Tuesday, 30 November 2021

தமிழ் - கரங்கு

 “கரங்கு “

பொருள் என்ன ?
விடை (சற்று விரிவாக)
காலச் சக்கரத்தில் ஒரு பின்னோக்கிப் பயணம் – அப்படியே ஐம்பது ஆண்டுகளுக்குமேல் பின்னால் போய் பட்டப்படிப்பு முதல் ஆண்டு –தமிழ் நாடகவியல் நூல் மனோன்மனிய வரிகள் சில நினைவில் வந்தன
“காலம் என்பது கரங்கு போல் சுழன்று மேலது கீழாய் கீழது மேலாய் மாற்றிடுமே “
என்று படித்த நினைவு
இதில் கரங்கு – ற- வா ர- வா என்ற ஒரு குழப்பம் .
தெளிவு பெற இணையத்தில் தேடினால் அதில் இரண்டுமே இருந்தன
பக்கம்:மனோன்மணீயம்.pdf/35
Jump to navigationJump to search
காலம் என்பது கரங்கு
போற் சுழன்று 95. மேலது கீழாக் கீழது மேலா மாற்றிடுந் தோற்ற மென்பது மறந்தனை
பக்கம்:மனோன்மணீயம்.pdf/351
Jump to navigationJump to search
காலம் என்பது கறங்கு
போற் சுழன்று 95. மேலது கீழாக் கீழது மேலா மாற்றிடுந் தோற்ற மென்பது மறந்தனை
எனவே இரண்டுக்கும் பொருள் சொன்னது எல்லாம் சரியான விடையாக எடுத்துக் கொண்டேன்
கல்லூரியில் சொன்ன பொருள்
சக்கரம் என்பது .சுழலும்போது மேலே உள்ளது கீழேயும் கீழே உள்ளது மேலேயும் போகும் என்பதற்கு சக்கரம் மிகவும் பொருத்தமாக இருக்கிறது
ஆனால் இப்போது அந்தச் சொல்லுக்கு காற்றாடி , ஒலி ,சுழலுதல் , சூழ்தல்,பம்பரம் என பல பொருள்கள் இணையத்தில் வருகின்றன , அவை அனைத்தும் சரி என்று எடுத்துக்கொண்டேன்
சரியான விடை எழுதி வாழ்த்தும் பாராட்டுகளும் பெறுவோர்
சகோ
பாப்டி , இதயத் அஷ்ரப் ஹமீதா
ஹசன் அலி, ராஜாத்தி , ரவிராஜ்(முதல் சரியான விடை)
ஆராமதி ,
ஜபருல்லா கான் (ஊர் சுற்றி – குமரி வட்டார பேச்சு வழக்கு )
சகோ வேலு _ குரங்கு கனவில் வந்தால் என்று விடை சொல்லியிருக்கிறார் . எனக்கு அப்படி ஓன்று கண்ணில் படவில்லை . அவர் அந்தத் தொடர்பை (லின்க்) அனுப்பினால் நானும் தெரிந்து கொள்வேன்
சகோ கரம் கம்பனில் பல இடங்களில் கரங்கு /கறங்கு வருவதை எடுத்துக் காட்டியிருக்கிறார் . ஆனால் சரியான பொருள் சொல்லவில்லை
இவர்கள் ஆர்வத்துக்கும் முயற்சிக்கும் மிக்க நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௦௧௧௨௨௦௨௧ புதன்
01122021
சர்புதீன் பீ
May be an image of text that says "தமிழ்"
Like
Comment
Share

No comments:

Post a Comment