இறைவனைக் காண வேண்டி கடுந்தவம் புரிந்த ஒரு பக்தன் முன் இறைவன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றான்
பக்தன் இறைவனிடம் தன பேச்சுத் திறமையைக் காட்ட எண்ணினான்
இறைவா உங்களுக்கு ஒரு ரூபாய் என்பது பலகோடிக்கு சமாமே ?
ஆம் பக்தா
உங்கள் ஒரு கிராம் என்பது பல்லாயிரக்கணக்கான கிலோவுக்கு சமாமே ?
ஆம்
எனக்கு ஒரே ஒரு ரூபாயும் ஒரே ஒரு கிராம் தங்கமும் கொடுங்கள் என்று கேட்டான்
இவ்வளவுதானே ஒரே ஒரு நிமிடம் பொறு என்று சொல்லி இறைவன் மறைந்து விட்டான்
இது ஒரு கதை ,கற்பனைகதை
ஆனால் சில உண்மை நிகழ்வுகள் கற்பனையை மிஞ்சும் அளவில் இருக்கின்றன
ஒரு சிறிய கணக்கு
ஒரு விநாடி = மூன்று ஆண்டுகள்
அதாவது 1= 3x365x24x60x60(ஒன்பதரைக்கோடி -முடிந்தால் பெருக்கி சரி பார்த்துக்கொள்ளுங்கள்
இது என்ன கணக்கு ?
இதுதான் நம் நாட்டின் பொருளாதாரக் கணக்கு
இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தர் ஒரு வினாடியில்
ஈட்டும் தொகையை ஒரு சாதாரணத் தொழிலாளி சம்பாதிக்க மூன்று ஆண்டுகள் ஆகும்
இன்னும் சற்று விளக்கமாகச் சொல்வதென்றால் நமது தொழிலாளி ஒரே ஒரு ரூபாய் சம்பாதிக்கும் நேரத்தில் நமது நாட்டின் செல்வந்தர் ஏறத்தாழ பத்து கோடி ரூபாய் சம்பாதித்து விடுவார்
1= 10,00,00.000 (பத்து கோடி) ஏறத்தாழ
இன்னும் சில அதிர்ச்சிக் கணக்குகள்
நம் நாட்டின் மொத்த செல்வத்தில் முக்கால் பங்குக்கு மேல் (77%) மிகப்பெரும் செல்வந்தர்கள் பத்து சதவீதித்தனர் கையில்
2017 – இந்த ஆண்டின் நாட்டின் செல்வப்பெருக்கில் (wealth generation)
73% நாட்டின் ஒரே ஒரு % மக்களை – செல்வந்தர்களை சென்றடைந்தது
நம் நாட்டில் பில்லியனர்கள் எத்தனை பேர் தெரியுமா ?
2000 ஆம் ஆண்டில் வெறும் ஒன்பதாக இருந்த இந்த எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் 119 ஆக உயர்ந்தது
ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 70 மில்லியனர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்
பத்து ஆண்டுகளில் பில்லியனர்களின் செல்வம் பத்து மடங்கு பல்கிபெருகியது .
25,000 பில்லியன் நம் நாட்டின் ஒரு ஆண்டுக்கான மொத்த வரவு செலவுத் தொகை (பட்ஜெட் தொகை) . இதை விட அதிகமான தொகை நம் பில்லியானரகள் கையில் இருக்கிறது
பொது சுகாதாரப் பராமரிப்பு என்பது எளிய மக்களுக்கு எட்டாக்கனி ஆகிக்கொண்டிருக்கிறது .மருத்துவச் செலவை சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு வினாடியும் இருவர் வறுமைக்குத் தள்ளபடுகிறார்கள் .ஒரு வினாடிக்கு இருவர் என்றால் ஆண்டுக்கு ஆறுகோடி பேர்
உடைகள் தயாரிக்கும் தொழிற்சாலையின் தலைமை நிர்வாகி ஒரு ஆண்டில் ஈட்டும் ஊதியத்தை குறைந்த அளவு ஊதியம் ஈட்டும் தொழிலாளி சம்பாதிக்க ஆயிரம் ஆண்டுகள் ஆகும்
கொள்ளை நோயின் தாக்கத்தால் உலகெங்கும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது எல்லோரும் அறிந்து உணர்ந்த உண்மை .
வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரும் பொருளாதாரத்தில் இதுவரை உலகம் கண்டிராத ஒரு ஏற்றத் தாழ்வு நிலை உருவாகி வருகிறது .நாடுகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வு . ஒரு நாட்டில் மக்களுகிடையே ஏற்றத்தாழ்வு .
இதை நன்கு விளங்கிக்கொள்ள ஒரே ஒரு செய்தி
உலகின் தலை சிறந்த செல்வந்தர்கள் ஆயிரம் பேர் ஒன்பதே மாதங்களில் கொள்ளை நோயின் தாக்கத்தில் இருந்து மீண்டு பொருளாதாரத்தில் பழைய நிலைக்குத் திரும்ப முடிந்தது
ஆனால் ஏழை மக்களோ பத்தாண்டுகள் கழித்துத்தான் பழைய நிலைக்குத் திரும்ப முடியும்
சுருக்கமாகச் சொல்வதென்றால் உலகெங்கும் எந்த வீழ்ச்சியின் பாதிப்பும் ஏழைகளுக்கு மட்டுமே . . வீழ்ச்சியிலும் அசுர வளர்ச்சி காண்பவர்கள் செல்வந்தர்கள்
வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தில் இருப்போர் இல்லாதாருக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு மிக வேகமாக வளர்ந்து வருகிறது
ஆண்டுக்கு 25,0000 மில்லியனர்கள் உருவாகிறார்கள் என்றால் பல கோடி சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு , கல்வி, மருத்துவம் பெறும் வாய்ப்பை இழந்து தவிப்பார்கள்
இதனால் எனக்கென்ன பாதிப்பு என்கிறீர்களா ?
நீங்களும் நானும் காணாமல் போய் விடுவோம் . நடுத்தர வர்க்கம் என்ற ஓன்று காலப்ப்போக்கில் மறைந்து ஏழை பணக்காரர் மட்டுமே இருப்பார்கள்
இனம் , மொழி ,மதம், என பல அடிப்படைகளில் பிரிநதிருக்கும் சமுதாயத்தை இந்த ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய அளவில் பாதிக்கும்
இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே ஒரு அச்சமூட்டும் சிந்தனை
(Source the Hindu dt 28012021 and Oxfam
Oxfam is a confederation of 20 independent charitable organizations focusing on the alleviation of global poverty, founded in 1942 and led by Oxfam International.[3] It is a major nonprofit group with an extensive collection of operations.)
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
20022021sat
Sherfuddin P
No comments:
Post a Comment