https://m.facebook.com/story.php?story_fbid=4567196686729949&id=100003189883557
அசலும் நகலும்
ஆங்கிலப்படம் போல காட்சி அமைப்பு
என சிறப்பான காட்சிகளப் பாராட்டுவது நமக்குப் பழக்கமாக இருக்கிறது
திரைப்படத் துறையினர் பிறமொழிப் படங்களை மிகவும் உன்னிப்பாக பார்ப்பதுண்டாம்
பிறமொழி இசையைத் தழுவிய பல தமிழ்த் திரைப்பாடல்களைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறோம்
அவற்றில் ஒன்றுதான் ஜெயலிதா நடித்த படத்தில் வரும்
வந்தால் என்னோடு என்ற பாடல்
உலக அளவில் புகழ் பெற்ற come September இசையைத் தழுவியது
அண்மையில் கட்செவியிவ் ஒரு ஆங்கிலப்பாடல் கேட்டேன்
When I was a little girl
என்ற அந்தப் பாடல் காதில் விழுந்த உடனே எனக்கு நினைவில் வந்தது
சின்னப் பெண்ணான போதிலே
என்ற பழைய தமிழ்
திரைப்பாடல்
பாடலைக் கேட்ட எனக்கு சற்று வியப்பு
பொதுவாக பிறமொழி இசையைத் தழுவிய பாடல்கள் கேட்டிருக்கிறேன்
ஆனால் இந்தப் பாடலில்
இசை சொல் பொருள் காட்சி அமைப்பு உடை எல்லாமே ஆங்கிலப் பாடலின் தழுவலாக இருக்கிறது
ஆங்கிலப்படம் வெளியாகி ஓராண்டு கழித்து தமிழ்படம் வந்திருக்கிறது
பாடல்களைக் கேட்டு கண்டு மகிழுங்கள்
பாடல்கள் தனித்தனி பதிவாக
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
06112021 சனி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment