Tuesday, 24 May 2022

தமிழ் (மொழி) அறிவோம் –கர்த்தபம் –கழுதை

 தமிழ் (மொழி) அறிவோம்

–கர்த்தபம் –கழுதை
கர்த்தபம்
பொருள் ஏன்ன?
மிக எளிதான வினா
விடை
கழுதை
சரியான விடை அனுப்பி வாழ்த்து, பாராட்டுப் பெறும் அறிஞர்கள்
சகோ
சோமசேகர் – முதல் சரியான விடை
ராஜாத்தி , ஹசன் அலி
கணேச சுப்ரமணியம் , கீதா
ஷர்மதா , ராஜா சுப்பிரமணியம்
எளிய வினா ,எளிய விடை
இதன் பின்னணியில் பல சுவையான தகவல்கள்
பெரும்பாலும் பிறரைகுறை சொல்ல கழுதை என்ற சொல் பயன்படுகிறது
கண்நெறஞ்ச பொண்ண கழுதன்னு சொன்னாங்க
ஏன்னு கேட்டா எட்டி எட்டி ஓதஞ்சாங்க “ பழைய படப் பாடல்
கழுத கெட்டா குட்டிச் சுவர்
ஏழரைக் கழுதை வயசாச்சு
இப்படிப்பல சொல்வழக்குகள்
இந்தகேலி கிண்டல் எல்லாவற்றயும் தகர்த்து எறியும் ஒரு செய்தி
ஒரு லிட்டர் கழுதைப்பாலின் விலை
ரு 7000/
ஏழாயிரம் ரூபாய்
விலை உயர்ந்த மாட்டுப்பாலைப்போல் நூறு பங்கு
தமிழ் நாட்டின் முதல் கழுதைப்பால் பண்ணையை நெல்லை மாவடத்தில் ஒரு இளைஞர் துவக்கியிருக்கிறார்
அவர் சொல்கிறார்
பெங்களூரில் உள்ள ஒரு அழகுபொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு மாதம் ஆயிரம் லிட்டர் க. . பால் தேவைப்படுகிறது
மனைவி, குடும்பம் எனபலரின் எதிர்ப்பையும் கேலி, கிண்டலையும் புறந்தள்ளி விட்டு 17 ஏக்கரில் 100 கழுதைகளுடன் பண்ணையை நடத்துகிறார்
ஒரு கழுதை விலை , கொடுக்கும் பாலின் அளவுக்கு ஏற்ப
நாற்பது ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை
கழுதைப்பாலில் செய்யப்படும் ஒரு சோப்பின் விலை நம் நாட்டில் எண்ணூறு .
அமெரிக்காவில் 1300/
உலக அழகி கிளியோபாட்ரா கழுதைப் பாலில் குளித்து தன் மேனி வனப்பை பாதுகாத்தாரம்
கழுதை பற்றி இன்னொரு சொல்வழக்கு
“அழுத பிள்ளை சிரித்தாம் கழுதைப்பாலைக் குடித்ததாம் “
கழுதைப்பால் மிக சிறப்பான மருத்துவ குணம் உடையது . எனவே அதைக் குடித்த பிள்ளை நோய் நீங்கி சிரிக்கும் என்றொரு விளக்கம் இதற்கு
இப்படி பொதி சுமப்பது தவிர பல வகையிலும், பெரும் பயன் அளிக்கும் கழுதையை யாரும் பெரிதாக விரும்புவதில்லை .
அது ஏன்?
இதற்கு விடை சொல்கிறது நீதி வெண்பா
:மென்மதுர வாக்கால் விரும்பும் சகம் கடின
வன்மொழியினால் இகழும் மண்ணுலகம் – நன் மொழியை
ஒதுகுயிலேதங்குதவியது கர்த்தபந்தான்
ஏதுபராதஞ் செய்ததின்று”
பொருள்
குயில் நமக்கு எதுவும் நன்மை செய்வதில்லை . இருந்காலும் அதன் இனிய குரலால் நாம் அதை விரும்புகிறோம்
கழுதை நமக்கு எந்தக் கெடுதலும் செய்வதில்லை .ஆனால் அதன் உரத்த கடூரமான குரலால் நாம் அதை வெறுக்கிறோம்
இனிய குரலில் பேசினால் உலகம் நம்மை விரும்பும்
இல்லையேல் வெறுக்கும்
(கர்த்தபந்தான்- + கர்த்தபம்+ தான்
கர்த்தபம் –கழுதை )
“ --------------குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும் -------------------------------------(குரான் 31:19)
நிறைவு செய்யுமுன்
ஒரு உறுத்தல்
“ஒரு சகோ “கலுதை “ என்று விடை அனுப்பியிருந்தார் .
தவறைச் சுட்டிக்காட்டியபோது இரண்டும் ஒன்றுதானே என்றார்
அவரைச் சொல்லிக் குற்றமில்லை
ல,, ள, ழ,
. ற,ர
ந , ன, ண
ஒவ்வொன்றின் வேறுபட்ட உச்சரிப்பு, பயன்பாடு எல்லாம் மறக்கப்பட்டு வருகின்றன
இதில் தொலைகாட்சியின் பங்கு மிகப் பெரியது
ஆங்கில உச்சரிப்பு மாறினால் தவறு என்கிறோம்
அரபு உச்சரிப்பு மாறினால் பொருளே மாறுகிறது என அஞ்சுகிறோம்
தாய் மொழி ?
இப்படியே போனால் எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் ஒரு ல் ,ஒரு ர ஒரு ன போதும் என்று ஒரு கருத்து வந்தாலும் வரலாம்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௨௫௦௫௨௦௨௨
25052022புதன்
சர்புதீன் பீ
May be an image of animal
Like
Comment
Share

No comments:

Post a Comment