உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (குறள் 339)
திருமறை வசனம் ஓன்று ஏறத்தாழ இதே பொருள் தருகிறது
அது எது ?
விடை
திருமறை வசனம் 39:42
“இறைவன் , உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை
அவற்றின் தூக்கத்திலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன”
தூக்கத்தில் கைப்பற்றுதல் என்பது உணர்ச்சிகள்,, மன இயக்கம் இவற்றின் தற்காலிக நிறுத்தம் என்று விளக்கம் சொல்லப்படுகிறது
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
என்ற குறளுக்கும் விளக்கமாகி இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகிறது இந்த வசனம்
சரியான விடை எழுதி பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் உரித்தானவர்
சகோ அசன் அலி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
12022021fri
Sherfuddin P
No comments:
Post a Comment