முதல் எழுத்துச் செய்யுள்
"நான் மகான் அல்ல,சிறுவன் பொய் சொல்லிக் குழப்பப் பார்க்கிறான் "
இது என்ன ?
விடை
விடையைப் பார்க்குமுன் எளிதாகப் புரிந்து கொள்ள ஒரு எடுத்துக்காட்டு
“திருவிழா சந்தையில் வெண் புட்டு விற்கச் சென்றான் ஞானம் “
இது இராகு கால நேரங்களை எளிதாக நினைவில் வைத்துகொள்ள ஒரு வாக்கியம்
திருவிழா – தி – திங்கள்
சந்தை –ச- சனி
வெண் – வெ – வெள்ளி
புட்டு – பு – புதன்
விற்க- வி- வியாழன்
சென்றான் – செ- செவ்வாய்
ஞானம் – ஞா – ஞாயிறு
இவ்வாறு ஒரு செய்தியை எளிதில் நினைவில் நிறுத்திக்கொள்ள செய்தியில் உள்ள சொற்களின் முதல் எழுத்து அல்லது அசைவுகளைக்
கொண்டு ஆக்கப்படும் கவிதை அல்லது வாக்கியத்துக்கு
முதல் எழுத்து செய்யுள் அல்லது முதல் வரிப்புதிர் என்று பெயர் (ஆங்கிலத்தில் acrostic)
வேதியியலில் (chemistry) தனிமங்கள் (elements ) பெயர்கள் ஆவர்த்தன அட்டவணையில் (periodic table) குழுக்களாக தொகுக்கப் பட்டிருக்கும் .
இதில் மூன்றாம் குழுவில் உள்ள தனிமங்களை நினைவில் வைத்துக்கொள்ள உள்ள ஒரு பகடி வாக்கியம்தான்
“நான் மகான் அல்ல . சிறுவன் பொய் சொல்லிக் குழப்பப் பார்க்கிறான்
நான் – சோடியம் – குறி- Na
மகான் – மக்னிசியம் – குறி –Mg
அல்ல – அலுமினியம் – குறி -Al
சிறுவன் – சிலிகான் – குறி –Si
பொய் – பாஸ்பரஸ் – குறி –P
சொல்லி – சல்பர் – குறி – S
குழப்ப – குளோரின் – குறி –Cl
பார்க்கிறான் – பா =ப்+ஆ –ஆர்கன் –குறி –Ar
(தனிமங்களின் வேதியியல் பெயர்கள் பெரும்பாலும் இலத்தீன் , கிரேக்க , ஜெர்மனிய மொழியில் இருக்கும் . அவற்றின் சுருக்கமே உலக அளவில் Na, Mg போன்ற குறியீடுகளாக பயன் பாட்டில் உள்ளது )
இது சற்றுக் குழப்பமாக இருக்கும் . குறிப்பாக வேதிஇயல் படிக்காதவர்கள்புரிந்து கொள்வது சிரமம்
எனவேதான் எளிய ஒரு எளிய எடுத்துக்காட்டை முதலில் சொன்னேன்
இதில் புரிந்து கொள்ள வேண்டியது இராகு காலமோ வேதிஇயலோ இல்லை
Acrostic என சொல்லப்படும் முதல் எழுத்துப் புதிர்தான்
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
30062021wed
SherfuddinP
No comments:
Post a Comment