Tuesday, 9 November 2021

தமிழ் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே

 


"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!"

அடிக்கடி கண்ணில் படும்
காதில் விழும் வரிகள்

முழுமையான பாடவ்
பொருள் என்ன?

இறைவன் நாடினால்  விடை விளக்கங்ளுடன் நாளை தமிழில் சிந்திப்போம்

முதலில் விடை அனுப்பியவர்களைப் பார்ப்போம்

சரியான விடை முழுமையாக
சகோ
1ரவிராஜ் முதல் சரியான விடை
2 கணேசன் சுப்பிரமணியன்
3 செங்கை சண்முகம்
வாழ்த்துகள் பாராட்டுகள்

பாடல் மட்டும் அனுப்பிய
சகோ
விசுவநாதனுக்கு
வாழ்த்துகள்

ஆர்வத்துடன் முயற்சி செய்த
சகோ
1 அயூப் கான்
2 கரம்
இருவருக்கும் நன்றி

தமிழினம் தோன்றிய காலம்பற்றி
பெருமையாக மேடைகளில் முழங்கும்
வாசகங்கள் இவை

ஆனால் இது ஒரு வெண்பா பாடலின்
கடைசி இரு வரிகள்

பாடல் பொருள் விளக்கம்

பாடல்

பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!

-புறப்பொருள் வெண்பா மாலை - கரந்தைப் படலம் 35 | குடிநிலை

இனி இந்த பாடலின் பொருளை நேரிடையாகப் பார்போம்.

பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்? = பொய்கள் அகன்று என்றும் புகழ் பரவுவது உலகில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

வையகம் போர்த்த, = பூமியைப் போர்த்தி இருந்த நீரின் ஒழுங்கு நிலை அகன்று

வயங்கு ஒலி நீர் - கையகல = மலைகள், மற்றும் இதர பூமியின் வளங்கள், ஒவ்வொன்றாய்த் தோன்றின!

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே = அவ்வாறு நீரின் ஒழுங்கு நிலை விலகி ... வளங்கள் தோன்றி, வயல் வெளி நாகரிகம் தோன்றிய காலத்துக்கு முன்பே....

வாளோடு முன் தோன்றி மூத்த குடி! = ஆயுதங்களோடு காடு மலைகளில் சுற்றித் திரிந்து வாழ்க்கை நடத்தியவன் இந்த தமிழன்.

இதுதான் இந்த பாடலின் நேரிடையான பொருள்.

இனி இந்த பாடலின் கருத்தை உரை நடையாகப் பார்போம்.

பொய்கள் அகன்று அதனால் புகழ் பரவுவது என்பது உலகில் ஆச்சரியமான ஒரு செய்தியே அல்ல. மலைகளிலிருந்து கற்கள் கீழே விழுந்து அவை சுக்கு நூறாக உடைந்து கூழாங்கற்களாகி மேலும் சிறு கற்களாக மாறி அதில் மழை நீர் கலந்து மிருதுவாகி மண்ணாக மாறுகிறது. அதன் பிறகுதான் அந்த இடம் விவசாய நிலமாக மாறுகிறது. இவ்வாறு மலைகளின் கற்கள் இடம் பெயர்ந்து விவசாய நிலமாக மாறி அங்கு பயிர்களை மனிதன் விளைவிக்கும் முன்பே தமிழன் இந்த உலகில் இருந்துள்ளான். காடுகளில் இலை தழைகளையும் மிருகங்களையும் அடித்து சாப்பிட்டு வந்த அந்த கற்காலத்திய தொன்மையான மனிதனின் நாகரிகமே தமிழனின் நாகரிகம் என்கிறது இந்த பாடல். அதாவது உலகில் முதன் முதலில் தோன்றிய பல நாகரிகங்களில் மிக தொன்மையானது தமிழனின் நாகரிகம். மிக பழமையானது தமிழ் மொழி என்ற செய்தியை இந்த பாடல் நமக்கு சொல்கிறது.

(இது இணையத்தில் காணப்படும் விளக்கம்)

அண்மையில் முகநூலில் கண்ட செய்தி:

அவ்வரிகள் தமிழினம் தோன்றிய
காலத்தைதான் கூறுகின்றது, எனினும்
அந்த வெண்பாவை முழுமையக ஆராய
அதனுள் இருக்கும் சரித்திரம் காணக்கிடைக்கும்

இந்த வெண்பாவின் கருத்தாக பலர் தங்கள் பார்வையில்
பலமாதிரியான விளக்கங்களை கொடுத்திருப்பார்கள்

ஆனால் "பொய்யகல" என்பதற்கான சரியான
விளக்கம் எங்கும் காணப்படவில்லை

இங்கு நோவா என்னும் நூஹ் நபியின் சரித்திரம்
காணப்பட வேண்டும்

மக்களை நல்வழிபடுத்த வந்த நூஹ்நபி
தனது தோல்வியை ஒப்புக்கொண்டு
இறைவனிடம் இவர்களை அழித்துவிடு
எனக் கேட்கிறார்

இறைவனும் நீங்கள் ஒரு கப்பல் செய்து
அதில் நூகின் குடும்பத்தாரையும்
இணை இணையாக  உயிர்களையும் ஏற்றுங்கள் என
கட்டளை பிறப்பிக்க,நூஹ்நபியும் அவ்வாறே
செய்ய,பெருமழை பெய்து யாவரையும் மூழ்கடிக்க
கப்பலில் இருந்தவர்கள் தப்பித்திருப்பார்கள்
இது வரலாறு

இந்த உலகின் பொய்கள் எல்லாம் அகல
வேண்டும் சில உறுதியான இறை நம்பிக்கை கொண்டவர்கள் மூலமாக
மீண்டும் உலகை உயிர்ப்பிக்க வேண்டும்
என்பதே இறைவனின் நாட்டமாக இருந்தது

அவ்வாறான "பொய் அகல"என்பதே
அப்பாடலின் முதல் சீர் ஆகும்

இனி முழுப் பாடலுக்குமான விளக்கம்

பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கொலிநீர்

உலகில் பொய்கள் நீக்கி,புகழும் நன்மையை
கொண்டுவர வியப்பென்ன இருக்கிறது என
எண்ணிய இறைவன் உலகை நீரால் போர்த்த(கப்பலில் இருப்பவர்கள் பிழைத்தனர்)

பலநாட்கள் பெய்த மழை ஓய்ந்து
கையகல-நீர்வடிய

மண் தெரியும் முன் கல் தெரிந்தது
அதாவது மலைதான் முதலில் தெரிந்தது
(அல்லது பார்லைக்கு தோன்றியது)
அப்போது  கப்பலில் ஆயுதங்களுடன்
இருந்த குடியானதுதான் தமிழ் குடி

ஆக
உலகம் திரும்ப உருவாக்கும்போது
இருந்த மூத்தகுடி தமிழ்குடிதான் என்பது
இதன் பொருளாகக் கொள்ளப்படுகிறது

இன்னும் சுருங்கச் சொன்னால்
நோவா என்னும் நூஹ்நபியும்
தமிழ் இனந்தான் எனக் கூறுகிறது
இப்பாடல்

(கவிக்கோ,மற்றும் பலர் எழுதிய கட்டுரைகளின்
சுருக்கிய வடிவம்)

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

10112021புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment