களவு
களவியல் ,கற்பியல் என்று பண்டை இலக்கியம் பற்றிச் சொல்ல நான் வரவில்லை
பிறர் பொருளை அவர்கள் அறியாமல் எடுத்துக்கொள்ளும் திருட்டைத்தான் களவு என்று குறிப்பிடுகிறேன்
பணம், நகை சொத்து என எல்லாவற்றையும் திருடுவது அவை எதாவது ஒரு வகையில் திருடுபவருக்குப் பயன் தரும்
இதிலிருந்து மாறுபட்ட திருட்டு ஓன்று இருக்கிறது
ஒரு திரைப்படத்தில் ஊர்வசி கமலிடம் புலம்புவார்
“எனக்கு ஒரு பாட்டி இருக்கிறார். எதைப்பார்த்தாலும் திருடுவார் . தூங்கிக் கொண்டிருந்த ஒருவரின் பல் செட்டைக் கூடத் திருடி விட்டார் “ என்று
இப்படி எந்த விதமான பயனும் இல்லாமல் திருடுவது ஒரு உளவியல் பிரச்சினை, நோய்
“கண்களால் கைது செய் “ பட நாயகன் –பெரிய செல்வந்தர் இந்தப் நோய் உள்ளவராய் இருப்பார்
பாரதி ராஜா , சுஜாதா இணைந்த இப்படம் பாரதி ராஜா படம் மாதிரியும் இல்லை சுஜாதா கதைப்படம் மாதிரியும் இல்லை என்று கருத்துச் சொல்லப்பட்டது
க்லேப்டோமேனியா (kleptomania ) என்று சொல்லப்படும் இது பற்றி சில செய்திகளைப் பார்ப்போம்
Kleptomania is the inability to resist the urge to steal items, usually for reasons other than personal use or financial gain
`எந்த விதப் பயனுமில்லாமல் திருடத் தோன்றும் கட்டுப்பாடற்ற மன அரிப்பு “
சுருக்கமாக “ பயனற்ற திருட்டு “ என்று சொல்லலாம்
உற்றார் உறவினர்கள் , நட்புகள் விலகிப்போய் நீண்ட காலம் தனிமையில் இருக்கும்போதுதான் இது போல் உளவியல் நோய்கள் தாக்குவதாய்ச் சொல்கிறார்கள்
இந்த நோய் பாதித்த ஒருவர் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்
இருபது வயது இளைஞர் ,உடன் பணி புரியும் ஒருவரின் பேனாவை எடுத்து வைத்துக்கொள்கிறார் . இதுதான் அவரது முதல் திருட்டு, .அந்தப்பேனாவை அவர் பயன்படுத்தவே இல்லை .
அடுத்து தான் பணிபுரியும் இடத்தில் இருந்த ஒரு stapler ஐ எடுத்து வைத்துக்கொள்கிறார்
இப்படியே ஒன்பது ஆண்டுகளில் பென்சில்,ரப்பர் , பென்சில் சீவி, குண்டூசி , குறிப்புப் புத்தகங்கள், பேப்பர் கிளிப் என ஒரு பெரிய குவியலாக சேர்ந்து விட்ட பொருட்கள் எதையும் அவர் பயன் படுத்தியது இல்லை
“ஒவ்வொரு விடியலும் எனக்கு ஒரு வேதனயாக இருக்கும் . -இன்று எங்கு எதைத் திருடி யாரிடம் மாட்டிக்கொண்டு மானமும் உயிரும் போகும் நிலை வருமோ - என்ற எண்ணம் வாட்டி வதைக்கும் “
இறுதியாக அவர் அலுவலக மேலாளர் அறையிலிருந்து இரண்டு விலை உயர்ந்த பேனாக்கள் காணாமல் போக, cctv footageல் அது பதிவானதால் மாட்டிக்கொண்டார்
தாங்க முடியாத அவமானம் . நண்பர்கள் , குடும்பத்தினர் எல்லோரும் இவரை ஒதுக்கி வைத்து விட்டார்கள்
பிறகு பதினெட்டு மாதம் உளவியல் சிகிச்சை . கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் எதையும் திருடவில்லை இருந்தாலும் கட்டுப்பாட்டை மீறி விடுவோமோ என்ற ஒரு அச்சம் அவரை வாட்டிக்கொண்டே இருக்கிறது
சில மருந்துகள் இதைக் குணப்படுத்தும் என்கின்றார்கள் . ஆனால் அந்த மருந்துகளே இந்த நோயை உண்டாக்கவும் செய்யும் என்றும் சொல்கிறார்கள்
வலுவான குடும்ப அமைப்பு, பெற்றோர் அரவணைப்பு ,கண்காணிப்பு இல்லாததே பல உளவியல் நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக சொல்லப்படுகிறது
மேல் நாடுகளில் இருந்து நம் நாட்டிலும் இந்தப் பிரச்சினை வேகமாகப் பரவி வருகிறது
தாய் தந்தை இருவரும் வேலைக்குப்போவது,
பெற்றோர் அரவணைப்பு இல்லாததை ஈடு கட்ட பிள்ளைகளுக்கு நிறைய பணம் கொடுப்பது , பெரும்பாலும் ஒரு பிள்ளை போதும் என்ற மனப்பாங்கு நீதி ,நேர்மை ஒழுக்கம் மனிதத்தனம் இவற்றை மறந்த பொருள் சார்ந்த ஒரு கலாச்சாரம் என்று பல காரணங்களை சொல்லிகொண்டே போகலாம்
இறைவன் நாடினால் இவைகள் பற்றி சிறிது விளக்கமாக எப்போதாவது பார்ப்போம்
மீண்டும் சிந்திப்போம் இறைவன் நாடினால்
05062021sat
Sherfuddin P
No comments:
Post a Comment