் (Parkinson Disease Symptoms) வாதம் (rheumatism)

 

நாளம் இலலாச் சுரப்பிகள் – தைராயிட் , அட்ரீனல் போன்ற சுரப்பிகள் ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் ஏற்படும் குறைபாடுகள் –உடல் வளர்ச்சி பாதிப்புகள், ஆண் பெண் பிரச்சினைகள் , ஆணுக்குப் பெண் தன்மை, பெண்ணுக்கு ஆண் தன்மை போன்ற பல குறைபாடுகள்

 

வாயு முத்ரா நோய் எதிர்ப்பு சக்தி ( Immunity Power  )அதிகரிக்க உதவுகிறது . . இதன் மூலம் அடிக்கடி சளி பிடித்தல் , காய்ச்சல் போன்றவற்றைத் தவிர்க்கலாம்

 

தியான முறையில் வாயு முத்திரை செய்யும்போது உடலும் மனதும் அமைதி அடைகிறது ,.பரபரப்பான இன்றைய வாழ்வில் உண்டாகும் மன அழுத்தம் போன்ற உள்ளம் சார்ந்த பிரசசினைகள சரியாகின்றன

 

ஒரு எளிய முத்திரை இவ்வளவு பெரிய நோய்களைச் சரி செய்யுமா என்ற ஒரு எண்ணம் ஏற்படலாம்

 

அதற்கு ஒரு சிறிய எளிய விளக்கம்

பஞ்ச பூத தத்துவப்படி பெரு விரல் என்பது  நெருப்பு மூலகத்தின் இருப்பிடம்

ஆட்காட்டி விரல் காற்று மூலக்த்தின் இருப்பிடம் . காற்றின் சக்தி அதிகமாகி அதனால் உண்டாகும் விளைவுகளை பெருவிரல் (நெருப்பு) கட்டுப்படுத்தி சரி செய்கிறது

 

மேலும் மூளைக்குச் செல்லும் சக்தி ஓட்டம் அதிகரித்து பல சுரப்பிகளைத் தூண்டி விட்டு அதனால் பல நோய்கள் சரி செய்யப்படுகின்றன

 

இவ்வளவு நோய்களை சரி செய்யும் ஒரு எளிய முத்திரையை தேவைப்படும்போது செய்து பயன் பெறலாமே

 

 

நிறைவு செயுமுன் முத்திரைகள் பற்றி பொதுவான குறிப்புகள்

முத்திரைகள் செய்வதற்கு மிக எளிதானவை .பொருட் செலவு கிடையாது , கருவிகள் எதுவும் தேவை இல்லை .மருந்து மாத்திரை எதுவும் கிடையாது

ஆனால் தொடர்ந்து உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் ,மருத்துவ முறைகள் எதையும் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிக்காமல் நிறுத்த  வேண்டாம்

 

 

வாயு முத்திரை போல் இன்னொரு முத்திரையும் காற்றினால் ஏற்படும் நோய்களை சரி செய்யம் .அது பிரான முத்திரை எனப்படும்

இதன் செயல் முறை, பயன்கள் பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்

 

இதற்கிடையில் வாயு முத்திரை பற்றி மிகவும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய குறிப்பை மீஎண்டும் சொல்கிறேன்

ஐந்த முத்திரையை தேவைக்கு மேல் செய்ய வேண்டாம் . அதாவது நோய் சரியாகி விட்டால் அதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்

 

இறைவன் நாடினால் மீண்டும் முத்திரை பதிப்போம்

 

22122021புதன்

சர்புதீன் பீ

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment