Wednesday, 10 February 2021

மலையும் அணிலும் கவிமணி "யாவரே பெரியர்? யாவரே சிறியர்?

 "யாவரே பெரியர்? யாவரே சிறியர்?

ஒன்றிற் பெரியர்? ஒன்றிற் சிறியாராம்;"
எந்தப் பாடல் வரிகள்?
விடை
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை இயற்றிய
மலையும்அணிலும்
என்ற பாடல் '
அற்பத் திருடா! ' என்றெனை யழைத்த
வெற்பே! யானும் விளம்பக் கேளாய்;
'அளக்க லாகா அளவும் பொருளும்
துளக்க லாகா நிலையும் தோற்றமும்
வறப்பினும் வளந்தரு வண்மையும்' உனக்கென்று
உரைமொழி முற்றும் உண்மையே. ஆயின்,
ஒருவகைப் பொருளின் ஒருல காமோ?
ஒருவெயில் மழையின் ஓராண்டு தேறுமோ?
பற்பல பொருளும் பற்பல பருவமும்
ஒன்றாய்க் கூடினே உலகாம், ஆண்டாம்.
ஆதலின், யானிவ் வகிலமீ துதித்தே
இருப்பதை இழுக்கா எண்ணவும் மாட்டேன்.
என்தொழில் இயற்றவும் யாவர் வேறுளர்?
உன்பெரும் உருவெனக் கில்லை. எனக்கும்,
என்சிறு வடிவில்லை. மேலும், என்றன்
உள்ளக் களிப்பில் உற்று நோக்கில்
எள்ளத் தனையும் உனக்கிலை யிலேயே.
அணிற்பிற்றை சாடி ஓடி அலைந்து
விளையா டற்கு விரிவிடம் பெறுவாய்.
ஐய மிதற்கிலை. அடலும் அற்றலும்
ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வொரு விதமாம்;
அறத்தொடும் முறையொடும் ஆழ்ந்த அறிவொடும்
அனைத்துமிவ் வுலகில் அமைக்க லாயின.
வனங்களை முதுகில் வகித்து நின்றிட
வல்லைநீ யாயின், மற்றிங் கெனைப்போல்
நெல்லைக் கொறிக்க நின்னா லாகுமோ?
யாவரே பெரியர்? யாவரே சிறியர்?
ஒன்றிற் பெரியர்? ஒன்றிற் சிறியாராம்;
ஒன்றிற் சிறியர்? ஒன்றிற் பெரியராம்.
ஆதலின், அற்பர் ஆகா தவரென
ஓதுதல மடமையின் சாதனை யாமே,
எமெர்சன் என்ற ஆங்கிலக் கவியின் The mountain and the squirrel
என்ற கவிதையின் மொழிபெயர்ப்பு . மொழிபெயர்ப்பு எனபது தெரியாத அளவுக்கு எளிய, இயல்பான தமிழ் நடை
If I cannot carry forests on my back,
Neither can you crack a nut.
என்ற வரிகளை மிக அழகாக
“வனங்களை முதுகில் வகித்து நின்றிட
வல்லைநீ யாயின், மற்றிங் கெனைப்போல்
நெல்லைக் கொறிக்க நின்னா லாகுமோ?”
என்று மொழி மாற்றம் செய்திருக்கிறார்
சரியான விடை அனுப்பி பாராட்டும் வாழ்த்தும் பெறும் தமிழ் ஆர்வலர்கள்
சகோ அசன் அலி, அஷ்ரப் அமீதா , ஞாழல் மலர்
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
10022021wed
Sherfuddin P
No photo description available.
Natarajan Alaghappan
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment