Thursday, 17 June 2021

குரான் சூரா 20 தாஹா -

 உமர் அவர்கள் இசுலாத்தில் இணைந்தது எந்த குரான் சூரா ஓதப்படுவதைக்

கேட்டு ?

விடை
சூரா 20- தாஹா
சரியானவிடை அனுப்பி வாழ்த்தும் பாராட்டும் பெறுவோர்:
சகோ.நத்தர்சா மரைக்காயர் , அசன் அலி , பர்வேஸ்
விளக்கம் – மிகச் சுருக்கமாக
நபி ஸல் அவர்களுப்பின் இரண்டாம் கலீபாவாகப் பதவி ஏற்று மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்து இசுலாமிய வரலாறில் ஒரு சிறந்த இடம் பெற்றுள்ள உமர் அவர்கள் ஒரு காலத்தில் இசுலாத்தின் மிகப் பெரிய எதிரியாக இருந்து நபி ஸல் அவர்களையே கொலை செய்ய எண்ணியவர்
அப்படி கொலை நோக்கத்துடன் திரிந்த அவரிடம் ஒருவர்
“உங்கள் சகோதரியும் மைத்துனரும் இசுலாத்தில் இணைந்து விட்டார்கள் . முதலில் உங்கள் குடும்பத்தை சரி செய்யுங்கள் “ என்று சொல்ல, கட்டுக்கடங்காத சினத்துடன் சகோதரி வீட்டுக்குப் போகிறார்.
அங்கு குரான் ஓதப்படும் ஒலி கேட்கிறது .
இசுலாத்தில் இணைந்த தன் மைத்துனரைத் தாக்க உமர் முற்படும்போது உமரின் சகோதரி தன் துணைவரைக் காக்க இடையில் வர , சகோதரிக்கு காயம் பட்டு குருதி வழிகிறது
சகோதர பாசத்தால் உமர் மனம் மாறி தன் உடலை சுத்தம் செய்து கொண்டு குரானை ஓதிக் காண்பிக்கும் படி சொல்கிறார் . . “ என்ன ஒரு
அருமையான
சொற்கள் “ என்று வியந்து இசுலாத்தில் இணைகிறார்
அவருக்கு ஓதிக்கான்பிக்கப்பட்டது தாஹா சூரா
இறைவன் நாடியால் மீண்டும் சிந்திப்போம்
18062021fri SherfudddinP
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment