Wednesday, 3 February 2021

தமிழ் நீ இடை இழைத்த குற்றம் என்னை சொல் ?”

 நீ இடை இழைத்த குற்றம் என்னை சொல் ?”

எந்த நூலில் எந்த இடத்தில் வரும் வரி?
விடை
கம்ப இராமாயணம் ஆரண்ய காண்டம். சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் வரும் பாடல்
3229. ஆயிடை எழுந்த சீற்றத்து
அழுந்திய துன்பம் ஆழித்
தீயிடை உகுக்கும் நெய்யில்
சீற்றத்திற்கு ஊற்றம் செய்ய,
“நீ இடை இழைத்த குற்றம்
என்னை கொல்? நின்னை இன்னே
வாய் இடை இதழும் மூக்கும்
வலிந்து அவர் கொய்ய?‘‘ என்றான்.
“நீ இடை இழைத்த குற்றம் என்னை சொல்
இராமனைத் தன் மாய அழகால் கவர முயன்று தோற்ற சூர்பனகையின் உடல் உறுப்புகளை இலக்குவன் சிதைத்து விட மூக்கறுபட்ட சூர்ப்பனகை தன் தமையன் ராவணனிடம் முறையிட, ராவணன் நீ செய்த குற்றம் யாதென்று வினவுகிறார்..###
மிக எளிய தமிழில் இலக்கிய நயம் மிகுந்த பாடல் ,
தங்கை என்றும் பாராமல் “நீ செய்த குற்றம் என்ன ?” என்று கேட்பது இராவணனின் நேர்மையின் வெளிப்பாடாக அமைகிறது
இராமன் ,சூர்ப்பனகை பற்றிய கம்பன் பாடல்கள் பட்டி மன்றங்களில் பெரிதும் பேசப்படுபவை . ஒரு நூலே எழுதும் அளவுக்கு பொருள் செறிந்தவை
இப்போது இது போதும்
சரியான விடை அனுப்பிப் பாராட்டும் வாழ்த்தும் பெறும் தமிழ் அறிஞர்கள்
சகோ கணேசன் சுப்பிரமணியன், அசன் அலி ,சேக் பீர், கரம், விஸ்வநாதன், பர்வேஸ்
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சந்திப்போம்
03022021wed
Sherfuddin P
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment