கதை சொல்லும் குரான்
நிறைவுரை
நன்றி நன்றி நன்றி
இறைவனுக்கு நன்றி
புனித ரமலான் மாதத்தின் 30 நாட்களும்
கதை சொல்லும் குரான் என்ற தலைப்பில் பதிவு செய்தேன்
முதலில் இறங்கிய மறை வசனம்
“ஓதுவீராக “ வில் தொடங்கி
“இன்று உங்கள் மார்க்கத்தை நிறைவு செய்து விட்டேன் “
என்ற நிறைவு வசனத் தோடு
தொடரை நிறைவு செய்தேன்
உடல் நலம், மன நலம் ,
படித்து சிந்தித்து மொழி மாற்றம் செய்து எழுதும் திறன்
தடை இல்லா மின்சாரம் , இணையம் ,,
தடங்கல் செய்யாத மடிக்கணினி , கைப்பேசி
எல்லாம் குறையின்றி அருளி
எடுத்த பணியை இனிதே நிறைவேற்றிக் கொடுத்த
எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி
கருத்துகள்
இது போன்ற சிரமப்பட்டு எழுதும் பதிவுகளுக்கு பெரிய அளவில் பாராட்டுகள், கருத்துகள் வராது என்பது நான் பலமுறை அனுபவத்தில் உணர்ந்த உண்மை
அதனால்தான்
“யாருமே இல்லாத கடையில் யாருக்கப்பா டீ ஆற்றுகிறாய் “
என்று சகோ சாகுல் பகடி செய்ததை நான் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை
அவருக்கு என் ம்=நன்றி
Copy, paste, forward இதெல்லாம் இல்லாமல் சுயமாக எழுதுவதன் சிரமம் எழுதிப் பார்த்தவர்களுக்கு புரியும்
ஒரு பதிவைப் படிக்க 15, 25 நிமிடங்கள் ஆகலாம்
அதே பதிவை சிந்தித்து ஒரு ஜூஸு வை மேலோட்டமாகப் படித்து
அதில் ஒரு சுராஹ் , சுராவில் ஒன்றிரண்டு வசனங்கள் தேர்வு செய்து , அதைப்பற்றி எழுதி, பொருத்தமான தலைப்பு படம் எல்லாம் தெரிவு செய்து கணினியில் தட்டி, சரி பார்த்து பதிவு செய்ய குறைந்தது 4 மணி நேரம் தேவைப்படுகிறது
அந்த அளவுக்கு நேரத்தை அருளிய இறைவனுக்கு மீண்டும் நன்றி
தினமும் கருத்துத் தெரிவித்த சகோ ஜோதிக்கு நன்றி
எப்போதாவது கருத்துத் தெரிவித்த சகோ சிராஜுதீன் மெஹராஜ் ,கிரசன்ட் ஷேக் , அஷ்ரப் ஹமீதா , ஷிரீன் பாருக் ,பர்சானாவுக்கு நன்றி
தொடர்ந்து படிப்பதோடு தன் நண்பர்கள் பலருக்கும் என் பதிவை பகிர்வதாகவும் , நண்பர்களும் பாராட்டியதாகவும் தெரிவித்த
சகோ கரம், முருகேசன் , தல்லத்துக்கு நன்றி
அல் மாயிதா (உணவுத் தட்டுகள் ) விருந்து பற்றிக் கருத்துத் தெரிவித்த
சகோ சோம சேகருக்கு நன்றி
தினமும் ஊக்குவித்த சகோ ரவிராஜ், செல்வகுமாருக்கு நன்றி
சிறு எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டிய சகோ ஹசன் அலி
கருத்து மாறுபாட்டை சுட்டிக்காட்டிய சகோ நௌஷாத்துக்கு நன்றி
படித்தவர்கள் அனைவருக்கும் நன்றி
(பெயர்களில் விடுதல் இருந்தால் please excuse me )
இதையெல்லாம் பெருமைக்காக எடுத்துச் சொல்லவில்லை
என் கடை டீ பலருக்கும் பயன் பட்டிருக்கிறது என்பதை அறிவிக்கவே
இதற்கெல்லாம் மேல் நான் அடைந்த பயன்
இந்த புனித மாதம் முழுதும் குரானோடு ,குரானுக்குள்ளேயே இருந்தது போன்ற ஒரு பிரமை
பல முறை தமிழ், ஆங்கிலக் குரானை படித்திருக்றேன்
அப்படியும் பல புதிய செய்திகளை அறிந்து பகிர்ந்து கொள்ள வாய்ய்பு அளித்த இறைவனுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது
மீண்டும் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்
ஒரு சிறிய இளைப்பாரளுக்குப்பின் ,இறைவன் நாடினால் வழக்கமான பதிவுகள் தொடரும்
02052022 திங்கள்
சர்புதீன் பீ
[9:00 AM, 5/2/2022] CB Somaseker: ஐயா,
"கதை சொல்லும் குரான் "
என்ற தலைப்பில் ரமலான் மாதம் முழுவதும் தினம் ஒரு கருத்துச் செறிவு கொண்ட கதையை, வாழ்வு நெறியை வகுத்துச் சொல்லும் குரானின் காதையை சாமான்யர்களும் படித்து ரசிக்கும் வண்ணம் தங்களின் இயல்பான எழுத்தாற்றல் துணையோடு, சுயமான கதை சொல்லும் நடையோடு எழுதிய விதம் மிகவும் அருமை.
நான்கு வரிகள் எழுதுவதற்கே நாள் முழுதும் சிந்திக்க வேண்டிய நிலையில் நாள்தோறும் நல்ல தமிழ்க் கதைகள் எழுதுவது பிரதி மாதம் பிரசவிப்பதைப் போன்ற சிரமமான வேலை.
இறை ஈடுபாடும், இளைப்பாறா கோட்பாடும் இல்லாதவர்களால் இந்த முயற்சியை முன்னெடுத்திருக்க முடியாது.
தினமும் படித்தாலும் காலை தோறும் கருத்து தெரிவிக்க முடியாமல் போனதால் கதைகளில் விதைகள் இல்லை என்பதல்ல. கதைகளில் இருந்த விதைகள் விருட்சமாக மனதில் வளர்வதை நாங்கள் வியந்து பார்த்துக் கொண்டிருந்தோம் என்பதே உண்மை.
குரான் தழுவிய கதைகள் என்பதால் சொல்லும் கருத்து எங்கே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விடுமோ என்று சிலர் தயங்கியிருக்கலாம். குரான் படிக்காத பலர் (நான் உட்பட) குழுவில் இருப்பதால் தெரியாத விடயத்தில் அறியாமல் கருத்து சொல்ல வேண்டாம் என சிலர் அமைதி காத்திருக்கலாம். ஆனால் அனைவருமே படித்திருப்பார்கள், பயனடைந்திருப்பார்கள் என்பதே உண்மை.
கடல் சேரப் பாயும் நதி
கழனி பாய்ந்த தறியாது
உடல் மறைக்க உடுத்தும் உடை
ஊர் பார்க்கும் தெரியாது
அருநெல்லிப் பழம் பழுத்தால்
அணில் உண்ணும் தவறேது
கருத்துள்ள நின் கதைகள்
கனகமணிச் சரத் தூது
நதியைப் போல
நல்ல கனி மரத்தைப் போல
மதியைப் போல
நாளும் உதிக்கும் சோதியாக
தொடரட்டும் தங்கள் தமிழ்ப் பணி
தொடர்ந்து வரும் நண்பர்களின்
துய்க்கும் அணி
நன்றியுடன்
சோமசேகர்
[9:06 AM, 5/2/2022] CB Hasanali: மனசுக்கு நிறைவான பல உரைகளும் நிறைவுரையும். மனிதர்கள் எண்ணத்தில் என்றென்றும் நிறுத்திக்கொள்ள வேண்டிய இறைமறை வசனங்கள் மிக எளிய நடையில். எல்லாப்புகழும் இறைவனுக்கே.
[9:07 AM, 5/2/2022] CB Hasanali: 👌👌💐💐
கதைகள் அனைத்தும் தங்கள் சொந்த நடையில் எளிமையாக அருமைganesa subramaniyan
மாதம் முழுவதும்
விரதம் இருந்து
மாச்சர்யம் நிந்தனை
அறவே துறந்து
வாதம் வம்பு
வழக்குகள் மறந்து
வாழ்வாய் அல்லா
தனையே நினைந்து
குர்ரான் போதனை
குருதியில் கலந்து
குதர்க்கங்கள் தவிர்த்திடும்
குலநெறி உணர்ந்து
எல்லாப் புகழும்
இறைவனுக்களித்து
ஈகையின் பெருமையை
இகத்திற்குரைத்து
உளவுடல் ஒழுக்கம்
உயர்வென மகிழ்ந்து
உலகுயிர் ஒன்றெனும்
உண்மையை அறிந்து
அளவிடா முடியா
அன்பின் உருவாய்
அசைத்திட இசையா
அல்லா நினைப்பாய்
ரம்ஜான் தொழுகையை
ரம்மியமாக
இந்நாள் காத்திடும்
என் உடன் பிறப்பே
உன்னால் முடியும்
என்பதை உணர்த்த
இந்நாள் படைத்த சல்
இறைவனைப் போற்றி
சொன்னேன் வாழ்த்து
சொந்தங்கள் வாழ்க
சுபிட்சங்கள் வாய்க்கும்
சொர்க்கத்தைப் போல
மகிழ்வுடன்
சோமசேகர்
. "ஓதுவீராக" வில்
தொடங்கி, " இன்று உங்கள் மார்க்கத்தை
நிறைவு செய்தேன்"
என்ற நிறைவு வசனத்தோடு
குரான் கதைகளை
நிறைவு செய்ததும்
ஆண்டவனின் நல் அருளே..
தொடர் சிறப்பாக
இருந்தது.
இன்ஷாஅல்லாஹ்
வேறு வடிவில் இனி
இந்திக்க சந்திப்போம்.
ஆமீன்.jothy
[6:00 AM, 5/2/2022] Meharaj 2: அல்ஹம்துலில்லாஹ்
[6:00 AM, 5/2/2022] Meharaj 2: அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
[6:11 AM, 5/2/2022] Meharaj 2: ஷர்புதீன்! குரான் நிறைவுப்பகுதியோடு உன் கதை சொல்லும் குரான் நிறைவடைந்தது மிகவும் அருமை.மிக கடினமான முயற்சியோடு,மன ஓர்மையோடு செய்த உன் செயலுக்கு மனமார்ந்த நன்றி, வாழ்த்துக்கள், மகிழ்ச்சி.எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லோருக்கும் எல்லா நலன்களும் அருள துஆ செய்வோம்.அல்ஹம்துலில்லாஹ்.meharaj
Dear Comrade Sherfuddin, I thank you for your tea which blends not only sugar but also gives valuable information from Quaran.murugesan mdu
[5:59 AM, 5/3/2022] Sherfuddin: What information?
[6:05 AM, 5/3/2022] Shamim Zafar Muthu: கதை சொல்லும் குர்ஆன்shameem
தினமும் இறை வசனங்களை, துவாக்களை தெரிந்தெடுத்து Copy , paste, forward செய்யும் என்னைப் போன்றவர்களுக்கே அந்த வலி இருக்கும் போது, கடலையே பல முறை மையாக கொண்டு இறைவனுடைய வார்த்தைகளை எழுதினாலும், கடல் நீரே வற்றும் , ஆனால், வற்றாத இறைவசன ஊற்றுக்களை அதன் பொருள் பிறழாமல் சிந்தித்து எழுதும் தங்கள் வலி புரிதலுக்கும் பாராட்டுக்கும்
உரியதே ..... எல்லாம் வல்ல இறைவன் அனைத்து நல்ல எண்ணங்களையும் , நல்ல உள்ளங்களையும், ஏற்றுக் கொண்டு நல்லருள் புரிவானாக ...crescent shake
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணன்.
நிறைவுப் பகுதி நெகிழ வைத்தது.
ஒவவொரு வார்த்தையும் உணர்வு பூர்வமாக.
ஏக இறை முதல் தடையில்லா மின்சாரம் வரை நன்றி சொன்ன விதம் சில நிமிடம் கண் கலங்க வைத்தது.
இந்த தொகுப்பு சாதாரண விஷயம் அல்ல என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும்.
என்னால் எல்லாம் நினைக்கூடமுடியாது.
எதுவும் தெரியாது.
ராஜா ஏன் அப்படி ப் போட்டார் என்று தெரியவில்லை.
அவரும் எல்லாம் அறிந்தவர் தானே.
பரவாயில்லை.
உங்கள் எழுதும் திறனும்,பணியும் ,உடல் ஆரோக்கியமும் சிறக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவாராக👍🏽👍🏽👌👌😊
பசி அறிய நோன்பிருந்தோம்.
பசியாற உணவளித்தோம்.
தனம் கொடுத்து
தானம் கொடுக்கும் மனம் கொடுத்த ஏக இறைவனுக்கே எல்லா நன்றியும்.
எல்லோருக்கும் இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்.
உங்கள் மனம் சற்று சோர்வாகத்தான் இருக்கும்.
எதுவும் மாறப்போவதில்லை.
அல்லா போதுமானவன்.💐💐surj
ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்...🤲
கதை சொல்லும் குரான் பதிவு மிக மிக நன்றாக இருப்பதால் அதை நோன்பு நோற்ற நேரங்களில் படித்ததோடு மறுபடியும் மறுபடியும் படித்து அறிந்து கொள்வதற்காகவும் நண்பர்களுக்கு அனுப்புவதற்காகவும் நினைத்து அழிக்காமல் வைத்துள்ளேன்.மிகவும்
அருமையான பதிவாக இருந்தது. மிக்க மகிழ்ச்சி .தங்களுடைய
இந்த முயற்சி சிறப்புமிக்கதாக இருந்தது .எல்லாம்வல்ல
அல்லாஹ் தங்களுக்கு எல்லா நலன்களையும் பெறும் அருள்புரிவானாக...ஆமீன்
ayub sharmadaa
No comments:
Post a Comment