Friday, 19 November 2021

சிரிக்க சிந்திக்க

 சிரிக்க சிந்திக்க



நகைச்சுவையைத் தேடி எங்கும் அலைய வேண்டாம் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் நிகழ்வுகளையும் சற்று கவனித்துப் பார்த்தாலே போதும் என எங்கோ படித்த நினைவு



இது நகைச்சுவைக்கு மட்டும் அல்ல எல்லாச் சுவைகளுக்கும் பொருந்தும்



நான் கண்ட கேட்ட ஒரு சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்



அவை நகைச்சுவையா வேறு சுவையா இல்லை சுவையே இல்லையா என்பது உங்கள் முடிவுக்கு



 மிக முதியவர் ஒருவர் ஒரு இளம் பெண்ணுடன் வங்கிக்கு வந்தார். 

உங்கள் பேத்தியா என்று கேட்டேன்


ஹி ஹி என் துணைவி என்றார்

 

அன்றோடு இந்த மாதிரி (அசட்டு) கேள்விகள் கேட்பதை விட்டு விட்டேன்



வங்கிப்பணியில் நீதிமன்றம் போயிருந்தேன்


வங்கி வழக்கறிஞர் 

நான் வருவதற்கு சிறிது நேரமாகும் என் எழுத்தர் உங்களை நீதி மன்றத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பார் 

என்று சொல்லி இருந்தார்



அந்த இடத்தில் போய் நான் காத்திருந்தேன்

யாரும் என்னை சந்திக்கவில்லை



சற்று நேரத்தில் அங்கு வந்த வழக்கறிஞர்

என்னப்பா சாரிடம் விவரம் எல்லாம் சொல்லிவிட்டாயா ?

என்று அங்கிருந்த ஒருவரிடம் கேட்டார்

இல்லையே சார் மேனேஜர் சார் வரவில்லையே என்றார்



இவர்தான் மேனேஜர்

 என்று வழக்கறிஞர் என்னைக் 

காட் ட அதற்கு அந்த எழுத்தர் என்ன சொன்னார் தெரியுமா?



இலரா! இவரைப் பாத்தா பாய் மாதிரில இருக்கு!!



என்ன ஒரு தெளிவான சிந்தனை!!!


வங்கி மேலாளருக்கு பால் பாயிண்ட் பேனா ரீபில் refill தேவைப்பட்டது.


 பணியாளரைக்கூப்பிட்டு

இன்னாரிடமிருந்து ரீபில் வாங்கி வரவும் என்று சொன்னார்


பணியாளர் புதிதாக வங்கியில் சேர்ந்தவர் என்பதால் மேளாலர் தெளிவாகச் சொல்வதாக நினைத்து ஒரு தீர்ந்து போன ரீபில்லைக் காட்டி 

இது போல் ஒன்று வாங்கி வரவும் என்று சொன்னார்


பணியாளர் சற்று நேரங்கழித்து திரும்பி வந்தார்


காலி ரீபில்லுடன்



அரசு மானியம் இணைந்த வங்கிக் கடனில் நிறைய பயனாளிகள் பால் மாடு வாங்கும்போது ஒரு கொள்முதல் குழு அமைத்து மாட்டுச் சந்ததைக்குப்போய் மாடு வாங்குவது ஒரு நடைமுறை


அந்தக் குழுவில் அரசு கால்நடை மருத்துவரும் இருப்பார்


அவர் சந்தையில் ஒரு மாட்டைப் பார்த்து மாட்டுக்காரரிடம்

இந்த மாடு 5 லிட்டர் பால்கொடுக்குமா என்றார் 

கொடுக்காது என்றார் மாட்டுக் காரர்


" எவ்வளவுதான் கொடுக்கும் ?"


*இது காளை மாடு  பால் கொடுக்காது"


( அந்த மருத்துவரின் அப்பா ஆளும் கட்சியில் தனக்கிருந்த செல்வாக்கினால் பையனுக்கு கல்லூரியில் இடம் வாங்கி அரசு வேலையும் வாங்கி விட்டாராம்

நல்ல வேளை கால் நடை மருத்துவராக்கி விட்டார்)


பெயர் ஊர் குறிப்பிடாவிட்டாலும் இவை அனைத்தும் உண்மை நிகழ்வுகள்


இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்


20112021சனி

சர்புதீன் பீ 



No comments:

Post a Comment