"நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது"""
திருமறையின் எந்தப்பகுதியில் வரும் வசனம் இது ?
இறைவன் நாடினால் நாளை
விடை
வசனம் 73:6
முஸ்ஸம்மில் சுராஹ் என்ற பெயர் கொண்ட இப்பகுதி “போர்த்திக்கொண்டு படுத்திருப்பவரே” என்று இறைவன் நபி பெருமானை விளித்து இறை வணக்கத்தில் ஈடுபடுமாறு கட்டளை இடுவதாய் அமைந்துள்ளது
நடு இரவுத்தொழுகை என்றும் அதிகாலைத் தொழுகை என்றும் சொல்லப்படும் தஹஜ்ஜத் தொழுகை பற்றி இந்தப்பகுதி சொல்கிறது .
இப்படி இரவில் எழுந்து தொழுவது உடலையும் மனதையும் ஒருங்கிணைத்து இதயத்துக்கும் நாவுக்கும் ஒரு இணக்கத்தை ஏற்படுத்துகிறது ; இதனால் உடல், உள்ளம் , ஆன்மா செம்மைப்படுவதாக அறிஞர்கள் சொல்கிறார்கள்
இந்த தஹஜ்ஜத் தொழுகை பற்றி பின்பு ஒரு பதிவில் சற்று விளக்கமாகப் பார்ப்போம் இறைவன் நாடினால்
சரியான விடை எழுதி வாழ்த்தும் பாராட்டும் பெறுவோர்
சகோ அசன் அலி, ஞாழல் மலர் , மெஹராஜ்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
26022021fri
Sherfuddin P
No comments:
Post a Comment