தமிழ் (மொழி)அறிவோம்
மரபு வழுவமைதி
“கத்தும் குயிலோசை “
பாரதியார் பாடல் வரி
ஆயிரம் நிலவே வா “ SPB யின் ஆரம்ப கால தமிழ்ப் படப்பாட்டு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே “
மிகப்பரவலாக அறியப்பட்ட ஆட்டோகிராப் படப் பாடல்
இந்த மூன்றிற்கும் பொதுவாக இருப்பது என்ன?
(முன் குறிப்பு – தமிழ் இலக்கணம் என்பது என் மாணவப் பருவத்தில் எட்டிக்காய், எட்டாக்கனி
இப்போதுதான் வெகு சில இலக்கண நுட்பங்கள் புரிகின்றன
எல்லாம் அவன் செயல் )
விடை
வழுவமைதி , மரபு வழுவமைதி
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறும் தமிழ் அறிஞர்கள்
இதயத் – முதல் சரியான விடை
ஹசன் அலி
அஷ்ரப் ஹமீதா
முயற்சித்த ராஜா பகதூர் கானுக்கு நப்ற்றி
குயில் கூவும் என்பது மரபு
அந்த மரபில் இருந்து வழுவி கத்தும் என்கிறார் கவிஞர்
இதை இலக்கணப் பிழை என்று சொல்வதில்லை
கவிதை நயம் ஓசை நயம் கருதி இந்த வழு , வழாநிலையாக , இலக்கணப் பிழை இல்லாதது போல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது
இது கவிஞர்களுக்கு உள்ள ஒரு உரிமை – Poetic License
ஆயிரம் நிலவே வா – பன்மை ஒருமையாகிவிட்டது
ஒவ்வொரு பூக்களுமே – ஒருமை பன்மையாகி விட்டது
பெண் குழந்தையை” வாடா செல்லமே” என்றும்
ஆண் குழந்தையை “ வாடி கண்ணே “ என்றும்
அழைப்பது பேச்சு வழக்கில் எளிய எடுத்துக் காட்டு
“அன்புடன் மனைவி கணவனை அழைப்பாள்
அம்மா அம்மா அம்மா
ஆசையில் கணவன் மனைவியை அழைப்பான்
ஐயா ஐயா ஐயா “
இது திரைப்பாடல்
திணை வழுவமைதி ,பால் வழுவமைதி
இடவழுவமைதி காலவழுவமைதி ,மரபு வழுவமைதி என வழுவமைதி ஐந்து வகைப்படும்
இதற்கு மேல் விளக்கினால் இலக்கண வகுப்பு போலாகிவிடும்
எனவே இத்துடன் நிறைவு செய்கிறேன்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௦௧ ௦௬ ௨௦௨௨
01062022புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment