4 m
Shared with Public
மெய்ப்புல அறைகூவலர்”
தமிழ்தான் ! பொருள் என்ன ?
விடை
சென்ற வாரம் கவிமணி அவர்களின் எளிய இனிய தமிழாக்கம் பார்த்தோம் சொல்லுக்கு சொல் மொழிமாற்றம் செய்யாமல் பொருளுக்கு தமிழாக்கம் செய்ததில் மொழி பெயர்ப்பு என்பதே தெரியாமல் இருந்தது .
அதற்கு நேர் மாறாக சில பல பல்லை உடைக்கும் ,அச்சுறுத்தும் தமிழாக்கங்களும் கண்ணில் காதில் படுகின்றன
அதில் ஒன்றுதான் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு முனையத்தில் நான் கண்ட அறிவிப்பு
மெய்ப்புல அறைகூவலர்”
நல்ல வேளை . பன்னாட்டு மொழியான படம் போட்டு ஆங்கிலத்திலும் physically challenged என்று குறிப்பிட்டிருந்தார்கள் .
ஆம் உடல் ஊனமுற்றோருக்கான கழிவறை பற்றிய அறிவிப்புதான் இவ்வளவு கடுத்தமான தமிழில்
என்ன உள்ளே போய் பட்டிமன்றமும் கவியரங்குமா நடத்தப் போகிறார்கள் ?..எல்லோருக்கும் புரியும்படி உடல் ஊனமுற்றோருக்கு என்று போட்டிருக்கலாம் .
எத்தனை பேர் இதைப் படித்து குழம்பிப்போய் வந்த வேலையை முடிக்காமல் திரும்பிப் போனார்கள் என்று தெரியவில்லை
“ இந்தியாவில் உறையாத இந்தியர் கிளை “
ஒரு வங்கியின் பெய்ர்ப்பலகையில் Non Resident Indians Branch என்பதன் மொழிபெயர்ப்பு .
வெளி நாடு வாழ் இந்தியர் கிளை
என்று போட்டால் என்ன ?
அடிக்கடி காதில் நெருடலாக விழும் சொல் “மற்றும்”
And என்ற சொல்லின் மொழிபெயர்ப்பு. தாய் மற்றும் தந்தை .சுத்தம் மற்றும் சுகாதாரம. அன்பு மற்றும் பரிவு . இட்லி மற்றும் சட்னி .
தாயும் தந்தையும் , சுத்தம் சுகாதாரம் , அன்பும் பரிவும், இட்லி சட்னி என்றாலே பொருள் முழுமையாக இருக்கிறதே
அண்மையில் ஒரு சோப்பு விளம்பரத்தில் கேட்டது
வாசம் – சந்தனக்கட்டை போல .
Sandalwood என்பதன் மொழி பெயர்ப்பு போலும்.
வினாவுக்கு சரியான விடை எழுதி வாழ்த்துகளும் பாராட்டும் பெறும் தமிழ் அறிஞர்கள்
சகோ டி ஆர் சுந்தரம் , ஆ ரா விசுவநாதன் , ஞாழல் மலர் ,இதயத் , அசன் அலி , சிராசுதீன்
ஆர்வத்துடன் முயற்சித்த அனைவருக்கும் நன்றி
நேற்று வினா கட்செவியில் பதியும்போது மெய்ப்புல என்பது மெய்ப்பொருள் என்று என்று தவறாகப் பதிவாகி விட்டது . நேற்றே திருத்தம் போட்டேன் . அது ஒரு குழுவில் பதிவாகாமல் போய்விட்டது .
தவறுக்கும் அதனால் ஏற்பட்ட சிரமத்துக்கும் வருந்துகிறேன்
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
17022021wed
Sherfuddin P
No comments:
Post a Comment