ரசூல் ,நபி
-----மூஸா ரசூலாகவும் நபியாகவும் இருந்தார் (குரான் 19:51)
ரசூல், நபி- என்ன வேறுபாடு ?
விடை காணும் முன்பு இரு சொற்களின் பொருளைப் பார்ப்போம் :
ரசூல் – என்ற சொல்லுக்கு அனுப்பப்பட்டவர் என்று பொருள் .
குர்ஆனில் இந்த சொல்
சிறப்புப்பணியில் இறைவனால் அனுப்பபட்ட வானவர்கள் .
இறைவனின் செய்தியை மனித குலத்துக்கு கொண்டு வந்த மனிதர்கள் இருவரையும் குறிக்கிறது
நபி என்ற சொல்
செய்தி கொண்டு வருபவர்,
மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்,
நேர்வழி காண்பிப்பவர் என மூன்று பொருட்கள் கொண்டது
குர்ஆனில் இந்த இரண்டு சொற்களும் மிகத் தெளிவாக பொருள் பிரித்துப் பயன் படுத்தப்படவில்லை
ஒருவரையே ஒரு இடத்தில் ரசூல் என்றும் ,இன்னொரு இடத்தில் நபி என்றும் குறிப்பிடுகிறது,
ஒருவருக்கே இரண்டு சொற்களும் ஒன்றாக பயன்படுவதும் உண்டு
ஆனால் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பது தெளிவாகக் குறிப்பிடாவிட்டாலும் இரண்டும் வேறு பொருள் கொண்டவை என்பது போல் வருகிறது
தெளிவாக இருக்கும் ஒரே செய்தி –
எல்லா ரசூல்களும் நபிகள்
ஆனால் எல்லா நபியும் ரசூல் இல்லை
நபியை விட ரசூலுக்கு பொறுப்புகள் அதிகம்
“இவ்வுலகுக்கு அனுப்பப்பட்ட ரசூல்களின் எண்ணிக்கை
313/315
நபிகளின் எண்ணிக்கை 1,24.000”
என்ற நபி மொழி இதைத் தெளிவாக்குகிறது
குர்ஆனில் பெயர் இடம்பெறும் 25 நபி மார்களில் இறைமறை அருளப்பட்டஐந்து நபிகள்--- நுஹ்,, இப்ராகிம். மூஸா , ஈசா , முஹம்மது (ஸல்) ஆகியோர் உலுல் அஸ்ம்(Ulul Azm)என்ற சிறப்புப் பெயருடன் ரசூல்கள் என்று சொல்லப்ப்படுகிறார்கள்
ஆனால் சபூர் வேதம் அருளப்பட்ட நபி தாவூத் ரசூலா என்ற தெளிவு இல்லை .
நுஹ், இப்ராஹீம் நபிகளுக்கு வழங்கப்பட்ட வேதம் பற்றி செய்தி இல்லை
உலுல் அஸ்ம்(Ulul Azm) என்ற சொல் குர்ஆனில் (46:35) ல் "(நபியே!) நம் தூதர்களில் திடசித்தமுடையவர்கள் பொறுமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக!” என்ற வசனத்தில் திட சித்தமுடையவர்கள் என்ற பொருளில் வருகிறது
42 : 13நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; "நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே
33:7(நபியே! நம் கட்டளைகளை எடுத்துக் கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும், (சிறப்பாக) உம்மிடமும்; நூஹு, இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே அவர்களிடம் நாம் வாங்கினோம்
எனவே தெளிவாக இருக்கும் ஒரே செய்தி
எல்லா ரசூல்களும் நபிகள்
ஆனால் எல்லா நபியும் ரசூல் இல்லை
நபியை விட ரசூலுக்கு பொறுப்புகள் அதிகம் .
மற்றபடி ரசூல் , நபி இரண்டுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இருப்பதாய்த் தெரியவில்லை
(source- Towards understanding Quran, Wikipedia)
சரியான விடை அனுப்பி பாராட்டுப்பெறுவோர் சகோ அஷ்ரப் ஹமீதா, சிராஜுதீன், யோக நாயக்
ஐயம் தீர்த்த சகோ தல்லத்துக்கு நன்றி வாழ்த்துகள்
முயற்சித்த அனைவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
04062021fri
Sherfuddin P
No comments:
Post a Comment