Tuesday, 1 June 2021

தமிழ் - லோராண்டி

 “லோராண்டி”

தன் பிள்ளைக்கு "லோராண்டி " என்று பெயர் வைத்தால் அவர் எந்த நாட்டுக்காரர்?
இலங்கை, இத்தாலி, பிரான்ஸ் , தென் ஆப்ரிக்கா என பல விடைகள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி
ஆனால்
அவர் தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழர், தமிழ்ப் பற்று உடையவர் என்பதே சரியான விடை
விளக்கம் கீழே
என்னப்பா உன் மகனுக்கு லோராண்டி என்று பேரா? இது வரை கேள்விப்படாத பேராக இருக்கிறதே
என்ன அப்படிச் சொல்லிட்டீங்க .
“நந்த வனத்தி
லோராண்டி
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி ------------ “
என்ற பிரபலமான சித்தர் பாடலில் வரும் பெயர் அது
இது போல் சொற்களைத் தவறாகப் பிரித்தல்,சேர்த்தல் ,சந்திப்பிழை ,வல்லின மெல்லின வேறுபாடுகள் , ஆங்கிலம் தமிழ் குழப்பம் என பலவற்றால் பொருள் மாறி சில நகைச்சுவையாகவும் சில வேறு மாதிரியாகவும் வருகின்றன
அது போல் நான் படித்தவை, பார்த்தவை ,கேட்டவை மனதில் தோன்றியவற்றில் சிலதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
“அவர் ஊக்குவிக்கும் பேச்சாளர் “
ஒரு டசன் என்ன விலை ?
“மகிழ்ச்சியில் பூரித்துப் போனார் “
அப்போ கவலையில் சப்பாத்தித்துப் போவாரா ?
“இறும்பூது எய்தினார் “
ஏன் செம்பு வெள்ளி தங்கம் ஏதும் கிடைக்கவில்லையா
“அங்கு ஈ காக்கயைக் காணோம் .ஒரே ஒரு பேன் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது “
பேன் fan
“என்ன எல்லோரும் கூட்டத்துக்கு பாத்திரம் கொண்டு வந்திருக்கிறார்களே ஏன்?
சீதாராம் கேசரி வருகிறார் என்பது சீதாராம் கேசரி தருகிறார் என்று பிரிண்ட் ஆகி விட்டது “
“தூத்துக்குடி போனியே முத்துக் குளிக்கிறதைப் பார்த்தியா ?”
எனக்கு மற்றவர்கள் குளிப்பதைப் பார்க்கும் பழக்கம் இல்லை
“மங்கிபாத்குக்கு எட்டு கொடி செலவு “
குரங்கு குளிக்க கோடிக்கணக்கில் செலவா ?
“உங்க கிட்னி பெயில் ஆயிருச்சு “
கிட்னியை படிக்க வைக்கவே இல்லையே பின் எப்படி பெயில் ஆச்சு
வாஸ்கோடகாமா இப்ப இருந்தால் அவர் பெயர் என்ன தெர்யுமா ?
“இஸ்கோட காமா “
தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா –முடியாது டாக்டர்
எங்க வீட்டுக் கோழி வெள்ளை முட்டைதான் இடும்
நான்தான் உங்களுக்கு கால் ஆப்பரேஷன் பண்ணப்போற டாக்டர்
“அப்போ மீதி முக்கால் ஆப்பரஷன் யார் பண்ணுவார்கள் “
ஒரு தலைக்குக் கட்டிங் பண்ணால் ஒன்பது தலைக்கு இலவசம் என்று போட்டிருந்ததே .போய்க் கேட்டாயா ?
கேட்டேன் ,பத்துத் தலயும் ஒரே உடம்பில் இருக்கனுமாம்
இன்ஸ்பெக்டர் இன்டர்நெட் பைத்தியம் போலிருக்கிறது
குற்றவாளியை கூகிள் சர்ச்சில் தேடிக்கொண்டிருக்கிறார்
“பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி”
அதெப்படிங்க உங்க முதுகுக்குப் பின்னால் தூங்கி உங்கள் முகத்துக்கு முன்னால் எந்திரிக்க முடியும் ?
ஐயா சாப்பாட்டைப் பாத்து நாலு நாள் ஆச்சு
கொஞ்சம் பொறு
நான் இப்ப சாப்பிடபோறேன் ,
பாத்துட்டுப்போ
மாடியில் கிளினிக் வைத்து
மேலே போகும் வழி என்று போர்ட் வைத்தால் எப்படி
பேஷண்ட்ஸ் வருவாங்க ?
குடி போதையில் கிணற்றில் விழுந்து கிடந்தவன் சொன்னான்
ஆல் இஸ் வெல்
கழுத்து சுளுக்குக்கு படியில் விளக்கெண்ணை தடவி தலை வைத்துப் படுக்கச் சொன்னேனே , சுளுக்கு சரியாகிவிட்டதா ?
சுளுக்கு சரியாகவில்லை . மேற்கொண்டு வீட்டில் எல்லோரும் படியில் வழுக்கி விழுந்ததுதான் மிச்சம்
வெங்காய வேனும் பெருங்காய வேனும் மோதியதில் வெங்காய வேன் வெங்கய்யவுக்குப் பெருங்காயம்
“முகமது சந்திர பிம்பமே”
அவரு எங்க இங்க வந்தாரு ?
நிறைவாக ஒரு புலவர் காளமேகம் பாடலின் ஒரு பகுதி .நன்கு தெரிந்த எளிமையான பாடல்
“பூனைக்கி யாறுகால் புள்ளினத்துக் கொன்பதுகால்
ஆனைக்குக் கால்பதி னேழானதே –--“
பூனைக்கி(கு) ஆறு கால் புள்ளினத்துக்கு ஒன்பதுகால் ஆனைக்குக் கால் பதினேழ் ஆனதே காண் .:
:பூனைக்கு 6 கால், புள்-இனத்துக்கு 9 கால், யானைக்கு 17 கால் என்று இல்லாததைச் சொல்லி இருப்பதை உறுதிப்படுத்தியது.
பூ(ன்) நக்கி ஆறு கால் = பூ நக்கி உண்ணும் தேனீக்கு ஆறு கால்
புள்ளினத்துக்கு ஒன்பது கால் = பறவைக்கு இரண்டேகால் (9 x ¼ = 2¼)
ஆனைக்குக் கால் பதினேழ் ஆனதே = யானைக்கு நாலே கால் ஆனதே (17 x ¼ = 4¼)
முதலில் சொன்ன லோராண்டி பாடல் ஒரு மிகப் பெரிய தத்துவப் பாடல்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
02062021 wed
.Sherfuddin P
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment