முத்திரை
பதிப்போம் -6
அச்சம் தீர்க்க உதவும்
அபய முத்ரா
தெனாலி படம் பார்த்தவர்களுக்குத் தெரியும் – பயம் என்பது எத்தனை வகை என்பது
நல்ல நகைச்சுவைப் படம் – ஒரு உளவியல் பிரச்சனையை – அச்சம் – பயம் பற்றி தெளிவாக
எளிமையாக விளக்கும் படம்
பிறரைக் கண்டு அஞ்சுவது, தனிமையை எண்ணி அஞ்சுவது வாழ்க்கைப்போராட்டத்தை எண்ணி
அஞ்சுவது இருளைக் கண்டால் ,நெருப்பைக் கண்டால் அஞ்சுவது ,பிறர் ஏதாவது நம்மை குற்றம் சொல்லி விடுவார்களோ என் அஞ்சுவது
என பலவகை அச்சங்கள் . இவை எல்லாமே மனிதனின் வலிமையைக் குறைக்கும் தன்மை உடையவை
அச்சம் போக்க , அச்சம் குறைய எளிய வழி அபய முத்ரா
பயம் = அச்சம்
அபயம்= அச்சம் இன்மை
பொதுவாக முத்திரை என்பதே மிக எளிதான ஒரு பயிற்சி என்பதை நான் பலமுறை
சொல்லியிருக்கிறேன்
அதில் இன்னும் எளிதான ஓன்று இந்த அபய முத்திரை .
எந்த நேரத்திலும் செய்யலாம் ; எந்த நிலையிலும் – உட்கார்ந்து , உட்கார முடியாதவர்கள்
நின்றுகொண்டு , --- செய்யலாம்
செய்முறை
உங்கள் உடல் நிலையைப் பொறுத்து உங்களுக்கு ஏற்ற எளிதான நிலையைத் தெரிவு செய்து
கொள்ளுங்கள்
உட்காருவது என்றால் பத்மாசனம் அல்லது சுகாசனம்
நிற்பது என்றால் மலை ஆசனம்
பெயர்களைப் பார்த்து மலைக்க வேண்டாம்
சிரமம் இல்லாமல் காலை மடக்கி சம்மனம் போட்டு உட்கார்ந்தால் சுகாசனம்
நிமிர்ந்து நேராக நின்றால் மலை ஆசனம் . அவ்வளவுதான்
உட்கார்ந்த நிலையில் கைகளை முட்டிக்கால்கள் மேல் திறந்த நிலையில் உள்ளங்கை
மேல்நோக்கி இருக்கும்படி வைக்கவேண்டும் (Palm
facing upward)
கண்களை மூடிக்கொண்டு மூச்சில் கவனம் செலுத்த வேண்டும். இயல்பான மூச்சு , சற்று
மெதுவாக, நிதானமாக
.மூச்சை அடக்க வேண்டாம்
வலது கையை மெதுவாக உயர்த்தி தோள்பட்டைக்கு நேராக கொண்டு வந்து, விரல்கள்
நேராக, கை திறந்த நிலையில் வையுங்கள்
சுமைகளை இறக்கி வைத்து விட்டு மனதை
கூடிய மட்டும் relaxed ஆக வைத்துக்கொள்ளுங்கள் . அல்லாஹ்,, ஓம் ,
இயேசு என எதாவது ஒன்றை முனுமுனுத்தபடி மனதை ஒருநிலைப்படுத்த முயலுங்கள்
தொடர்ந்து முப்பது நிமிடங்கள் செய்வது நல்லது .
முடியாவிட்டால் பத்துப் பன்னிரண்டு
நிமிடமாக மூன்று முறை செய்யலாம்
மெதுவாக கண்களைத் திறந்து கையை கீழே
இறக்குங்கள்
அபயமுத்திரை நிறைவுற்றது
நின்ற நிலையில் செய்யும்போது இடது கையை தளர்வாகத் தொங்க விடலாம்
சொல்லப்படும் பலன்கள்
பெயருக்கேற்றபடி பயம் போக்கி , மனஉறுதியை அதிகரிக்க உதவுகிறது .
மன உறுதி அதிகரிக்கும்போது அது பல தடைகளை வென்று வாழ்க்கையில் உயர்ந்த
நிலைக்கு வழி காட்டுகிறது
அச்சத்தால் உண்டாகும் சினம், எரிச்சல், மன உளைச்சளைக் கட்டு படுத்தி மனதையும் அதன்
மூலம் உடலையும் அமைதிப் படுத்துகிறது
இந்த மன அமைதி என்பது தற்கால பரபரப்பு வாழ்க்கையில் ஒரு மிக முதன்மையான தேவை
ஆகிறது . எதற்கு ஒடுகிறோம் எங்கே போகிறோம் இலக்கு என்ன என்பதே தெரியாத ஒரு பரபரப்பு
. விளைவு- மன உளைச்சல், அமைதியின்மை
முன்பெல்லாம் தற்கொலைக்குக் காரணம் பெரும்பாலும்
வறுமை அல்லது தீராத உடல் நோயாகத்தான் இருக்கும்
. இப்போதோ பெரிய செல்வந்தர்கள், அரசு அதிகாரிகள் வங்கி மேலாளர்கள் என பலரும் மன
உளைச்சலால் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்
இந்தச் சூழலில் மன அமைதி ஏற்படுத்தும் இதுபோன்ற எளிய முத்திரைகள் ஒரு மிக அவசியத்
தேவை ஆகிவிடுகிறது
மன அமைதி பற்றி பின்பு விரிவாக எழுதுகிறேன் இறைவன் நாடினால்
(செய்தித் தாளில் கண்ட இரண்டு செய்திகள் – இரண்டுமே தற்கொலை பற்றியது – இதை எழுதத்
தூண்டியது . ஓன்று மருத்துவர் தனது மகிழுந்தில் வந்து ஐந்து நட்சத்திர விடுதியில் அறை
எடுத்து தற்கொலை . அடுத்து கிராம நிர்வாக அலுவலர்)
ஆன்மீக உணர்வை வளர்க்கிறது
யோகா தியானப் பயிற்சியில் பிராண சக்தி ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்த
உதவுகிறது
பொதுவாக முத்திரைகளினால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை . எழுத முடியாத
படித்தால் புரியாத நுட்பமான செய்திகள்
எதுவும் முத்திரைகளில் கிடையாது
அதனால்தான் முத்திரைகள் பற்றி சற்று விரிவாகவே எழுதுகிறேன் .
மற்றபடி நான் பயின்ற அகுபஞ்சர் ,வர்மா , யோகா போன்ற மருத்தவ முறைகளில்
குறிப்புகள் வெளியிடுவதை பெரும்பாலும் தவிர்த்து விடுகிறேன்
இருந்தாலும் கவனத்திற்கு ஒரு சில செய்திகள்
இந்த அபய முத்திரை செய்யும்போது உடலும் மனதும் ஒரு சுகமான , சௌகரியமான
நிலையில் இருக்க வேண்டும் . உடல் , குறிப்பாக கை, கை விரல்கள் இறுக்கமில்லாமல் தளர்வாக (relaxed ஆக இருக்க)
வேண்டும்
வலது கை மட்டுமே இந்த முத்திரைக்குப் பயன்படுத்த வேண்டும்
அரச மரம் சுற்றிய போல அவசரம் வேண்டாம்
தொடர்ந்து முறையாக ஒரு மாதம் செய்தால் நல்ல பலனை உணரலாம்
செய்யும்போது எதாவது மன உடல் சுகமின்மையை உணர்ந்தால் உடனே பயற்சியை விட்டு
விடுங்கள்
“அச்சம் தவிர்” பாரதியார்
“அச்சமே கீழ்களது ஆசாரம் “ என்கிறான் வள்ளுவன்
அபய முத்திரை பயின்று அச்சம் தவிர்த்து
வாழ்வில் மேன்மை அடைவோம்
இறைவன் நாடினால் மீண்டும் முத்திரை பதிப்போம்
27112021சனி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment