முத்திரை பதிப்போம் 2
ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் லிங்க முத்திரை பற்றி முன்பு எழுதினேன்
தொடர்ந்து மற்ற முத்திரைகள் பற்றி எழுது முன் ஒரு அறிமுகம் –
முத்திரை என்றால் என்ன ,?
கை விரல்களின் சைகைகள் என்று எளிதாக புரிந்து கொள்ளலாம்
பாபா படத்தில் ரஜனி காந்ந் கை விரல்களைக் கான்பிப்பாரே அதுவும் ஒரு முத்திரைதான்
யோகக்லையின் ஒரு பகுதியான முத்திரைகள் மிகவும் எளிதாகச் எல்லோரும் செய்யக்கூடியவை . கருவிகள் எதுவும் தேவைஇல்லை,
உடலை வருத்த வேண்டியதில்லை . உட்கார்ந்த நிலையிலேயே செய்யலாம்
சில முத்திரைகளின் பெயர்கள் சமயம் சார்ந்தவையாக இருக்கும்
( லிங்க முத்திரை, கணேச முத்திரை என்பது போல் ) , அதற்காக அதை ஒதுக்க வேண்டாம் . யோகா , தியானம் , முத்திரை எல்லாம் நம் உடல்,மன நலத்துக்காக உள்ளவை .அவரவர் மத நெறியிலிருந்து சற்றும் விலகாமல் இவற்றால் பயன் பெறலாம் என்பது என் கருத்து
முத்திரைகள் நம் உடலின் சக்தி ஓட்டத்தை நெறிப்படுத்தி உடல், மன நலத்தை வலுப்படுத்துகின்றன
சக்தி ஓட்டத்தை முத்திரைகள் எப்படி நெறிப்படுத்துகின்றன என்பதை ஒரு சிறிய எடுத்துக்காட்டின் மூலம் அறியலாம்
இறைவன் நாடினால் அந்த எடுத்துக்காட்டுடன் அடுத்த பதிவில் சிந்திப்போம்
19062021 sat
Sherfuddin.P
No comments:
Post a Comment