அத்தாவின் எழுத்துக்கள்
எது நியாயம் ?
தெருவில் பெருங்கும்பல், கூச்சல் , குழப்பம்
“சண்டாளப்பாவி ஏழையின் கடையை இப்படி இடிக்கிறானே “என்று பலர் பேசிக்கொள்கின்றனர்.
“இந்தப்பிள்ளையும் குட்டியும் இப்படித் தெருவில் நிற்கிறதைப்பார்த்தும் கூட இரக்கம் வரலையே இந்த முனிசிபாலிட்டிக் காரனுக்கு “ என்று ஒருவர் கழிவிரக்கம் கொள்கிறார்
“ஏதாவது கொடுத்துத் தன்னக்கட்டி இருந்தால் இப்படி எடுக்க மாட்டங்க ;இவர்களுக்குக் கொடுக்க இவன் எங்கே போவான் “ என்று குத்தல் கொடுக்கிறார் மற்றொருவர்
பொதுவாகக் கூட்டத்தினரின் அபிமானத்தை அப்படியே சம்பாதித்து விட்டான்
இதை ஏன் போய் எடுத்துத் தொலைக்க வேண்டும் ?
பெட்டிக்கடை முக்கியமான் சாலையில் அமைந்திருக்கிறது .சாலை மக்கள் போக்குவரத்து வாகனங்கள் நடமாட்டதுக்குத்தான் ;கடை வைக்க அல்ல என்கிறார் நகர சபையார் . இந்த ஒரு ஏழை ஒரு மூலையில் கடை வைத்தால் என்ன கேட்டுப்போச்சு! ஒன்றும் கெட்டுப்போவதில்லை என்றாலும் இவரினும் எத்தனையோ ஏழை அதிக வாடகை கொடுத்து கடை நடத்துகிறாரே .எனவே கடைகளை வைக்க விரும்பும் ஏழைகளுக்கு எல்லாம் இடம் கொடுப்பதுதானே நியாயம் . அப்படியாயின் சாலை பூரவுமே பெட்டிக்கடைகள் ஆகிவிடும்.சாலைகளுக்கு வேண்டிய இடம்தான் சாலைகளாக அமைந்துள்ளன ..பெட்டிக்கடைகள் வைக்கவென்று அதிக இடவசதியுடன் அமையவில்லை .சாலைகளில் இவ்வித இடையூறுகளால் அபாயங்கள் ஏற்படுகின்றன . மேலும் இச்சாலைகள் யாருக்கு சொந்தம் ? உலகிலுள்ள பலகோடி மக்களும் நடக்க , கார் ஓட்டிச்செல்லச் சொந்தம். எனவே இது உலகின் பொதுச் சொத்து . இவற்றை சாலைகளாகத்தான் நகரசபையோ மற்றவகர்ளோ பராமரிக்கலாம் .வேறு உபயோகத்துக்குக் கொடுப்பது தங்கள் பொறுப்பை தவறாக உபயோகிப்பதாகும்
அச்சாலைகளின் இரு மருங்கிலும் உள்ள இடத்தின் அல்லது கட்டிடததின் சொந்தக்காரருக்கும் சாலையின் ஓரத்தின் ஒவ்வொரு புள்ளியில் இருந்தும் நுழைவு பெற அருகதை உண்டு .அந்த அருகதையைத் தடுத்து மூன்றாவது நபருக்கு சாலை ஓரத்தைக் கொடுக்க யாருக்கும் அதிகாரம் இருக்க முடியாது .அந்த வீடு அல்லது நிலத்துக்குச் சொந்தக்காரர் சம்மதம் பெற்றாலும் முடியாது . கொடுப்பது சட்ட விரோதம் .ஏனெனில் அந்த வீடோ நிலமோ அவருக்குக் சாஸ்வதமல்ல வேறொருவர் சொந்தக்காரர் ஆனால் அவர் அந்த உரிமையை இழந்து விடுகிறார்.
எனவே பல்வேறு மக்களுக்குப்பாத்தியமான சொத்தை ஒருவன் தன் சுயநலத்துக்காக குடிசை என்றும் கடை என்றும் திருடத் துணிகிறான் .ஒருவனுக்கு சொந்தமான சொத்தை திருடுபவன் பிறர் அறியா வண்ணம் நடுநிசியில் மறைந்து சுவர் ஏறித் திருடுகிறான் . தான் செய்வது குற்றமென உணர்ந்து பிறர் கண்டுகொள்ளும்படி ஏதேனும் சத்தமோ அசைவோ ஏற்பட்டால் ஓட்டம் பிடிக்கிறான் . ஆனால் இந்தக்கோடிக் கணக்கான மக்களின் சொததை ஆக்கிரமிப்பு மூலம் திருடுகிறவன் பகிரங்கமாக அத்திருட்டை நடத்திகொண்டிருக்கிறான் .இதை அப்புறப்படுத்த அவனுக்கு தகுந்த கால அறிவிப்பு கொடுக்கவேண்டும் . ஆனால் அவன் செய்யும் பகிரங்கத் திருட்டுக்கு அவன் எவ்வித நோட்டிசும் கொடுப்பதில்லை
.நடு ரோட்டில் ஒருவன் ஆக்கிரமித்துக்கொண்டு கட்டிடமோ மேடையோ போட்டாலும் அவனை நோட்டீஸ் மூலம்தான் அப்புறப்படுத்த வேண்டும் .அம்மாதிரித் திருட்டுதனதை அப்புறப்படுதும்போதுதான் முதலிலே கூறியவாறு நகரசபையார் ஏச்சும் பேச்சும் கேட்க வேண்டிய்ருக்கிறது .ஏழைதானே என பச்சாதாபப் படுகிறோம் . வீடுகளில் புகுந்து பாத்திரங்களை திருடுகிறவர்கள் பெரும் செல்வந்தர்களா ?அவர்களை என் உடனே பிடித்துப் போலீசில் ஒப்படைக்கிறோம்
எனவே கோடிக்கணக்கான மக்களுக்கு சொந்தமான வீதிகளைப் பகிரங்கமாக திருடிக்கொள்பவர் எவராயினும் அவர்மீது இரக்கம் காட்டாமல் நகரசபையாருடன் ஒத்துழைத்து அவ்விதத் திருட்டுக்களை ஒடுக்க முயலவேண்டும்
வீதிகளில் தேவைக்கு மேல் இடம் இருந்தால் என்ன செய்வது என்று கேட்கலாம் .அவ்வாறு தேவையற்ற இடத்தை அதை ஒட்டியுள்ள கட்டிடம் அல்லது நிலச் சொந்தக்காரருக்கு கொடுத்து விடுவதுதான் முறை . அவருக்கு வீதியிலிருந்து நுழைவு உரிமை பாதிக்கப்ப்படமாட்டது . மூன்றாவது நபருக்கு அவ்வித இடங்களைக் கொடுப்பதால் அந்த வீட்டுக்காரருக்கு அல்லது நிலச் சொந்தக்காரரின் நுழைவு உரிமை பாதிக்கப்படுகிறது
மேலும் இந்தக்கோடிக்கணக்கான மக்களின் சொத்தைச் செல்வந்தர்கள் திருடுகிறார்கள் ..தனக்குள்ள நூற்றுக்கணக்கான அடி நீளமுள்ள வீட்டுக்குப்படி போட yt கோடிக்கணக்கான் மக்களின் பதினைந்து இருபது அடி அகல வீதியில் பெரும்பகுதியை மேடாக்கி படியாக்கிக் கொள்கிறார்கள் . தங்கள் வீடுகளை உயரமாகக் கட்டி விட்டு அத்தனை உயரத்துக்குத் தேவையான அத்தனை படிகளையும் வீதியிலேயே அமைத்து விடுகிறார்கள் .
வீடுகளை உயரத்தில் கட்டட்டும் ஆனால் வாசலை சாலை மட்டத்துக்கு வைத்து அதிலிருந்து படிகளை அவர்கள் இடத்திலேயே அமைத்துக்கொள்ளலாம் ..அவ்வாறின்றி வீதியில்தான் படிகளை அமைக்கிறார்கள் .இவற்றை அகற்றும்போது நகரசபையார் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிறார்கள் .
தன்னுடைய நூற்றுக்கணக்கான அடி இடத்தில் சாலைப்பகுதியை படிக்காக விடாமல் உங்கள் சொத்தாகிய பத்தடி வீதியில் நான்கு ஐந்து அடி படி அமைப்பது நியாயமா என்று பாருங்கள் ““ஐயோ கட்டிய வீட்டை இப்படி முனிசிபாலிட்டிகாரங்கள்இடிக்கிறாங்களே “ என்று அம்மகத்தான திருட்டுக்கு ஒத்துப்போவது நியாயமா ?
சிந்தியுங்கள்
எழுத்தாக்கம் எங்கள் தந்தை
ஹாஜி கா. பீர் முகமது பீ எஸ்ஸி.
நகராட்சி ஆணையர் ஒயவு
27022021sat
Sherfuddin P
No comments:
Post a Comment