லட்சம், கோடி, லட்சம் கோடி
40000000
நாலு கோடி ரூபாய் ஊதியம்
ஒரு ஆண்டுக்கு ? மாதத்துக்கு ? வாரத்துக்கு ?
இல்லை இல்லை இல்லை
கூகிள் தலைவரின் ஒரு நாள் ஊதியம் இது
பல ஆண்டுக்குமுன் வந்த இந்த செய்தி நான் உட்பட பலருக்கும் வாயைப் பிளக்க வைத்த ஓன்று
உடனே 4x30=120x12 1440 கோடி ஆண்டுக்கு என்று மனம் தன்னை அறியாமல் கணக்குப் போடுகிறது
இதெல்லாம் என்ன பிச்சை காசுஎன
இதை ஊதித் தள்ளும் அளவுக்கு இப்போது ஒரு செய்தி
+ஒரு நாள் வருமானம் 10000000000 ஆயிரம் கோடி
என்கிறது இந்து தமிழ் (13122021)
யாருக்கு ?அதானி குடும்பத்துக்கு
உலகளாவிய ஏற்றத் தாழ்வு அறிக்கை 2022
World inequality report 2022
உலகின் தலை சிறந்த பொருளாதார அறிஞர்கள் பலர் சேர்ந்து அளித்த அறிக்கை
அதன் அடிப்படையில்
ஏழைகள் ஏற்றம் பெறுவது எப்போது
என்று ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது இந்து
மொத்த உள்நாட்டு உற்பதி (ஜி டி பீ) வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி தங்கள் நாடு வளர்ந்துகொண்டிருப்பதாகப் பறை சாற்றும் பல நாடுகளில் நம் இந்தியாவும் ஓன்று
ஆனால் ஏழை -செல்வந்தர்களிடையே எவ்வளவு மோசமான ஏற்றத் தாழ்வு நிலவுகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது WIR 2022
அதில் சொல்லப்படும் சிலா சுவையான(கசப்பும் ஒரு சுவைதானே ) தகவல்கள்
+மிக ஏழ்மை நிலையில் உள்ள நாடுகள் ,பட்டியல்
+மிக மோசமான ஏற்றத் தாழ்வுகள் உள்ள நாடுகள் ,பட்டியல்
இவை இரண்டிலும் இந்தியா இடம் பெறுகிறது
+நாட்டின் மொத்த வருவாயில் பாதிக்கு மேல் (57%)
பத்தில் ஒரு பங்கு (10%) உள்ள மேல்தட்டு மக்களிடபோய் குவிந்து அவர்களை மேலும் மேலும் செல்வந்தர்களாக ஆக்குகிறது
+(அதிலும் மிக மேல் நிலையில் உள்ள 1% மக்களிடம் 22% வருவாய் போகிறது )
+கீழ் நிலையில் உள்ள 50% மக்களுக்கு வெறும் 13% மட்டுமே போகிறது
அதாவது மக்கள் தொகை 100 என்றும் ,நாட்டின் மொத்த வருமானம் ரூ 1000 என்றும் எடுத்துக்கொண்டால்
மேல்தட்டில் உள்ள பத்துப் பேருக்கு ரூ 570 அதாவது ஒரு ஆளுக்கு ரூ 57
(மிக மேல் நிலையில் உள்ள ஒருவருக்கு ரூ 220 போய்ச் சேர்கிறது )
நடுவில் உள்ள நாற்பது பேருக்கு மொத்தம் 30% -ஆளுக்கு ரூ ஏழரை (71/2)
கீழ் மட்டத்தில் இருக்கும் ஐம்பது பேருக்கு வெறும் 13% அதாவது ஆளுக்கு ரூ இரண்டு,அறுபது காசு (2.60)
+முகேஷ் அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு
ஏழு லட்சம் கோடிக்கு மேல்
+அதானி குடும்பம் ஐந்தரை லட்சம் கோடி
+சிவ் நாடார் குடும்பம் மூன்று லட்சம் கோடிக்கு மேல்
ஒன்றுக்குப்பின் பனிரெண்டு சுழியங்கள்போட்டால் ஒரு லட்சம் கோடி
100, 00,00,00,00.00
சரி பார்த்துக்கொள்ளுங்கள்
தவறு இருந்தால் சொல்லுங்கள்
சரி எதற்கு இந்தப் புள்ளி விவரங்கள் என்று கேட்கின்றீர்களா ?
நான்முன்பே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன்
இப்படியே போனால் நடுத்தர வர்க்கம் என்பது இல்லாமல் போய்விடும்
இந்த நடுத்தர வர்க்கம்தான் நம் நாட்டின் முதுகெலும்பு ,
அரசியல், கலாசாரம், மக்கள் உரிமைகள் இது போன்ற பல நல்லவற்றை தம்மை அறியாமலே கட்டிக்காக்கும் ஒரு கூட்டம்
இது முறியும்போது நாடு என்ன ஆகும் என்பது மிகப் பெரிய ஒரு கேள்விக்குறி
தொடர்ந்து ஏறிக்கொண்டே போகும் எரிபொருள் விலை ,அதன் விளைவாக அனைத்துப் பொருட்களின் விலையேற்றம் , இவையெல்லாம் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை தரத்தை பாதிக்கிறது
தொடரிக் கட்டணத்தில் மூத்த குடியினருக்கு இருந்த சலுகைகள் நீக்கப்பட்டு விட்டன அதனால் தொடரியில் முன்பதிவு செய்து தூங்கும் வசதியுடன் பயணித்துக்கொண்டிந்த மூத்த குடிமக்களிடையே இப்போது ஒரு தயக்கம்
மிகக் குறைந்த கட்டணத்தில் இயங்கிக் கொண்டிருந்த பல பயணி தொடரிகள் (passenger trains ) வேகத்திலோ,பயண நேரத்திலோ எந்த வித மாற்றமும் இல்லாமல் துரித வண்டிக் (ஏறத்தாழ இரட்டிப்புக்) கட்டணத்தில் இயங்குகின்றன
துரித வண்டிகள்--- அதி வேக வண்டி (Super-Fast ) என்ற பெயருடன் அதிகக் கட்டணம் விதிக்கப்ப்டுகிறது
அதே நேரத்தில் உலகில் எங்கும் இல்லாத ஒரு புதுமை
பெரு நிறுவனங்களின் வருமான வரி, தனி ஒருவருக்கு உள்ளதை விட க் குறைவு நம் நாட்டில்
இதில் மிச்சமாகும் பெரிய தொகை முதலீடு செய்யப்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு துணை செய்யும் என்பது சொல்லபட்ட காரணம்
ஆனால் நடந்தது என்ன ? இந்தியாவில் பாதுகாப்பன முதலீட்டு வாய்ப்போ, சூழ்நிலையோ இல்லை என்று சொன்ன பெருநிறுவனங்கள் அதை வெளிநாட்டு முதலீட்டிலும் ஆடம்பர வண்டிகள், வீடுகள் வாங்குவதிலும் செலவளித்தன
பல்லாயிரம் கோடி கடன் தொகை தள்ளுபடி
இதெல்லாம் பார்க்கும்போது , நடுத்தர, ஏழை,மக்கள் பற்றி யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை என்பது தெளிவாகிறது
வரலாற்றைப் படித்து நினைவில் கொள்பவர்களுக்கு இதற்கெல்லாம் என்ன தீர்வு என்பது புரியும்
ஆனால் நாமோ வரலாறு, கலாச்சாரம் ,மக்களாட்சி மரபுகள் , நியதிகள் அனைத்தையும் மறந்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
ஆயிரம் பேர் ஆளுக்கொரு நியாயம் சொல்லலாம்
ஆனால் தர்மம் ஒன்றுதான்
என்று படித்த நினைவு
சுற்றி நிற்கும் சூதுகள் விலகி தர்மமே வெல்லும் என நம்புவோம்
எதையோ எழுதத் துவங்கி எப்படியோ நிறைவு செய்து விட்டேன் .
என்ன செய்வது – புள்ளி விவரங்கள் எத்தனை கொடுத்தாலும் நமக்கு என்ன பாதிப்பு என்பதைச் சொல்லித்தானே ஆகவேண்டும்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
18122021சனி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment