Thursday, 18 November 2021

குரான் 27:62


 "துயரங்களுக்கு ஆளானோர் இறைஞ்சும்போது _____ துயரத்தைக களைபவன் யார்?

 __________"


இது எந்த குரான் வசனத்தில் வருகிறது?


விடையும் விளக்கமும்


சூரா அன்நம்ல்  (எறும்பு) வசனம் 62


ا

 துயரங்களுக்கு ஆளானவர் இறைஞ்சும்போது அவருடைய இறைஞ்சுதலைக் கேட்டு பதிலளிப்பவன் யார்? மேலும், அவருடைய துயரத்தைக் களைபவன் யார்? மேலும், உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாய் ஆக்குகிறவன் யார்? ஏக இறைவனைத் தவிர வேறு எந்த ஒரு கடவுளேனும் (இப்பணிகளைச் செய்யக்கூடியதாய்) உள்ளதா? நீங்கள் மிகக் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள்!

( 27:62)


பிரதிநிதிகளாய்

ஏன்ற சொல்லுக்கு இரண்டு விளக்கங்கள் சொல்கிறார்கள்

மார்க்க அறிஞர்கள்


ஒன்று 

தலைமுறைக்குப் பின் தலைமுறையாய் மனித குலத்தைப் படைத்தல் 


அடுத்தது

இறைவன் மனிதனைப் படைத்தது வெறும் வேடிக்கை விளையாட்டுக்காக அல்ல;

ஒரு சிறந்த நோக்கத்திற்காக மனிதனை ஒரு உன்னதமான படைப்பாக்க இறைவன் படைத்திருக்கிறான் 

என்பதை வலியுறுத்தும் நோக்கில்

மனித குலத்தை இறைவனின் பிரதிநிதியாக இந்த உலகை ஆளப் படைத்திருக்கிறான்

என்பது


சரியான விடை அனுப்பிய

சகோ

பீர்ராஜா(முதல் சரியான விடை)

ஹசன் அலி

இருவருக்கும். வாழ்த்துகள் பாராட்டுகள்


முயற்சித்த

சகோ

சர்மதாவுக்கு

நன்றி


இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்


19112021வெள்ளி

சர்புதீன் பீ



No comments:

Post a Comment