பாலச் சந்தர் படம் வ்.நி .சிவப்பில் ஒரு காட்சி
பசியின் கொடுமை தாங்க முடியாத கமல் கழிவு நீருக்குள் கிடக்கும் ஒரு பழத்தை எடுத்து கழுவி விட்டு சாப்பிடுவார்
தண்ணீர் தண்ணீர் படம்
தாகம் பொறுக்க முடியாமல் கழிவு நீரைக் குடிப்பது போல் ஒரு காட்சி
ஐம்பதுக்கு மேற்பட்ட துறவிகள் இருக்கிறார்கள்
நல்ல ,தலைமைத் துறவியைக் கொண்ட ஒரு ஒழுக்கமான மடம்
துறவிகள் வயது இருபதிலிருந்து ஐம்பது வரை
சமையல், பாத்திரம் கழுவுதல், துப்புரவுப்பணி எல்லாம் துறவிகளே முறை வைத்து செய்து வந்தார்கள்
நாளாக நாளாக துறவிகள் எண்ணிக்கையும் அதற்கேற்ப வேலைப்பளுவும் கூடிக்கொண்டே போனது
எனவே சில பணியாட்களை அமர்த்துவது என முடிவு செய்ய,
பணிப்பெண்களை நியமிக்கலாம் என ஒரு கருத்து சிலரிடமிருந்து வருகிறது
தலைவர் அதை உடனடியாக புறந்தள்ளி விட்டு
“இத்தனை ஆண்கள் இருக்கும் இடத்தில் சில பெண்கள் இருந்தால் அவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை உங்களுக்கும் இல்லை என்கிறார்
.“துரவிகாளாகிய எங்களை நீங்கள் நம்பவில்லையா ?: என்ற வினா ஏழ
“உங்களை என்ன , என்னையே நம்ப முடியாது “ என மனித மனத்தின் உண்மை நிலையை உரைக்கிறார் தலைவர் .
“சரி ,இளம் பெண்கள் வேண்டாம் , சற்று வயதான பெண்களை பணிக்கு அமர்த்தலாமே “ என ஒரு கருத்து
“இதற்கு விடை, விளக்கம் நாளை சொல்கிறேன் “ என்கிறார் தலைவர்
அடுத்த நாள் மாலை மடத்தின் முற்றத்தில் ஒரு பெரிய அண்டா வைத்து அதில் நீர் நிறப்பி எல்லோருக்கும் தெரியும்படி பசுவின் சாணம் போட்டு கரைத்து வைக்கச் செய்கிறார் தலைவர்
உணவு சமைக்கும் துறவியிடம் இரவு உணவில் உப்பும் காரமும் மிக அதிகமாகச் சேர்க்கச் சொல்கிறார் தலைவர்
அதோடு, உணவுக்குப்பின் யாருக்கும் குடிக்கத் தண்ணீர் கொடுக்க வேண்டாம் என்றும் சொல்லிவிடுகிறார்
சாப்பிட்டு முடித்த துறவிகளுக்கு கண்ணிலும் நாக்கிலும் நீர் .
தண்ணீர் குழாய், கிணறு,தொட்டி என எல்லாம் தலைவர் சொல்படி போக வழியின்றி அடைக்கப்பட்டு விட்டன
முற்றத்தில் அண்டாவில் தண்ணீர் இருப்பது எல்லோருக்கும் தெரியும் . ஆனால் அதைக் குடிக்க இயல்பான தயக்கம்
நேரம் செல்லச் செல்ல உப்பு உறைப்பின் தாக்கம் பொறுக்க முடியாமல் ஒரு துறவி தன்னை மீறி முற்றத்துக்குப் போகிறார் .
இரவின் இருட்டில் யாருக்குத் தெரியப் போகிறது என்ற நினைப்பில் அண்டாத் தண்ணீரை குடிக்கிறார்
இப்படி ஒருவர் பின் ஒருவராக வந்து குடிக்க , அண்டா காலியாகி விடுகிறது
மறுநாள் ஒரு கேலிப்புன்னகையுடன் தலைவர் துறவிகளிடம் சொல்கிறார்
“ அண்டாவில் இருந்தது என்ன தண்ணீர் என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்
இருந்தும் தாகம் மேலிடும்போது நம் கட்டுப்பாடு தளர்ந்த உடைந்து விடுகிறது
இதுதான் நேற்று சிலர் கேட்டதற்கு விடை” என்று சொல்கிறார்
அடுத்து எப்போதோ படித்து மினைவில் நிற்பது
காந்திஅடிகள் ஒரு பெரியகுழுவோடு பயணிக்கிறார்
இரவு ஒரு திறந்த வெளியில் தங்க வேண்டிய ஒரு சூழ்நிலை
பெண்களைத் தனியாக பாதுகாப்பாக வைக்க இடமில்லை
அப்போது காந்தி அடிகள் பெண்கள் அனைவருக்கும் தலை முடியைக் களைந்து விடுமாறு சொல்கிறார்
காந்தியடிகள் செய்தது சரியா என்ற விவாதத்க்கு நான் வரவில்லை
பெண்களின் தலை முடி பாலுணர்வைத் தூண்டும் ஓன்று என்பது காந்தியின் கருத்து
இரண்டு திரைப்படக் காட்சிகள், ஒரு சிறு கதை நிகழ்வு ஓன்று
எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதது போல் இருந்தாலும் இந்த நான்கையும் இணைக்கும் ஒரு இழை ,- சில உண்மைகள் இருக்கின்றன
பசி, தாகம் போல மோகமும் (காமம் என்று சொன்னால் சிலர் புருவம் உயரும் –என்ன இவ்வளவு அசிங்கமாக எழுதுகிறான் என்று ) கட்டுப்படுத்த முடியாத ஓன்று
ஆணும் பெண்ணும் சேர்ந்து ஓரிடத்தில் இருப்பது தவறுக்கு வழி வகுக்கலாம்
என்ன உடை எனபது முக்கியமல்ல . மறைக்க
வேண்டியவை அனைத்தும் முழுமையாக மறைக்கபட்டு கண்ணியம் மிக்க உடையாக இருப்பது அவசியம்
தலை முடியும் முழுமையாக மறைக்க வேண்டிய ஓன்று
புனித ஹஜ்ஜுப்பயணத்தில் பார்த்தால் இந்தோ நேசியப் பெண்கள் ஒரே மாதிரி கால்சட்டை (pants) போட்டிருப்பார்கள் ,
ஆப்ரிக்க பெண்கள் பலர் இரவு உடை (nighty) போன்ற நீண்ட உடையில் வருவார்கள்
மறைக்க வேண்டியவை எல்லாம் ஒழுங்காக மறைக்கப்ப்ட்டிருந்தால் என்ன உடை என்பது பிரச்சினை இல்லை
இது ஆண்களுக்கம் பொருந்தும் .உள்ளாடை தெரியும் வேட்டிக்கு அங்கே அனுமதி இல்லை
மனதில் தோன்றிய எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டேன்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
28052022சனிக்கிழமை
சர்புதீன் பீ