Friday, 5 February 2021

நபி யூசுப் குரான் 12:6

 “நான்காம் தலைமுறை நபி " எனும் சிறப்பு யாருக்கு உரியது?

மிக எளிதான வினா .நிறைய சரியான விடை வரும் என எதிர்பார்த்.தேன்
ஆனால் வழக்கமாக உடனே விடை அனுப்ப்புபவர்கள் கூட அனுப்பவில்லை .வினாவில் எதுவும் தவறோ என்ற எண்ணம் தோன்றியது
விடை
நபி யூசுப் அலை Joseph
நபி இப்ராஹீம் அவர்கள் மகன் நபி இஸ்ஹாக் , அவர் மகன் நபி யாகூப் அவர் மகன யூசுப்
Joseph S/O Jacob S/O Isaac, S/o Abraham
இவ்வாறு உன் இறைவன் உம்மை (யூசுப் நபியை )தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உமக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உம்மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உம்முடைய மூதாதையராகிய இப்றாஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்."
(திருமறை 12:6)
யூசுப் நபி அவர்களுக்கு இன்னும் பல சிறப்புகளை இறைவன் அருளியிருக்கிறான்
“அழகின் ஈர்ப்பு “ என்ற தலைப்பில் யூசுப் நபி அவர்கள் வரலாற்றை ஏற்கனவே நான் பதிவு செய்திருக்கிறேன் எனவே மீண்டும் அதை விவரிக்கவில்லை
சரியான விடை எழுதிய
பர்வேசுக்கு
வாழ்த்துகள்
, பாராட்டுகள்
முயற்சித்தவர்களுக்கும் இத்ரிஸ் நபி என்ற விடை அனுப்பியவர்களுக்கு நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
05022021fri
Sherfuddin P
No photo description available.
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment