Thursday, 4 November 2021

குரான் 27:18 எறும்பு நொறுங்குமா

 


...........

எறும்புகளே உங்கள் புற்றுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்......... அவர்கள் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு........



இது எந்த குரான் வசனத்தில் வருகிறது?


விடை 

இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று.

(27:18) 

சூரா அன்நம்ல் எறும்பு


சரியான விடை அனுப்பியவர்கள்

சகோ 

ஷிரீன் பாருக்(முதல் விடை)

நௌஷீன் 

ஹசன் அலி

பீர் ராஜா

வாழ்த்துகள் பாராட்டுகள்


மூயற்சித்த சகோ பீர்முகம்மது (ISP)க்கு நன்றி



வசனம் 27:19

அப்போது அதன் சொல்லைக் கேட்டு, அவர் புன்னகை கொண்டு சிரித்தார். இன்னும், "என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!" என்று பிரார்த்தித்தார்.


விளக்கம்

நபி சுலைமான்‌ அவர்களுக்கு இறைவன் எண்ணற்ற அருட்கொடைகளை வாரி வழங்கியிருந்தான் 

காற்றும் ஜின்களும் அவருக்குக் கட்டுப் பட்டிருந்தன

விலங்குகள் பறவைகள் மொழி அவருக்குத் தெரியும்


 அன்மையில  முகநூலில் சகோ.சிக்கந்தர் forward செய்திருந்த ஒரு செய்தியின் சுருக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:


வசனம் 27:18

இதில் யஹ்மன்னக்கும்

يَحۡطِمَنَّكُمۡ


என்ற அரபுச் சொல்லுக்கு நொறுக்குதல் உடைத்தல் என்று பொருள்


எறும்பு நசுங்கித்தான் போகும் நொறுங்காது

தவறான செய்தி இது என்று ஒரு கருத்து இருந்தது


ஆஸ்த்திரேலிய அறிஞர் ஒருவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் கண்டது

குரானில் வருவது தவறாக இருக்காது என்பதை உறுதி செய்கிறது"


எறும்பின் உடற் பகுதியில் பெரும் பகுதி கண்ணாடி துகள்களைக் கொண்டிருப்பது

ஏன்பதுதான் அவரது கண்டுபிடிப்பு


இறைவன் நாடினால் மீண்டும்

சிந்திப்போம்


05112021வெள்ளி

சர்புதீன் பீ



 

No comments:

Post a Comment