--------அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்;_____
இந்த வரிகள் வரும் திருமறை வசனம் எது?
விடை
வசனம்
27:34
சூரா அன்நம்ல் (எறும்பு)
அவள் கூறினாள்; "அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்; அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்.
அரசனாக இருந்த நபி சுலைமானின் நீண்ட வரலாற்றை முன்பே பதிவு செய்திருக்கிறேன்
வசனம் பற்றி சிறு விளக்கம்
சபா சமூகத்தினர் ஏக இறைவனையே வணங்க வேண்டும் என அந்த சமூகத்தின் அரசிக்கு சுலைமான் நபி செய்தி அனுப்புகிறார்
இது பற்றி தன் உதவியாளர்களிடம் கலந்தாலோசனை செய்கிறார் அரசி
சுலைமான் நபியை எதிர்த்துப் போரிடும் ஆற்றலும் படை பலமும் நம்மிடம் இருக்கிறது
ஆனால் அரசிதான் இதில் முடிவு எடுக்க வேண்டும் என உதவியாளர்கள் சொல்ல படையெடுப்பின் தீய விளைவுகள் பற்றி அரசி சொல்வதாக இந்த வசனம் வருகிறது
சூரா 27 வசனம் 15 முதல் 44 வரை நபி சுலைமான் பற்றிய செய்திகளைச் சொல்கிறது
அதில் வசனம் 20 முதல் சபா பற்றி வருகிறது
(Solomon and Sheba)
சரியான விடை அனுப்பிய சகோ
ஹசன் அலி(முதல் சரியான விடை)
பீர் ராஜாவுக்கு
வாழ்த்துகள் பாராட்டுகள்
முயற்சித்த முனைவர் பாஷாவுக்கு நன்றி
இறைவன் நாடினால்
மீண்டும் சிந்திப்போம்.
12112021வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment